Sunday, May 31, 2020

சோல்கர் என்ற ஒரு சாராரண பக்தரின் சங்கல்பமும்... அதை நிறைவேற்றிய பாபாவின் கருணையும்...




பாபாவின் புகழைப் பரப்பியவர்களில்... தாஸ்கணு என்ற கதா கீர்த்தனம் செய்யும்... பாபாவின் பக்தரின் சேவை மகத்தானது.

அவர் எப்போதும் மாலையணிவித்த... பாபாவின் திருவுருவப் படத்தை... தனது கதா கீர்த்தனத்திற்கு முன்... மேடையில் வைப்பது வழக்கம். அது போன்றதொரு, கதா கீர்த்தனம்... பம்பாய்ப் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள 'கௌபினீஸ்வரர் ஆலயத்தில்' ஒரு மாலை நேரம் நிகழ்ந்தது.

சோல்கர்... ஒரு சாதாரன குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பம்பாய் நகர நீதிமன்றத்தில்... தற்காலிக எழுத்தராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சோல்கரின் சொற்ப வருமானத்தில்தான் அவரது குடும்ப நிர்வாகமே நடந்து கொண்டிருந்தது. சோல்கர்,  வரப் போகும் குமாஸ்தா தேர்வுக்கான பரீட்சைக்காகக் காத்துக் கொண்டிருந்தார். அதில் அவர் வெற்றி பெற்றால்தான்... குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்டு... நிம்மதியான வாழ்வை அளிக்கமுடியும்... என்ற நிலையில்... எப்போதும் கௌபினீஸ்வரரை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அன்றைய தரிசன நேரத்தில்தான்... தாஸ்கணு அவர்களின் கதா கீர்த்தனத்தை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. கதா கீர்த்தனத்துடன்... பாபாவின் திருவுருப் படத்தையும் தரிசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது, அன்றைய கதாகாலாட்சேபமும்... சோல்கரின் எண்ணங்களுக்கு ஏற்ப பாபாவின் வரலாற்றைப் பற்றியதாக இருந்தது. பாபாவின் சரித்திரத்தைக் கேட்ட சோல்கர், மனதில் ஒரு சங்கல்பத்தை ஏற்றுக் கொண்டார். 

அது, 'பாபா, அடியவனின் குடும்பமோ... ஒரு ஏழைக் குடும்பம். அடியவனின் எதிர் காலமே... அந்த குமாஸ்தா வேலையில்தான் அடங்கியிருக்கிறது. அந்தப் பரீட்சையில் மட்டும் நான் தேறிவிட்டால்... நான் சீரடி வந்து... உங்களை தரிசனம் செய்து... தட்டு நிறைய கல்கண்டுகளை சமர்ப்பிக்கின்றேன். அதுவரை, எனக்குப் பிடித்த தேநீரை... சர்க்கரை இல்லாமல் எடுத்துக் கொள்வேன். பாபா எனக்கு அந்த குமாஸ்தா வேலையைப் பெற்றுக் கொடுங்கள்... !' என்பதுதான்.

சோல்கரின் சங்கல்பத்தை... பாபா வெகு விரைவில் நிறைவேற்றினார். பரீட்சையில் தேறி... வெற்றி பெற்று... குமாஸ்தா பதவியிலும் அமர்ந்து விட்டார். ஆனால், ஒரு ஏழை மனிதனின் பிரார்த்தனை நிறைவேற்றம் என்பது... 'ஒரு ஏழை மனிதன் அவனது வீட்டின் நிலைபடிக் கட்டை தாண்டுவது... போன்ற... மிகக் கடினமானதுதானே... !' ஆதலால், சர்க்கரைக்கான செலவைக் குறைத்து... கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமித்து... ஒரு நிறைந்த நாளில், கற்கண்டு மற்றும் பூஜைக்கு உறிய பொருட்களோடு... பாபாவை தரிசனம் செய்ய வந்தார்.

பாபாவை தரிசனம் செய்து... பூஜைக்கான பொருட்களோடு... தட்டு நிறைந்த கற்கண்டுகளையும் சமர்ப்பித்தார். பூஜையைப் பூர்த்தி செய்து... பாபாவின் பாதங்களில் நமஸ்காரம் தெரிவித்து...  கை நிறைய கற்கண்டுகளை அள்ளி பாபாவின் கைகளில் சமர்ப்பித்தார். புன்னைகையோடு அந்தக் கற்கண்டுகளை ஏற்றுக் கொண்ட பாபா, இந்த தரிசனத்திற்கு உதவிய சீரடியைச் சேர்ந்த ஜோக் என்ற பாபாவின் அத்யந்த பக்தரிடம், ' பாவூ, அவரை அழைத்துச் சென்று, அவருக்குப் பூரிதமாக... நிறைந்த சர்க்கரையுடன் கூடிய... தேநீரைக் கொடு... !' என்றார்.

பாபாவின் குறிபுணர்த்திய சொற்களைக் கேட்டு, கண்களில் ஆனந்த பாஷ்யம் பொங்க சோல்கர் பேரானந்தத்தில் மூழ்கிப் போனார். ஏனெனில், அவரது சங்கல்பமோ, அவருக்கும் மட்டும் தெரிந்த ரகசியம். அதை அவர் யாரிடமும் வெளிப்படுத்தியதில்லை. ஆனால், இந்த மகனோ, அவரது உள்ளத்தின் ரகசியக் கதவுகளையெல்லாம் திறந்து... 'உனது சங்கல்பங்களையும்... உனது வாழ்வு நிலையையும்... நான் அறிவேன்... !' என்று உணர்த்திவிட்டார். சோலகர் வியந்து போனார்... 'என்னே இந்த அற்புத மகானின் அந்தர் ஞானம்... !'.

ஸாய்ராம்.


Saturday, May 30, 2020

உறங்காவில்லி தாசருக்கு, ஸ்ரீ ராமானுஜ ஆசார்யார் வழங்கிய கருணை மழை.




திருவரங்கனின் வீதி உலா. எருது... குதிரை... யானை... முரசுகள்... பதாகைகள்... ஒளி வீசும் பந்தங்கள்... அரையர்கள்... வேதம் ஓதும் பாவனர்கள்... கட்டியம் கூறுவோர்... என அனைவரும் வரிசையாகக் காத்திருக்க... அரங்கன் கோவிலிலிருந்து புறப்பட்டு... ஆலயத்தின் முகப்பு வாசலுக்கு வந்து சேர்ந்தார். எண்ணற்ற பக்தர்கள், ஆலயத்தின் வாயிலில் அரங்கனின் புறப்பாட்டுக்காகக் காத்திருந்தனர்.

ஸ்ரீ ராமானுஜர் அப்போதுதான் சிஷ்யர்கள் புடை சூழ... அரங்கனின் தரிசனத்திற்காக வந்து கொண்டிருந்தார். அரங்கனின் புறப்பாடும் ஆரம்பமானது. முரசுகள் ஒலிக்க... அரையர்களின் திவ்யப் பிரபந்த சேவையும்... வேதியர்களின் வேதமோதும் நாதமும்...காற்றின் வெளியை நிறைக்க... அரங்கன் பல்லக்கில் ஏறி... ராஜ நடையாக திருவீதி உலா வந்தார்.

அனைவரின் கண்களும் அரங்கனின் மீது இருக்க... ஒருவரின் கண்கள் மட்டும், தனக்கு அருகில் இருக்கும் ஒரு அழகிய பெண்ணின் கண்களிலேயே நிலைத்திருந்தது. அந்த நபர், அந்தப் பெண்ணின் மீது மாலை நேரத்து வெயில் கூட விழாதவாறு... குடையைப் பிடித்துக் கொண்டும்... அந்தப் பெண்ணுக்கு வியர்வை வீசா வண்ணம் விசிறி வீசிக்க் கொண்டும் இருந்தார்.

அவரின் செய்கையை நோக்கி... அனைவரின் கண்களும் திரும்ப... அது அரங்கனின் வீதி உலாவுக்கு ஒரு தடையாக இருப்பதைக் கண்ட ஆச்சார்யார்... ஒரு சிஷ்யனை விட்டு, அந்த நபரை அழைத்துவரச் சொன்னார். தன்னிடம் வந்து வணங்கி நின்றவனிடம், 'என்னப்பா... அனைவரும் பார்க்கும் படியாக... அந்தப் பெண்ணிடம் நீ அதீத சிரத்தையைக் காட்டுகிறாயே... அப்படியாக உன்னை ஈர்த்தது என்ன... ?' என்று கேட்டார். அதற்கு, 'சுவாமி... அந்தப் பெண்ணின் கண்களின் அழகில்... நான் மயங்கி விட்டேன். அது போன்ற அழகிய கண்களை நான் இதுவரை எங்கும் கண்டதில்லை...' என்றான்.

ஆச்சார்யார், ' சரியப்பா... அந்தக் கண்களை விட அழகிய கண்களை நான் உனக்குக் காட்டிவிட்டால்... நீ இந்த மோகத்திலிருந்து விடுபட்டு விடுவாயா... ?' என்று கேட்டார். 'சுவாமி... அப்படி ஒரு கண்கள் இருந்தால் எனக்குக் காட்டுங்கள் சுவாமி... ! அப்போது பார்க்கலாம்...' என்றான். 'நாளை காலை இங்கு வந்து விடு. நான் உனக்கு அந்தக் கண்களைக் காட்டுகிறேன்' என்றார் ராமானுஜர்.

அடுத்தநாள் காலையில், அந்த நபரை, அரங்கனின் தரிசனத்திற்காக அழைத்துச் சென்றார் ஆச்சார்யார். அரங்கனின் தரிசனத்தை பட்டாச்சார்யார்... தனது கையில் தீபத்தைத் தூண்டிவிட்டு... பாதம் முதல் கேசம் வரையிலும்... கைகளில் சங்கு... சக்கரம்... எனக் காட்டி... மெதுவாக தீபத்தை அரங்கனின் திருமுகத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். 

அங்கு என்ன நடந்தது என்பது... அரங்கனுக்கும் அந்த பக்தனுக்கும்தான் தெரியும். அரங்கப் பெருமானின் கண்களின் பேரொளியால் ஈர்க்கப்பட்ட பக்தன்... அன்று முதல் அரங்கனின் பக்தனாகவும்... ஆச்சார்யாரின் அத்யந்த சீடர்களிலும் ஒருவனாகவும்.. ஆனான்.. அந்த நிகழ்வை அந்தப் பெண்ணிடமும் கூற... அந்தப் பெண்ணும் அரங்கனின் தரிசனத்தையும்... ஆச்சார்யாரின் கருணை மழையிலும் நனைந்து... திருவரங்கத்திலேயே வந்து தங்கி... அரங்கனுக்கும், ஆச்சார்யருக்கும் சேவை செய்து வாழ்ந்தனர்.

அந்த பக்தர்தான்... உறங்காவில்லி தாஸர் என்ற பெருமகனார்.

ஸாய்ராம்.

Thursday, May 28, 2020

யுகங்கள் ஒவ்வொன்றிலும்... தர்மத்தின் நிலையிலிருந்து நழுவும் மாந்தர்கள்...



'கிருத யுகத்தில்'... வாழ்ந்த அனைவருமே தர்மத்தின் வழியேயான வாழ்வைத்தான் வாழ்ந்தனர். 'திரேதா யுகத்தில்'... 'மூன்றில் ஒருவர்' தர்மத்திலிருந்து விலகினர். 'துவாபர யுகத்தில்'... 'நான்கில் இருவர்' தர்மத்திலிருந்து விலகினர். தற்போது நடக்கும் 'கலியுகத்தில்'... 'நான்கில் மூவர்' தர்மத்திலிருந்து விலகுகிறார்கள்.

இதற்கு ஆதாரமான கதை... 'மஹாபாரதத்தில்' இருக்கிறது.

போரெல்லாம் முடிவுக்கு வந்து... பாண்டவர்கள் இராஜ்ஜியத்தில் அமர்ந்து... ராஜபரிபாலனம் செய்து கொண்டிருந்த நேரம். ராஜ்ய சபையில்... அரியாசனத்தில் தர்மர் வீற்றிருக்க... பகவான் கிருஷ்ணருடன் பஞ்சபாண்டவர்களும் சூழ இருந்த நேரம். 

அன்றைய நாளில் சபைக்கு ஒரு வழக்கு வந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் வந்திருந்தனர். வழக்கை தர்மர் விசாரித்தார். அதில், ஒருவர் தனக்குச் சொந்தமான ஒரு நிலத்தை மற்றொருவருக்கு விற்றிருந்தார். நிலத்தை வாங்கியவர் அந்த நிலத்தை உழும்போது... அதிலிருந்து 'ஒரு புதையல்' கிடைத்தது. 

அதை எடுத்துக் கொண்டு நிலத்தை விற்றவரிடம் சென்று, நிலத்தைதான் தான் வாங்கியதாகவும்... நிலத்திற்குள் இருக்கும் அந்தப் புதையல் தனக்குறியது அல்லவென்றும் கூறி... அந்தப் புதையலை விற்றவரிடமே கொடுத்தார். ஆனால், நிலத்தை விற்றவரோ... எப்போது நிலத்தை விற்றாரோ... அப்போதே அதிலுள்ள அனைத்தும் வாங்கியவருக்கே சொந்தமாவதால்... அதிலிருந்து எதுவும் தனக்குத் தேவையில்லை... என்று மறுத்துவிட்டார்.

இந்த வழக்குதான்... அன்றைய தினம் சபைக்கு வந்தது. வந்திருந்த இருவரின் தர்ம சிந்தனைகளையும் நினைத்து மனம் மகிழ்ந்த தர்மருக்கு... இந்த வழக்கிற்கு எவ்வாறு தீர்ப்பு சொல்வது... என்பதில் ஒரு தீர்மானம் எடுக்க முடியாத நிலையில்... ஏனைய சகோதரர்களிடமும் விவாதித்தார். இறுதியாக, கிருஷ்ண பகவானிடம்... 'இதற்கு எவ்வாறு தீர்ப்பு சொல்வது... கிருஷ்ணா... !' என்று கேட்க, பகவானோ, 'தர்மா... இதற்கு நாளை தீர்ப்பு சொல்வதாகக் கூறி... இந்த வழக்கை ஒரு நாள் தள்ளி வை... !' என்றார்.

அன்று இரவும்... தர்மர் தூக்கமின்றி... அடுத்தா நாள் வரப்போகும் அந்த வழக்கிற்கு எவ்வாறு தீர்ப்பு சொல்வது... என்ற எண்ணத்திலேயே இருந்தார். அடுத்தா நாள், சபைக்கு வந்த போது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருமே சபைக்கு வந்திருந்தனர். அதில், நிலத்தை வாங்கியவர், 'அரசே... நான் நேற்று முழுவதும் யோசித்துப் பார்த்தேன். நிலத்தை விற்றவர் சொல்வது சரியாகப் பட்டது. அந்த நிலமும்... அதற்கு உள்ளடங்கிய புதையலும்... எனக்குத்தான் சொந்தம்... என்பது உறுதியானது. ஆதலால், அந்தப் புதையலை நானே எடுத்துக் கொள்கிறேன்...!' என்றான்.

நிலத்தை விற்றவரோ, 'அரசே, நான் நிலத்தைதான் அவருக்கு விற்றேனே தவிர... நிலத்திற்கு உள்ளே உள்ளதையல்ல. ஆதலால், நேற்று அவர் ஒத்துக் கொண்டபடி அந்தப் புதையலை... அவர் என்னிடம் ஒப்படைத்து விடுவதுதான் நியாயம்... !' என்றான்.

ஒரே நாளில்... அந்த இருவரின் தர்மமும் மாறிப் போனதைக் கண்டு... குழம்பிய தர்மர், கிருஷ்ண பகவானிடம், 'பகவானே...  ஒரே நாளில் எவ்வாறு இப்படி இருவரின் மனநிலையும் மாறிப் போனது... ! எனக்குப் புரியவில்லையே... !' என்றார். அதற்கு பகவான், 'தர்மா... நேற்று 'துவாபர யுகத்தின்' இறுதி நாள்... அதனால், இருவரும் தர்மத்தின் வழியே இருந்தனர். இன்று, 'கலியுகத்தின்' முதல் நாள்... இதன் ஆரம்பத்திலேயே... இருவரும் தர்மத்திலிருந்து விலகி விட்டனர்... என்றார்'. 

மேலும், 'இப்போது இந்த வழக்கிற்கான தீர்ப்பு... எவ்வாறு இருக்க வேண்டும்... என்பது உனக்குப் புரியுமே... !' என்றார். தர்மத்தைவிட்டு எப்பொதும் வலுவாமலிருக்கும் தர்மர் தனது தீர்ப்பை அளித்தார். அதுதான், அப்போதும், இப்போதும்... தொடர்கிறது.

அந்த தீர்ப்பு... ' இப்போதிருந்து, மண்ணிற்குக் கீழிருக்கும் அனைத்தும்... அரசுக்குச் சொந்தமாகும்.' என்பதுதான்.

ஸாய்ராம்.

சர் தாமஸ் மன்றோவுக்கு... பகவான் இராகவேந்திரர் அருளிய தரிசனம்




சர் தாமஸ் மன்றோ... ஒரு சாதாரண பிரிட்டிஷ் இராணுவ சிப்பாயாக 1789 ல் அன்றைய சென்னை மாகணத்திற்கு வந்து சேர்ந்தார். அவரது பணி சென்னை மாகாணத்தைச் சுற்றி 1807 வரை தொடர்ந்தது.

இராணுவ சிப்பாயாக இருந்தவர்... படிப்படியாக இராணுவ அதிகாரியாக உயர்ந்தார். இராணுவ அதிகாரியாக பொறுப்பேற்ற அவரது பணி... வருவாய் ஆய்வு... மற்றும் மதிப்பீட்டுக் கொள்கைகளை வரையரை செய்வது... என்ற துறைகளில் தொடர்ந்தது. 

1807 ல் அவரை இங்கிலாந்து அரசு... அரசுப் பணிகளுக்காக திரும்பி அழைத்துக் கொண்டது. அவரது நிர்வாகத் திறமையையும்... இந்திய மக்களின் மீதும்... இந்திய கலாச்சாரத்தின் மீதும்... அவரது உள்ளார்ந்த வெளிப்பாடுகளை உணர்ந்து கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம்... மீண்டும் அவரை 1814 ஆம் ஆண்டு, அன்றைய சென்னை மாகாணத்தின் கவர்னராக நியமித்தது.

சென்னை மாகானத்தின் கவர்னராக அவர் பணியாற்றிய காலங்களில்... வருவாய் மற்றும் மதிப்பிடுகளில் அவர் பெற்றிருந்த அனுபவம்... புதிய முறையிலான வருவாய் மற்றும் மதிப்பீட்டுக் கொள்கைகளின் சீரமைப்புகள்... வரையறைகளாக... அன்றும், இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

வரி மதிப்பிட்டுக் கொள்கைகளில் மாற்றங்கள் செயத பிரிட்டிஷ் பேரரசு...கோவில்களுக்கு மானியங்களாகக் கொடுத்த நிலங்களை... வாரிசுகள் இல்லாத பக்ஷத்தில்... அரசாங்கமே கையகப்படுத்திக் கொள்ளும்... சட்டமொன்றை அமுல்படுத்தியது. நாடு முழுவதும்... அந்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பக்தர்களின் மத்தியில் எழுந்தது.

அன்றைய பெல்லாரி மாவட்டம்... சென்னை மாகாணத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. பெல்லாரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் 'பகவான் ஸ்ரீ ராகவேந்திரரது மடத்திற்குச்' சொந்தமான நிலங்களையும்... அதன் மானியத்திற்கான காலம் முடிந்திருதபடியால்... அரசாங்கம் கையப்படுத்த ஆணை பிறப்பித்தது.

அரசின் ஆணைக்கு எதிராக பக்தர்கள் போர்க்கொடி பிடித்தனர். அந்தப் போராட்டத்தின் வலிமை கூடுவதை அறிந்த அரசு நிர்வாகம்... கவர்னர். சர் தாமஸ் மன்றோவின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து. அந்த குழு தனது ஆய்விற்காக 'மந்த்ராலாயம்' வந்து சேர்ந்தது.

இந்திய மக்களின் மத நம்பிக்கைகளில் மரியாதை வைத்திருந்தவர் தாமஸ் மன்றோ. அவரது பதவிக் காலத்தில்தான்... திருப்பதி தேவஸ்தானத்திற்கான... திட்டமதிப்பீடுகளை வரையறை செய்திருந்தார். அந்த நிகழ்வின் நியமம் இன்றும் சர் தாமஸ் மன்றோவின் பெயரில்... திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தினரால்... கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மந்த்ராலாய மட நிர்வாகம் கொடுத்த ஆதாரங்களை ஆய்வு செய்தவருக்கு... உள்ளே இருந்த பிருந்தாவனத்தில்... 'பகவான் ஸ்ரீ ராகவேந்த்ரப் பிரபு'... 1671ஆம் ஆண்டில்... ஜீவ சமாதி அடைந்திருப்பதை அறிந்து கொண்டார். தன்னுடன் வந்திருந்தவர்களுடன்... மந்த்ராலய மகானின் பிருந்தாவன வாயிலுக்கு முன் நின்றிருந்தவர்... தன்னை யாரோ உள்ளேயிருந்து அழைப்பது போல... தனது காலணிகளையும்... தொப்பியையும்... கழட்டி வைத்து விட்டு... பிருந்தாவனத்தை நோக்கிச் சென்று... வணக்கம் செலுத்திவிட்டு... சத்தமாகப் பேச ஆரம்பித்தார்.

அவருடன் சென்ற குழுவினருக்கும்... மந்த்ராலயத்தில் குழுமியிருந்த பக்தர்கள் மற்றும் மடத்தினருக்கும்... இது மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர் யாரிடமோ... ஆங்கிலேய அரசு வெளியிட்டிருந்த அரசாணை பற்றி விரிவாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரது விளக்கத்திற்குப் பிறகு, வேறு யாரோ... அவருக்கு சில விளக்கங்கள் கொடுப்பதைக் கேட்டுக் கொண்டிருப்பது போல... தலையை அசைத்து, அசைத்து அனைத்து விளக்கங்களையும் உள் வாங்கிக் கொண்டார். இந்த விவரணங்கள் அனைத்தும் முடிவுற்றதற்கு சாட்சியாக... தனது தலையை ஒப்புதலாக அசைத்துவிட்டு... ஆங்கிலேய முறைப்படி... ஒரு சல்யூட் அடித்து விட்டு... மிக மரியாதையாக பிருந்தாவனத்தை விட்டு வெளியெ வந்தார்.

வெகு நேர உரையாடலை முடித்துக் கொண்டு வெளியேறியவரிடம்... அவர் உள்ளே யாரிடம் பேசிக் கொண்டிருந்தார் என்று கேட்ட போது, 'பிருந்தாவனத்திற்கு அருகே காவி உடை அணிந்த ஒளிவீசும் கண்களுடன் இருந்த ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நான் அரசு மானியங்களைப் பற்றிய  விவரங்களை அளித்துக் கொண்டிருந்தேன். அவரும் அது குறித்து என்னிடம் உரையாடி...மடத்தின் சொத்து பற்றிய சரியான விளக்கங்களை எனக்குத் தந்துவிட்டார். இந்த இடம் மடத்திற்குத்தான் சொந்தம் என்பதில் எந்த ஐயமும் இல்லை' என்றார்.

அவரது ஒளி வீசும் கண்கள்... கம்பீரமான குரல்... நேர்த்தியான ஆங்கில உச்சரிப்பு... ஆகியவற்றால் மிக வியந்து போனவர், குழுவினரிடம், 'ஏன், நீங்கள் அவரைக் காணவில்லையா... ?' என்று கேட்டார். தங்கள் கண்களுக்கு யாரும் தெரியவில்லை என்று கூறியவர்கள்... அவரிடம் உரையாடியவர் சாட்சாத் 'ராகவேந்திரப் பிரபுதான்' என்று உணர்த்தினர்.

கடந்த நூற்றான்டில் காலமான மகான்... தனக்கு முன் நேரில் தோன்றி... தனது பாஷையான ஆங்கிலத்தில் பேசி... பிரச்சனையை தீர்த்த விதம் பற்றி ஆச்சரியத்தில் மூழ்கிப் போன... சர் தாமஸ் மன்றோ... தனக்குக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி உளம் மகிழ்ந்து போனார்... அன்றிலிருந்து பகவான் ராகவேந்திரரின் பகதருமானார்.

அரசுக்கும், ஆளுனருக்கும் அந்த இடம் மடத்திற்குச் சட்டப் படி உரிமையுள்ள நிலம்தான்... என்ற தனது ஆய்வறிக்கையை அனுப்பிவைத்தார். பின்னர், தற்காலிக ஆளுனராக அவர்  பொறுப்பேற்றதும்... அவர் இட்ட முதல் கையெழுத்து...மடத்திற்கு நிலம் அளிப்பது தொடர்பான கோப்பில்தான்.

இந்த சம்பவம்... அன்றைய சென்னை மாகாண கெஜட்டிலும் (அரசு ஆவணக் குறிப்பு)... மடத்தின் ஆவணக் குறிப்பிலும்... இடம் பெற்றுள்ளது.

ஸாய்ராம்.

Wednesday, May 27, 2020

தொலைந்து போன பக்தனின் காலடிகள்...





 ஒரு பக்தன் தனது இன்பத்தின் வழியேயான பயணத்தில்... தன் காலடிகளுக்கு இணையாக எண்ணற்ற காலடிகளின் தடயங்கள் இருப்பதைக் கண்டான். பகவானுடைய காலடித் தடங்களும் அதில் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில்... மகிழ்வுடன் பயணித்துக் கொண்டிருந்தான்.

அவனது வாழ்வின் பாதையில் 'இரட்டைச் சுழல்கள்' என்ற துன்பத்தின் வழியேயான... வாழ்க்கைப் பயணம் துவங்கியது.தன்னோடு பயணித்த அனைத்துக் காலடித் தடங்களும் சுவடுகளே இல்லாமல் மறைந்து போனது. விரக்தியில் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்ற பக்தன்...

'பகவானே... ! எனது இன்பத்தின் வாழ்வின் வழியே... என்னோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்த நீங்கள்... தற்போதைய... எனது துன்பத்தின் காலத்தில் மட்டும்... என்னை தனியே தவிக்க விட்டு விட்டுப் போய் விட்டீர்களே... இது நியாயமாகுமா... ?'

பகவான் சொன்னார், ' நன்றாகப் பார்... ! அது என்னுடைய காலடித் தடயங்கள்தான்... நான்தான், உன்னை சுமந்து கொண்டு செல்கிறேன்,,, !' என்றார்.

ஸாய்ராம்.

Tuesday, May 26, 2020

கர்ம வினைகள்... என்ற சுமக்க முடியாத சுமை...





'நாராயண... நாராயண...' என்று எப்போதும் ஸ்மரித்துக் கொண்டிருக்கும், நாரத மகிரிஷிக்கு, தான்தான் 'பகவான் நாரயணரது' முதல் பக்தன் என்ற பெருமையும்...தன்னையறியாமலேயே ஒரு கர்வமும்... வந்து சேர்ந்தது. அதை ஒரு நாள் ஒரு கேள்வியாக பகவானிடம் முன் வைத்தார் நாரதர். அது, 'பகவானே என்னை விட... உங்களின் மீது சிறந்த பக்தி கொள்ளும் பக்தன்... இந்த ஈரேழு லோகங்களிலும்... யாராவது இருக்கிறார்களா... ?' என்பதுதான்.

புன்னகைத்த பகவான், 'நாரதா... நீ ஒரு சிறந்த பக்தன் அதில் சந்தேகமே இல்லை. அனால், உன்னை விட ஒரு சிறந்த பக்தன், பூலோகத்தில் இருக்கிறான்.' என்றார். தனது கர்வத்தின் மேலீட்டால், 'பூலோகத்திலா... அவ்வாறு ஒருவர் இருக்க முடியாது, பகவானே. நானே நேரில் சென்று அவனை பரிசோத்து வந்து, நான்தான் உங்களது பக்தர்களில் சிறந்தவன் என்று நிரூபணம் செய்கிறேன்.' என்று கூறிவிட்டு, பகவான் குறிப்பிட்ட அந்த பகதரைத் தேடி பூலோகத்திற்கு வந்து சேர்ந்தார்.

வானத்திலேயே சஞ்சரித்து வந்தவரின் கண்களில் பகவான் குறிப்பிட்ட பக்தரின் வீடும் வந்து சேர்ந்தது. இரவு நேரமானதால், அந்த வீட்டிற்கு அருகிலேயே மறைந்து நின்ற நாரதர், அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். அதிகாலையில் அந்த வீட்டின் தலைவரான விவசாயி கண் விழித்தான். கயற்றுக் கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்து... கைகளைச் சேர்த்து தேய்த்து தன் கண்களில் வைத்து... பின் கைகளைப் பார்த்த படியே... 'நாரயணா...!' என்றான். 'ஆஹா...!' இவனைத்தான் பகவான் சிறந்த பக்தன் என்று கூறியிருக்கிறார்... என்ற படி அவனையே தொடர்ந்து கண்காணிக்க ஆரம்ப்த்தார் நாரதர்.

கண்விழித்ததற்குப் பின்னர், மாடு, கன்றுகளை அவிழ்த்துவிட்டு... பட்டியைச் சுத்தம் செய்து...மனைவி கொண்டு வந்த நீராகாரத்தைக் குடித்து விட்டு... ஏரையும், காளைகளையும் அழைத்துக் கொண்டு... காடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனையெ தொடர்ந்தார் நாரதர். காட்டை அடைந்ததும்... காளைகளை ஏரில் பூட்டி... சூரிய வெப்பம் கூடுவதற்கு முன்னதாக... மடைகளில் நீரைத் திறந்து விட்டபடி... நிலத்தை சீராக உழ ஆரம்பித்தான்.

மதிய நேரம் வந்த போது... அவனது மனைவி சுமந்து வந்த நீராகாரத்தைக் குடித்து விட்டு நிழலில் ஓய்வெடுத்தபின்... மிண்டும் வயலில் வேலைகளைத் தொடர்ந்தான். மாலை நெருங்கியதும், ஏரைச் சுமந்தபடி காளைகளுடன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். வீடு வந்து சேர்ந்த பின் காளைகளையும், விட்டிலிருக்கும் மாடு, கன்றுகளையும் அவிழ்த்து விட்டு... அவற்றிற்கு ஆகாரம் அளித்து... அவற்றைக் கட்டிப் போட்டான்.

மீண்டும் கயற்றுக் கட்டிலை எடுத்து வீட்டு வாசலுக்கு முன் போட்டவன்... மனைவி கொண்டு வந்த சூடான களியை உண்டு... நீரருந்தி விட்டு... வழக்கம் போல கைகளைத் தேய்த்து கண்களில் ஒற்றி... கைகளைப் பார்த்துக் கொண்டே... 'நாரயணா...!' என்ற படியே தூக்கத்தில் ஆழ்ந்தான். இரண்டு முறைகள் மட்டுமே பகவானை நினைக்க முடிந்த ஒரு சாதாரண பக்தனை... எப்போதும் பகவானது நாமத்தையே ஸ்மரித்துக் கொண்டிருக்கும் தன்னோடு ஒப்பிட்டதை நினைத்து... வருந்திய நாரதர்... இந்த உண்மையை உரைக்க வைகுண்டம் நோக்கிச் சென்றார்.

இவரது வருகைக்காகக் காத்திருந்த பகவான், 'நாரதா... உனக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன். உன்னைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாத ஒரு காரியம் உள்ளது. அதை உன்னால்தான் செய்ய முடியும் . இதோ, இந்த குடம் நிறைய நெய் நிறைந்திருக்கிறது. இதிலிருந்து ஒரு சொட்டு நெய் கூட சிந்திவிடாமல்... இந்த வைகுண்டத்தை ஒரு சுற்று சுற்றி வா... !' என்றார்.

தான் சொல்ல வந்ததை... பகவானின் புகழுரையால் மறந்து போன நாரதர், அந்த நெய் குடத்தை சுமந்தபடி... மிகக் கவனமாக வைகுண்டத்தைச் சுற்றி வர ஆரம்பித்தார். அவரது கவனம் முழுவதும் நெய்க் குடத்தின் மீதே இருந்தது. மிகவும் சாமர்த்தியமாக, ஒரு சொட்டு நெய் கூடச் சிந்தாமல், புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தார் நாரதர். அப்போதுதான் அன்றைய நாளே பூர்த்தியாகியிருப்பதை அவர் உணர்ந்தார்.

நாரதரை, சிந்தாத நெய்க்குடத்துடன் பார்த்த பகவான், 'சபாஷ்... நாரதா... ! உன்னையன்றி யாரால் இந்த காரியத்தை இவ்வளவு கட்சிதமாக முடிக்க முடியும்... !' சரி, நாரதா.. இந்தப் பணியை ஆரம்பித்து, முடிக்கும் வரையில் என்னை எத்தனை முறை நினைத்தாய்... ?' என்று கேட்டார். அதிர்ந்து போன நாரதருக்கு, அப்போதுதான், தனது சிந்தனை முழுவதும் நெய்க்குடத்தின் மீது இருந்ததால்... பகவானை ஒரு முறை கூட சிந்திக்காதது நினைவுக்கு வந்தது. ஆனாலும், 'பகவானே, நீங்கள் எனக்கு ஒரு கடமையைக் கொடுத்திருந்தீர்கள். அதனைப் பூர்த்தி செய்ய நான் எடுத்த முயற்சியினால்தான்... உங்களை நினைக்க முடியாத சூழல் ஏற்பட்டது..' என்றார்.

சிரித்துக் கொண்டே... பகாவான், 'நாரதா... பூலோகத்தில் நீ பார்த்துக் கொண்டிருந்த மனிதன் எத்தனைக் கடமைகளைச் சுமந்து கொன்டிருந்தான்... ! அவ்வாறு இருந்தாலும்... கண்விழிக்கும் போதும்... கண்ணயரும் போதும்... இருமுறை என்னை அழைத்தானே...! அவன்தானே சிறந்த பக்தனாக இருக்க முடியும்... !' என்றார்.

தனது அகங்கார நிலையிலிருந்து வெளி வந்த நாரதர், 'பகவானே... ! என்னை மன்னித்து அருளுங்கள். 'இத்தனை பிறவிகளின் கர்ம வினைகளைச்' சுமந்து கொண்டிருக்கும் பூலோக மாந்தர்களின் மிகச்சிறிய பக்தியும்.. பெரும் பக்திக்குச் சமம்... என்பதை உணர்ந்து கொண்டேன்... என்றார்.

ஸாய்ராம்.

கர்ம வினைகளின் வலிமை





பகவான் கிருஷ்ணருடன், நாரத மகிரிஷி தேரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, 'பகவானே... ! கர்மவினை அவ்வளவு வலிமை மிக்கதா... என்ன.. ?' என்றொரு கேள்வியை முன்வைத்தார்.

பகவான், சாரதியின் பக்கம் திரும்பி, 'கொஞ்சம் தேரை நிறுத்தி... குதிரைகளுக்கு ஓய்வு கொடு... !' என்று சாரதிக்கு உத்தரவிட்டுவிட்டு, ஒரு குவளையை எடுத்து, நாரதரிடம் கொடுத்து, 'நாரதா... ! தாகமாக இருக்கிறது. அதோ அங்கு தெரியும் நீர் நிலையிலிருந்து குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வருகிறாயா... ?' என்றார். 'தாராளாமாகப் பிரபு... !' என்ற படி, குவளையை வாங்கிக் கொண்டு, அந்த நீர் நிலையை நோக்கி நடந்தார் நாரதர்.

நீர் நிலையில் தேங்கியிருந்த நீர் கலங்கியிருக்கவே... சற்று தொலைவிலிருக்கும் ஒரு குடிசையை நோக்கி நடந்த நாரதர், அந்தக் குடிசைக் கதவைத் தட்டினார். 'இதோ வருகிறேன்... !' என்ற மென்மையான குரலுடன்... ஒரு அழகிய பெண் வந்து கதவைத் திறந்தாள். அது போன்ற ஒரு பேரழகியை இதுவரைக் கண்டிராத நாரதர்... அவளின் அழகில் மயங்கி... தான் எதற்காக வந்தோம் என்பதையும் மறந்து போனார்.

அந்த அழகியின் வதனமும் நாணத்தால் சிவந்தது. மணந்தால் இது போன்ற பெண்ணைத்தான் மணந்து வாழ வேண்டும்... என்ற மோகம் நாரதரை ஆட்கொண்டது. 'பெண்ணே... ! நான்தான் நாரத மகிரிஷி. உன்னை மணந்து கொள்ள விரும்புகிறேன். சம்மதிப்பாயா... ?' என்று கேட்டார்; சம்மதத்துடன் தலை அசைத்த பெண், 'ஆனால், எனது தந்தையின் சம்மதத்தை நீங்கள் பெற வேண்டும்.' என்றாள். அவளது தந்தையும் வந்து சேர, 'ஐயா,,, நான் தேவலோகத்தைச் சேர்ந்தவன். நாரத மகிரிஷி எனது பெயர். நான் தங்களது புதல்வியை மணந்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு உங்கள் சம்மதத்தை நாடி நிற்கிறேன்.' என்றார்.

'சம்மதிக்கிறேன் மகிரிஷி. ஆனால், ஒரு நிபந்தனை... நீங்கள் எங்களோடு இங்கேயே வசிக்க வேண்டும்' என்றார். மோகத்தால் ஆட்கொண்ட நாரதர் சம்மதம் என்று தெரிவிக்கவே, அவருக்கு திருமணம் நடந்தேறியது. இல்வாழ்வின் இன்பத்தை அனுபவித்த்ருக் கொண்டிருந்தவருக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளும் பிறந்தன. அவர்களுக்குச் சொந்தமான தோட்டத்திலும், வயல் வெளியிலும், உழைத்த நேரம் போக மனைவி, குழந்தைகள் என... ஒரு மகிழ்வான வாழ்வை வாழ்ந்து வந்தார்.

தனது மனைவியின் பெற்றோர்கள் மறைவிற்குப் பின்னால்... குடும்பப் பொறுப்புகளைச் சுமந்து கொண்டு... ஒரு குடும்பத் தலைவனாக வாழ்வை நடத்திக் கொண்டிருந்தார். ஒரு நாள், பெரும் மழை பொழிய ஆரம்பித்தது. நிற்காமல் பெய்த மழையால், அந்தப் பகுதியே வெள்ளக் காடாய் மாறியது. இவர்களுக்குச் சொந்தமான தோட்டம்... வயல் வெளி... என அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட... தனது குடும்பத்தைக் காக்க, தனது மனைவி , குழந்தைகளுடன் குடிசையின் மேல் பகுதியில் ஏறி பாதுகாப்பாக அமர்ந்து கொண்டார்.

நிற்காமல் பெய்த மழையாலும்... வீசிய பெரும் காற்றாலும்... வெள்ளம் பெருகி, அந்த குடிசையையும் மூழ்கடிக்க ஆரம்பித்தது. மேலேறி வந்த வெள்ளத்தால் தனது கண்முன்னேயே தனது மனைவி அடித்துச் செலவதைப் பார்த்து கதறியவர்... குழந்தைகளைக் காத்துக் கொள்ள... குழந்தைகளைத் தன் தோள்களில் தூக்கிக் கொண்டு எழுந்து நின்றார். எங்கிருந்தோ பெருகி ஓடி வந்த ஒரு பெரு வெள்ளம்... தனது அன்புக் குழந்தைகளைத் தன் கைகளின் பிடியிலிருந்து இழுத்துக் கொண்டு செல்வதை உணர்ந்த நாரதர், துயரம் தாங்காமல். 'ஐயோ... ! இறைவா, எனது குழந்தைகளையாவது காத்துவிட மாட்டாயா... ?' என்று அலறினார்.

'நாரதா... ! இன்னுமா தண்ணீரை குவளையில் நிறைத்துக் கொண்டிருக்கிறாய்.? என்ற குரலைக் கேட்டு, இன்னும் தான் அனுபவித்த அந்த மோகவலைப் பின்னலின் அனுபவத்திலிருந்து விடுபடாததால், 'பகவானே... ! எவ்வளவு காலமாக நான் இவ்வாறு துன்பத்தில் உழன்றிருந்தேன்... /' என்று நாரதர் கேட்க... ஏதுமறியாதவர் போல கிருஷ்ண பகவான், 'நாரதா... என்ன சொல்கிறாய்... / தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால்... நானே வந்து தாகம் திர்த்துக் கொள்ளலாம் என்று... இப்போதுதான் தேரிலிருந்து இறங்கி வருகிறேன்.' என்றார்.

இந்தச் சொற்ப க்ஷணத்தில் தான் அனுபவித்த மோகத்தின் விளைவின் வலிமையைக் கண்டு... திகைத்துவிட்ட நாரத மகிரிஷி, 'இறைவா... ! க்ஷண நேரத்தில் நான் அனுபவித்த இந்த 'வாழ்க்கைத் துன்பத்தையே' என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லையே... பிறவிகள் தோறும்... தொடர்ந்து இந்தக் 'கர்ம வினைகளின்' வலைப்பின்னலில் சிக்கித் தவிக்கும் ஜீவர்களின் நிலைதான் என்னே... !' என்று வியந்து போனார்... நாரத மகிரிஷி.

ஸாய்ராம்.

Saturday, May 23, 2020

COVID-19... ஒரு சிந்தனை...





இது போல் என்றும் நிகழ்ந்ததில்லை - நம்
வாழ்வில் என்றும் கண்டதில்லை.
நம்மை நாமே உணர்ந்து கொள்ள - ஒரு
வாய்ப்பும் இது போல் கிடைத்ததில்லை.

இறைவன் கொடுத்த சுதந்திரத்தை - தன்
உரிமையாய் நினைத்த மனிதகுலம்
அனைத்து உயிர்க்கும் உரிமையான - இவ்
உலகைச் சிதைக்க முனைந்தது.

வானம் பூமி இணைந்திட்ட - இந்த
புவியை நாசம் செய்தது.
வானம் இயல்பை இழந்தது - அதன்
வெளியில் கதிரியக்கம் சூழ்ந்தது.

புவியிலிருந்து எழுந்த மாசு - விண்
வெளியை கரியால் நிறைத்தது.
மலைகள் சிதைந்து போனது - அதன்
வளங்கள் தொலைந்து போனது.

காடுகள் மரங்களை இழந்தது - வெறும்
தரிசு நிலமாய் ஆனது.
கடலின் நீரும் மேகத்து மழையும்
மலையின் அருவியும் ஏரியும் குளமும்
கிணறும் குட்டையும் நிலத்தடி நீரும் - பிற
உயிரினம் வாழ வழியில்லாமல் போனது.

தனக்கே மட்டும் இவ்வுலகம் - என்ற
தப்புக் கணக்கால் சகலமும் அழிந்தது.
இயற்கையும் உயிர்களும் -ஒன்றாய்த்
தொடுத்த வழக்கின் தீர்ப்பும் வந்தது.

ஒட்டுமொத்த உலகின் மனிதம் - நான்கு
சுவர்களுக்குள்ளே சிறைபட்டுப் போனது.
வெளியேறா வண்ணம் வீட்டுக்கு - வெளியே
கண்ணுக்குத் தெரியா கிருமி காவல் செய்தது.

இதன் விளைவு...

வானம் பூமி இணைந்திட்ட - இந்தப்
புவி புத்துணர்வைப் பெற்றது.
வானம் இயல்புக்கு வந்து - அதன்
கதிரியக்கம் காணாய்ப் போனது.

புவியின் மாசு குறைந்து போனதால் - வான்
வெளியின் தூய்மை முழு நிறைவானது.
மலைகள் காடுகள் தளிர்த்து வளர்ந்து - பெரும்
மரங்களால் வனம் இருள் சூழ்ந்தது.

கடலின் அருவியின் ஏரியின் குளத்தின்
கிணற்றின் குட்டையின் நிலத்தடி நீரின்
தூய்மை மீண்டது, உயிரினம்
யாவற்றின் துயரமும் போனது.

இறைவன் அளித்த தண்டனைக் காலம் - மனிதம்
மீண்டும் தளைக்கத்தான்...
படைத்தவன் அளித்த சுதந்திரம் - பற்றிய
ஞானம் மீண்டும் பிறக்கத்தான்.

ஸாய்ராம்.








எண்ணங்களற்ற மனமா... அது எவ்வாறு இருக்கும்... ?



'நான் யார்... ?' என்று விசாரி... ! என்று பகவான் கூறியதுமே... எண்ணற்ற கேள்விகள்தான் மனதில் எழுகின்றன.

இதே நிலையில்தான்... பால் பிராண்டன் என்ற வெளி நாட்டவரின் நிலையும் இருந்தது. அவரின் இந்திய வருகை, ஒரு சத்குருவின் நேரடி தரிசனத்தைத் தேடித்தான் இருந்தது. அது கல்கத்தாவில் ஆரம்பித்து காஞ்சி மண்ணில் முடிந்தது.

காஞ்சிபுரத்தில், நடமாடும் தெய்வமான... காஞ்சி மகா முனிவரை சந்தித்தார். அவரின் சன்னிதானத்தில் நிறைவோடு இருந்த பிராண்டன்... ஆத்ம ஞான விசாரத்தைப் பற்றிய சந்தேகங்களை கேள்விகளாகத் தொடுக்க வேண்டும்... என்று எண்ணும் போது... அவரின் சிந்தனை ஓட்டத்தை நன்கறிந்த 'பரமாச்சாரியார்' புன்னகைத்த படியே, 'உன் கேள்விகளுக்கான பதில்... திருவண்ணாமலையில் இருக்கிறது. அங்கு சென்று ரமணரை தரிசனம் செய்... !' என்றறுளினார்.

பிராண்டனின் அடுத்த பயணம், திருவண்ணாமலையை நோக்கியதாக அமைந்தது. அங்கு வந்து 'ரமண மகிரிஷியைச்' சந்தித்த கணமே... பிராண்டனின் அனைத்து சந்தேகங்களும் ஒரு முடிவுக்கு வந்தது. பகவானின் தீர்க்கமான பார்வையும்... அவரின் மௌனமும்... எப்போதும் உள்ளார்ந்து இருக்கும் அவரின் தவமும்... கேள்விகளை விடுத்து... பிராண்டனின் மனதை உள் நோக்கி செலுத்துவதற்கு ஏதுவாகியது.

அவரின் முதல் வருகை... குறுகியதாக இருந்தது. பகவானைப் பேட்டி காண சந்தர்ப்பமும் மிகக் குறைவாகவே இருந்தது. இருப்பினும், மிகவும் சிரமப்பட்டு, ஒரு மதிய வேளையில், யாரும் அருகில் இல்லாத பொது... ஒரு மொழிப் பெயர்ப்பாளரை அருகில் வைத்துக் கொண்டு, தனது கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

அவரின் கேள்விகளையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த பகவான்... 'இந்தக் கேள்விகளைக் கேட்பவர் யார்... ?' என்று கேட்டார். அந்தக் கேள்வியின் நுட்பத்தைப் புரிந்து கொள்ளாத பிராண்டன், 'என் பெயர் பிராண்டன்.' என்றார். 'அது உனக்கு இடப்பட்ட பெயர்...' என்றார் பகவான்'. நான் ஒரு எழுத்தாளன்' என்ற பிராண்டனிடம்... 'அது உனது தொழில்...' என்றார் பகவான். 'நான் பிரிட்டனைச் சேர்ந்தவன்' என்ற பிராண்டனிடம்... 'அது உனது பிறந்த தேசம்...' என்றார் பகவான்.

பகவானது கேள்விக்குத் தான் அளித்த பதில்களும்... அதைத் தொடர்ந்த பகவானின் விளக்கங்களும்... 'தான் இந்த உடம்பு அல்ல' என்ற உண்மையை பிராண்டனுக்கு உணர்த்தியது. இந்த உணர்தல்... அடுத்த ஒரு நீண்ட திருவண்ணாமலை விஜயத்திற்கு வழிகாட்டியது.

இந்த இரண்டாவது விஜயம்... பகவானின் பேட்டிக்காக அல்ல... தன்னை உணர்வதற்காக. அந்த உணர்தலின் வழியில் பகவானால் வழி நடத்தப்பட்ட பிராண்டனின் அடுத்த கேள்விகளெல்லாம்... 'நான் யார் என்ற விசாரத்தின்' வழியேயான கேள்விகள்தான்.

அதில் ஒன்றுதான், 'மனதை அதன் மூலத்தில் கொண்டு சேர்த்து... அந்த மூலத்தையே கவனிக்கும் போது... எண்ணங்களற்ற மனம் இருக்கும். அந்த நிலையில் எனது வாழ்வு என்னவாகும்...?' என்பதுதான்.

இந்த கேள்விகளெல்லாம்... சாதகன் மனதில் விசாரத்தின் பொது உருவாவதுதான்... என்பதை உணர்ந்து கொண்ட பகவான்... புன்னகைத்த படியே, 'தேவைக் கேட்ப எண்ணங்கள் உருவாகும்... !' என்றார்.

இதுதான்... விசாரத்தின் விளைவு. தியானத்தின் வெற்றி.

ஓம் ஸ்ரீ ரமணாய நமஹ... !

ஸாய்ராம்.

Thursday, May 21, 2020

வாசி யோகம்... ஒரு அறிமுகம். பகுதி - 3.





ஏனைய அனைத்து உயிரினங்களுக்கும் 'சுவாதீனமாக' இருக்கும் சுவாசம்... மனிதனுக்கு மட்டும் பின்னப்பட்டு... இடகலை... பிங்கலை... என பிரிவதற்குக் காரணம்... அவன் சுமந்து வந்திருக்கும் 'கர்ம வினைகளே'.

கர்ம வினைகள் வெளிப்படுத்தும் எண்ணங்களும்... அதற்கேற்ப தனது வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் மனிதனின் செயல்பாடுகளும்... சுவாசத்தின் சீரமைப்பைக் குழைத்து... அதனை பின்னப்படுத்திவிடுகிறது.

இதை சீராக்க வேண்டுமெனில்... மனிதன் தனது எண்ணங்களை செயல் படுத்தும் போது... அதைக் கடமையாகக் கொண்டு... விளைவுகளில் பற்று வைக்காமல்... ஒரு 'கர்ம யோகியாக' செயல்படும் போது... இந்த சுவாசம் தாமாகச் சீராவதை உணரலாம்.

இந்தக் 'கர்ம யோகத்தைத்தான்'... ஞானிகள், மனிதர்கள் கடைபிடிப்பதற்கான உத்தம வழியாக வலியுருத்தினார்கள். ஆனால், எப்போதும் 'குறுக்கு வழியையே' விரும்பும் மனித மனம்... இந்த 'இடகலை - பிங்கலை' என்ற இரு சுவாச நிலை... ஒன்றாகும் 'சுழுமுனை' என்ற 'சுவாதீனத்தை'... 'வாசி யோகம்' என 'யோக முறையாகக்' கடைப் பிடிக்க ஆரம்பித்தார்கள்.

ஞானிகள், தமது எண்ணங்களை, மூலத்திலேயே ஒன்றி விடச் செய்வதால்... அவர்களின் கவனம்... எண்ணங்களின் மீது இல்லாமல்... மூலத்திலேயே ஒன்றியிருக்கும். அவர்களின் தேவைகளுக்கு ஏற்பவே... அவர்களுக்கு எண்ணங்களும் வெளிப்படும். ஆதலால், அவர்களுக்கு சுவாசம்... சுழுமுனையில்... எப்போதும் சுவாதீனமாக இருக்கும்.

ஆனால், இந்த சூட்சுமத்தை அறியாத மனிதர்கள்... தமது சுவாசத்தைக் கட்டுப் படுத்துவதன் மூலம்... தனது எண்ணங்களைக் கட்டுப் படுத்தி விடலாம்... என்ற தவறான நடைமுறையை... 'வாசி யோகமாகக்' கடைபிடித்து வருகிறார்கள்.

சுவாசத்தை தம் இஷ்டம் போல வளைப்பது... வாசி யோகமாகாது. சுவாசத்தைக் கவனிப்பதுதான்... வாசி யோகமாகும். அந்த சுவாசத்தைக் கவனித்து... அதன் வழியாக நமது எண்ணங்களை... அதன் 'மூலமான ஆத்மாவில்' கொண்டு சேர்ப்பதுதான்... வாசி யோகப் பயிற்சியாகும்.

இவ்வாறு, நமது எண்ணங்களைக் கவனித்து... அதனை, அதன் மூலமான ஆத்மாவில் கொண்டு லயிக்க வைத்தால்... 'வாசி'... யோகமாகிறது. இது, ஆத்ம சாதகர்களுக்கு உரியது.

ஆனால், கர்ம வாழ்வில் உழலும்... சாதாரன மனிதர்களுக்கு... கடமைகளை பற்றற்று முடித்து... அதன் பலன்கள் மேல் பற்று வைக்காத  நிலையான... 'கர்ம யோகமே... சுவாசம் சீராகும் 'சுழு முனையாக'... 'வாசி யோகமாக' மாறும்.

இதுவரை, வாசி யோகத்தைப் பற்றிய சில ஆய்வுகளை பரிசீலித்தோம்... இறைவனின் அருளால்...

ஸாய்ராம்.

வாசி யோகம்... ஒரு அறிமுகம். பகுதி - 2.



மனிதனுக்கு மட்டுமே உரியதான 'கர்ம வினைகளின்' விளைவுகளான எண்ணங்கள்... அலையலையாக வெளிப்படும் போது, அந்த எண்ணங்களுக்கு ஏற்ப... சுவாசம், இடகலையாகவோ... பிங்கலையாகவோ... நாசித் துவாரத்திலிருந்து வெளிப்படுகிறது.

அதே நேரத்தில்... தமது வாழ்வு முழுவதையும்... 'இறைவனின் திட்டப்படியே' எந்த வித மாற்றமுமில்லாமல்... தாம் எந்த விதத்திலும் அந்தக் 'கர்ம வினை திட்டத்தில்' குறுக்கிடாமல்... இறைவனின் சித்தத்தின் படியே... தமது வாழ்வு முழுவதையும் நடத்தும் ஏனைய ஜீவன்கள் அனைத்துக்கும்... சுவாசம் 'சுவாதீனமாகிறது'.

அதாவது, தமது இரு நாசித் துவாரங்களிலிருந்தும்... சுவாசம் சீராக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். அதனால்தான்... சுவாசம் எப்போதும் சீராக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்... உலகின் மிகப் பெரியு உயிரினமான... யானையின் தும்பிக்கையை எடுத்து... சுவாச சீரமைப்பு சரியாக இல்லாத மனிதர்கள் தம் தலையில் வைத்துக் கொள்கிறார்கள்.

இந்த சுவாச சீரமைப்பு இல்லாத நிலைக்கு... மனிதர்களுக்கு, இறைவன் அளித்திருக்கும்... கர்ம வினைகள் வெளிப்படுத்தும் செயல்களுக்கு ஏற்ப 'முடிவு எடுக்கும் உரிமைதான்'... காரணமாகிறது.

அவர் இந்த உரிமையை மனித இனத்திற்கு மட்டும் அளித்திருப்பதற்கான நோக்கம்... மனிதன் தனது 'பூர்வ கர்ம வினைகளின் விளைவுகளால்தான்' இந்தப் பிறவியை அடைந்திருக்கிறான். இந்தப் பிறவியில் இறைவன் நமக்கு அளித்திருக்கும், அந்த உரிமையைப் பயன்படுத்திக் கொண்டு... அவன் எடுக்கும் முடிவுகள் அனைத்தும்... தர்மத்திற்குக் கட்டுப்பட்டு... கடமைகளை பற்றற்று நிறைவேற்றி... மீண்டும் ஒரு பிறவியை எடுக்காமல்... இறைவனின் திருவடியில் கலந்து விடுவதற்க்காகத்தான்.

இந்தப் 'பற்றற்று கடமைகளை பூரணத்துவமாக்கும்' தன்மை... உருவாகும் போது, மனம் எப்போதும் அமைதியாகவும்... சுவாசமும் எப்போதும் சீராகவும்... நம்மையறியாமலேயே சுவாசம்... சுவாதீனமாவதையும் உணரலாம்.

இந்த இயல்பான 'சுவாச சீரமைப்பான'... 'சுழுமுனை' என்ற 'சுவாச சுவாதீனமாதலைத்தான்'... 'வாசி யோகம்' என்றழைத்தனர் ஞானிகள். இந்த வழியிலான... இயல்பான 'கர்ம யோகத்தின் வழியேயான' சுவாசச் சீரமைப்பைத்தான்... எல்லா மனிதர்களுகம் கடைப் பிடிக்க வேண்டும்... என்றும் வலியுருத்தி வந்தனர்.

ஆனால், எதையும் 'குறுக்கு வழியில்' தேடும் மனித மனம்... இயல்பாகவே, இந்த 'சுவாசக் கட்டுப்பாடான'... சுழுமுனை நிலையை... ஒரு வித்தை என்று கருதி... 'வாசி யோகம்' என்று தமது முயற்சியால் முனைந்து பார்ப்பதுதான்... கேள்விக்குறியாகிறது.

அதைப்பற்றிய ஒரு ஆய்வை தொடர்ந்து பார்ப்போம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

Tuesday, May 19, 2020

வாசி யோகம்... ஒரு அறிமுகம்.பகுதி - 1





வாசி யோகம்... என்பது மூச்சுக் காற்றுடன் சம்பந்தப்பட்ட ஒரு கலை.

முதலில் மூச்சுக் காற்று எவ்வாறு செயல்படுகிறது... ? என்பதை சற்று ஆராயலாம்.

உலகில் வசிக்கும்... சுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்து உயிரினங்களுக்குள்ளும் மனிதனுக்கு மட்டுமே, சுவாசம் 'இடகலை... பிங்கலை... ' என்ற இரண்டு நிலைகளில் சுவாசம் செயல் படுகிறது.

ஏனைய அனைத்து உயிரினங்களுக்கும்... சுவாசம் அதன் இயல்பாக இருக்கிறது. அதாவது 'சுழுமுனையாக' இருக்கிறது.

இடகலை என்பது... நமது சுவாசம், நமது நாசியின் இடது துவாரத்தின் வழியே சீராக வெளிப்படுதலாகும்.

பிங்கலை என்பது... நமது சுவாசம், நமது நாசியின் வலது துவாரத்தின் வழியே சீராக வெளிப்படுதலாகும்.

இந்த இரு நிலை சுவாசத்தைத்தான்... மனித குலம் அனுபவித்து வருகிறது.

சுழுமுனை என்பது... சுவாசம் அதன் மூலத்திலே அடங்கி... அதன் வெளிப்பாடு... மிக மெல்லியதாக... இரண்டு நாசித் துவாரங்களின் வழியாக... வெளிப்படுதலாகும். இது மனிதனைத் தவிர்த்து ஏனைய அனைத்து உயிரினங்களுக்கும் இயல்பாகிறது.

இதற்கான காரணத்தை ஆராய்ந்தால்...

ஏனைய உயிரினங்கள் அனைத்தும்... இறைவனின் திட்டப்படியே தமது 'கர்ம வினைகளை' அனுபவிக்கின்றன. அவற்றிற்கு, தாம் செய்யும் அல்லது எதிர் கொள்ளும் செயல்களுக்கான 'முடிவு  எடுக்கும் உரிமை' வழங்கப்படவில்லை. அவைகள் தாம் எதிர்கொள்வதையும்... செய்வதையும் தமது 'கர்ம வினைகளுக்கு உட்பட்டு' எதிர்கொள்கிறது. ஆதலால், அவற்றிற்கு சுவாசம் எப்போது 'சுவாதீனமாகிறது.

அதனால்தான், அவற்றிற்கு மோப்ப சக்தி மிகுந்து இருக்கிறது. அவற்றால், தாம் எவ்வாளவு தூரம் பயணித்தாலும்... தான் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும்... தாமாக வந்து சேரும் ஆற்றல் இருக்கிறது.

ஆனால், மனித குலத்திற்கு அந்த சுவாசம் 'சுவாதீனமாக இருப்பதில்லை'. அது பின்னமாகிறது. ஆதலால்தான் இடகலை... பிங்கலை என பின்னப்பட்டுப் போகிறது. இதற்குக் காரணம், மனிதனுக்கு இறைவன் வழங்கியிருக்கும் 'முடிவு எடுக்கும் உரிமைதான்'.

மனிதன் தன் 'கர்ம வினைகளை' அனுபவிக்கும் போது... அதை தான் செய்யும் செயல்களாகவும், தான் எதிர் கொள்ளும் செயல்களாகவும் அனுபவிக்கிறான். அவன் எதிர்கொள்ளும் அல்லது மேற்கொள்ளும் செயல்களுக்கான முடிவைத் 'தீர்மானிக்கும் உரிமையைத்தான்'... இறைவன் மனிதனுக்கும் மட்டும் வழங்கியிருக்கிறான்.

அந்தக் 'கர்ம வினைகள்தான்' எண்ணங்களாக ஒவ்வொரு மனிதனின் மனத்திலிருந்தும் இடையறாது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த ஒவ்வொரு எண்ணத்திற்கும்... மனிதன் எவ்வாறு தனது வெளிப்பாட்டை வெளிப்படுத்தப் போகிறான்... ? என்பதற்கான முலமாகத்தான்... அவனது 'சுவாசம்' வெளிப்படுகிறது. அது இடகலையாகவும்... பிங்கலையாகவும்... மாறி, மாறி வெளிப்படுவதிலிருந்து... அவனது மாறி, மாறி வரும் எண்ண அலைகளைப் புரிந்து கொள்ளலாம்.

இதைத்தான், வாசி யோகம் அறிந்தவர்கள், தமக்கு முன்னால் வந்து அமர்ந்திருப்பவர்களின் எண்ண ஓட்டத்தை... தமது உள்ளார்ந்த சுழுமுனை என்ற உள்ளார்ந்த சுவாசத்தின் மூலம் அறிந்து... அதற்கான வழியைக் காட்டுகிறார்கள்.

இந்த வாசி யொகத்தைப் பற்றி... தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.


Monday, May 18, 2020

உண்மயான ஆனந்தம்... !.





ஒரு செல்வந்தரிடம்... நிறைந்த குடும்பம், வீடு, வயல் வெளிகள், தோப்புக்கள், வண்டி வாகனங்கள்,,, என்ற அனைத்து வசதிகளும் நிறைந்து இருந்தன. ஆனாலும் அவரின் மனம், எப்போதும் ஒரு கவலையிலேயே ஆழ்ந்திருந்தது.
அந்தக் கவலையிலிருந்து விடுபட, அவர், ஒரு வழியைத் தேடிக் கொண்டிருந்தார்.

அந்த ஊருக்கு ஒரு ஞானி வந்திருந்தார். அவர் ஊருக்கு வெளியே இருந்த ஒரு மரத்தடியில் எப்போதும் தியானத்தில் மூழ்கியிருந்தார். அவரிடம் சென்ற செல்வந்தர், ஞானி சற்று கண்விழித்த போது அவரை வணங்கி நின்றார். ஞானியும் அவரிடம், 'யாரப்பா நீ... ? உனக்கு என்ன வேண்டும்... ?' என்று கேட்டார்.

'சுவாமி... ! என்னிடம் அனைத்து செல்வ வளங்களும் நிறைவாக உள்ளது. இருந்தாலும் எனது மன்தில் கவலை சூழ்ந்தவாறே உள்ளது. ஒரு கணமும் நான் ஆனந்தத்தில் திளைத்ததில்லை. நீங்கள்தான், அந்த ஆனந்தமான மன நிலையை எனக்கு அருள வேண்டும்.' என்றார். சற்று நேரம் கண்களை மூடித் திறந்த ஞானி, 'உனது அசையும் சொத்துக்களையும், அசையா சொத்துக்களின் பத்திரங்கள் அனைத்தையும், ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டு வந்து எனக்கு முன்னால் வை... நான் உனக்கு ஆனந்தத்தைக் காட்டுகிறேன்' என்றார்,

ஆஹா... இந்த ஞானி, எனது சொத்துக்களை இரட்டிப்பாக்கி எனக்கு ஆனந்தத்தைக் கொடுக்கப் போகிறர்... என்ற எதிர்பார்ப்பில், ஞானி சொன்ன படி... அனைத்தையும் ஒரு பெரிய மூட்டையாகக் கட்டிக் கொண்டு வந்து ஞானியின் முன்னால் வைத்தார். ஞானி கண்களை மூடி அமர்ந்திருந்தார். செல்வந்தரும் சற்று கண்களை மூடியபடி அமர்ந்தார்.

அவர் கண் விழித்துப் பார்த்த போது, எதிரில் ஞானியைக் காணவில்லை. ஞானியுடன், செல்வந்தர் கொண்டு வந்த மூட்டையயையும் காணவில்லை. பதறிப் போன செல்வந்தர், தான் ஏமந்து போனதை நினைத்து... கவலையால் பித்துப் பிடித்தது போலானார். மரத்தைச் சுற்றிலும் தேடியழைந்து, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல்... மீண்டும் மரத்தடிக்கே வந்து பார்த்த போது... மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார்.

காரணம், ஞானி எப்போதும் போல அந்த மரத்தடியின் கீழ் அமர்ந்திருந்ததும்... அவருக்கு முன்னால் இவர் கொண்டுவந்து வைத்த மூட்டையும் அப்படியே இருந்ததும்தான். செல்வந்தர் ஓடிபோய்... தனது மூட்டையைத் தூக்கி மடியில் வைத்தபடி... ஞானியைப் பார்த்தவாறே ஆனந்தத்துடன் அமர்ந்திருந்தார்.

கண்ணை விழித்த ஞானி, 'பார்த்தாயா அப்பா... ! நீ தேடிக் கொண்டிருந்த ஆனந்தம் எப்போதும் உன்னிடம்தான் இருந்திருக்கிறது. என்ன, அது உனது மடியில் இருக்கும் மூட்டையில்தான் இருந்திருக்கிறது. அது எப்போது, உனது மனதிற்கு மாறுகிறதோ... அப்போதுதான்... அது நிரந்தரமான ஆனந்தமாக மலரப் போகிறது... !' என்றார்.

புரிந்தும்... புரியாமலும்... செல்வந்தர் தனது மூட்டையைக் கட்டிப் பிடித்தபடியே... மகிழ்ச்ச்சியில் திளைத்தபடியே தனது இருப்பிடத்தை நோக்கிச் சென்றார்.

ஸாய்ராம்.


Sunday, May 17, 2020

எண்ணங்களின் வலிமை...





ஒரு ஞானி தினமும் கடற்கரையின் அமைதியான பகுதியில் அமர்ந்து கொண்டு தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது இருப்பு அங்கிருக்கும் எந்த பறவைகளுக்கும் தொந்தரவு இல்லாத நிலையில்... அனைத்து  பறவைகளும் அவருக்கு அருகே பயமற்று உலவத் தொடங்கின.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன்... தினமும் இந்தக் காட்சியை தூரத்தே இருந்து ஆவலுடன் பார்த்துக் கொண்டிருப்பான். தான் கொஞ்சம் அந்தப் பறவைகளை நெருங்கினாலே... அந்தப் பறவைகள் சிதறி ஓடிப் பறப்பதையும்... ஆனால், அத்துனைப் பறவைகளும் ஞானிக்கு மிக அருகிலேயே ஆனந்தத்துடன் இருப்பதையும் கண்ட சிறுவனுக்கு... இது மிகவும் ஆச்சரியத்தை விளைவித்தது.

ஓர் நாள், தியானத்தை பூர்த்தி செய்து விட்டு கடற்கரையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த ஞானியிடம்... இந்தச் சிறுவன் தயங்கித் தயங்கி அருகே வந்து... 'ஐயா... ! உங்களிடம் நான் ஒன்று கேட்கலாமா... ?' என்றான். அவனை புன்சிரிப்புடன் நோக்கிய ஞானி, 'சொல்லப்பா... உனக்கு என்ன வேண்டும்... ?' என்று கேட்டார். 'என்னைக் கண்டவுடனேயே பறந்து போய் விடும் பறவைக் கூட்டங்கள்... உங்களருகே வந்து... ஆனந்தமாக உலவிக் கொண்டிருக்கிறதே அது எப்படி ஐயா... !' என்று கேட்டான்.

சிறுவனின் கேள்வியைக் கேட்டு ரசித்த ஞானி, 'அப்பா... ! நீ சொல்வதை இப்போதுதான் நான் கவனிக்கிறேன். எனது கவனமெல்லாம் தியானத்தில்தான் இருந்தது... என்னைச் சுற்றியல்ல...' என்றார். ஞானியின் பதிலில் உள்ள சூட்சுமத்தை அறிந்து கொள்ளாத சிறுவன், 'ஐயா, எனக்கு அந்தப் பறவைக் கூட்டத்திலிருந்து... ஒரு பறவையை மட்டும் பிடித்துத் தர முடியுமா... ?' என்று கேட்டான்.

சிறுவனின் ஏக்கத்தை உணர்ந்து கொண்ட ஞானி, 'சரி... நாளை வா... உனக்கு ஒரு பறவையைப் பிடித்துத் தருகிறேன். ஆனால் அதை பத்திரமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.' என்றார். மிகவும் மகிழ்ச்சியுடன், 'நன்றி ஐயா...!' என்றான் சிறுவன்.

அடுத்த நாள் மாலை வேலையில் கடற்கரைக்குச் சென்று... தியானத்தில் அமரந்த ஞானியின் மனதில்... சிறுவனின் வேண்டுதல் ஒலித்துக் கொண்டே இருந்தது. கண்களை முடினால்... மனம் ஒருமைப்படவில்லை. சிந்தனை தன்னைச் சுற்றியே இருந்தது. அடிக்கடி கண்களைத் திறந்து தன்னைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே இருந்தார். எப்பொதும் தன்னைச் சுற்றி இருக்கும் பறவைக் கூட்டங்களில்... ஒரு பறவை கூட தன்னருகே வராததைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்.

தனது மனதில் உதிக்கும் எண்ணங்களின் பிரதிபலிப்பின் வலிமையை உணர்ந்து... அதனை மீண்டும் ஒருமைப்படுத்த முயற்சித்தார். ஆனால், அன்றைய தியான முயற்சியில் தோல்வியே விளைந்தது. தனக்காகக் காத்துக் கொண்டிருந்த சிறுவனிடம் வந்து, 'அப்பா... ! பறவைகள் சுதந்திரமானவை. அதைக் கூண்டில் அடைத்து வளர்ப்பதை... அந்தப் பறவைக் கூட்டங்கள் விரும்பவில்லை. இதைத்தான், உன்னிடம் அவைக் கூறச் சொன்னன.' என்றார்.

அடுத்த நாள், ஞானி வளக்கம் போல தியானத்தில் ஈடுபட்டார். தூரத்தே இருந்த பார்த்துக் கொண்டிருந்த சிறுவன், ஞானியைச் சுற்றிலும் பறவைக் கூட்டங்கள் எப்போதும் போல சுற்றியிருந்து மகிழ்ந்திருக்கும் காட்சியை... இப்போது எந்த ஆச்சரியமும் இன்றிப் பார்த்தான்.

ஸாய்ராம்.

Friday, May 15, 2020

பல்லியின் முக்கமும்... பாபாவின் முன்னறிவிப்பும்...




ஒரு முற்பகல் வேளையில்... பாபா தூனிக்கருகில் அமர்ந்திருந்தார். அமைதியாக இருந்த துவரகமாயியில்... அவருக்குப் பின்னாலிருந்து ஒரு பல்லியின் முக்கம் கேட்டது.

அதைக் கவனித்துக் கொண்டிருந்த உள்ளூர்வாசி ஒருவர், 'பாபா...! அந்தப் பல்லி என்ன சொல்கிறது...?' என்று கேட்டார். தூனியிலிருந்து தனது பார்வையை உயர்த்திய பாபா, 'அவளது சகோதரி, அவளைப் பார்க்க இன்று இங்கு வரப் போகிறாள்... அதைத்தான் அந்தப் பல்லி சொல்லுகிறது...!' என்றார்.

பாபா, ஏதோ வேடிக்கையாகத்தான் சொல்லகிறார்... என்று நினைத்த பக்தர்... அமைதியாக அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில், துவாரகமாயிக்கு எதிரில் மண்டப வாயிலில்... குதிரை வண்டி ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய வண்டி ஓட்டி, அருகிலிருந்தவர்களிடம், 'நான் ஔரங்கபாத்திலிருந்து வந்திருக்கிறேன். குதிரைக்கு கொஞ்சம் கொள்ளு வாங்கி வருகிறேன்... அதுவரை, வண்டி இங்கேயே... நிற்கட்டும்...' என்று சொல்லி விட்டு, வண்டிக்குக் கீழே வைத்திருக்கும் ஒரு சாக்குப் பையை எடுத்து உதறினார்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பக்தரிடம், பாபா, 'அங்கு கொஞ்சம் கவனி... !' என்றார். அந்த வண்டியோட்டி உதறிய சாக்குப் பையிலிருந்து... ஒரு பல்லி கீழே விழுந்தது. விழுந்த பல்லி... பக்தரின் ஆச்சரியத்திக்கிடையே... விறு... விறுவென... ஓடிவந்து, துவாரகமாயியின் வாசல் படிகளில் ஏறி... பாபாவிற்கு பின்னாலிருக்கும் சுவற்றின் மீது ஏறியது.

ஏறிய பல்லியை நோக்கி... முக்கமிட்ட பல்லி ஓடிவந்தது. தனது சகோதரியைக் கண்ட சந்தோஷத்தில்... அந்த பல்லியை முத்தமிட்டு மகிழ்ந்தது. பின்னர் சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் துரத்தி பிடித்து தட்டாமாலை விளையாடினார்கள். இதையெல்லாம் வெகு ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பக்தரின் மனதில்...

~ பல்லியின் முக்கத்திலிருந்து... பாபா, எவ்வாறு இந்த அற்புதத்தை ஒரு முன்னறிவிப்பாக அறிவித்தார்... ?

~ ஔரங்காபாத்திலிருந்து அந்த சகோதரி பல்லி வருவதை எவ்வாறு கண்டு பிடித்தார்... ?

~ அந்த வண்டியோட்டிக்குத் தெரியாமல்... அந்த பல்லி எவ்வாறு அந்தச் சாக்குப் பையில் அவ்வளவு நேரமாக ஒளிந்திருந்தது... ?

... என்ற கேள்விகள் எழுந்தன.

எத்தனையோ பல்லிகள் எல்லா நேரங்களிலும் முக்கமிடுகின்றன. அதில் ஏன் இந்தப் பல்லியின் முக்கச் சத்தத்திற்கு மட்டும் இந்த முக்கியத்துவத்தை பாபா கொடுத்தார்... ? அந்த முக்கத்தை, அந்த பக்தர் கவனித்து, ஏன் அதை ஒரு கேள்வியாக மாற்றினார்... ?

இதற்கெல்லாம் பதில் ஒன்றுதான்... இந்த லீலை நமக்கு வெளிப்படுத்துவது... பாபாவின் 'அந்தர் ஞானத்தைதான்'.

ஸாய்ராம்.

தவறுகளும்... தண்டனைகளும்...



'ஒரு நாட்டின்... ராஜா, குற்றம் சாட்டப்பட்டு... தன் முன் கொண்டு வந்து நிறுத்தப்படும் ஒவ்வொருவரையும்... எந்தக் கேள்விகளும் கேட்காமல்... தனது சிம்மாசனத்தில் இருந்து எழுந்து... ஒரு பிரம்பைக் கொண்டு... சரமாரியாக அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

அந்த ராஜாவுக்கான தீர்ப்பு நாளும் வந்தது. ராஜா இந்த மண்ணை விட்டு நீங்கிவிட்டான். அவனை அடக்கம் செய்வதற்காக இடுகாட்டுக்கு சென்றனர். ராஜாவின் உடலைத் தகனம் செய்வதற்கான மேடையில் வைத்து... தகனமும் செய்யப்பட்டது. இடுகாட்டுக் காவல்காரனைத் தவிர அனைவரும் தத்தமது இருப்பிடத்திற்குத் திரும்பி விட... காவல்காரன் மட்டும் எரிந்து கொண்டிருக்கும் உடலுக்குக் காவலாக இருந்தான்.

எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் உடல்... எழும்புகளின் இறுக்கத் தளர்வுகளின் போது... சற்று எழுந்த நிலைக்குச் செல்வது வழக்கம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக... இந்த உடல் மட்டும், மீண்டும்... மீண்டும்... எழுந்து கொள்வதைக் கண்டு, காவல்காரனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

ராஜாவிற்கான இயல்பான குணம்தான் அது என்பதை அறியாதலால்... தனது கையில் இருக்கும் தடியைக் கொண்டு, மீண்டும்... மீண்டும்... அந்த உடலை அடித்து படுக்கும் நிலைக்குக் கொண்டுவந்தான்... காவல்காரன்.'

இந்தக் கதையை அடியேனுக்குக் கூறிய எனது குருநாதர்... 'பார்த்தாயா அப்பா... ! தன்னைத் தேடி நியாயம் கேட்க வந்தவர்களிடம் தவறாக நடந்து கொண்ட ராஜாவுக்கான தண்டனையை...? அவன் தண்டணை கொடுக்கும் போது, அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். இன்று அவன் தண்டணையைப் பெறும் போது, யாருமே பார்க்காமல், தனியே அதை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இதுதான் தவறுகளும்... அதற்கான தண்டனைகளும்...' என்று விளக்கினார்.

குருநாதரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.

ஸாய்ராம்.


Thursday, May 14, 2020

பாபா வழங்கிய ஒன்பது நாணயங்கள்.




'லக்ஷ்மீ பாய் சாவித்ரி'... பாபாவின் பக்தர்களால், லக்ஷ்மீ பாய் என்று அன்புடன் அழைக்கப்படும் பாபாவின் அத்யந்த பக்தர்களில் ஒருவர். அவருக்குத்தான், பாபா தான் தனது மகா சமாதி நாளன்று... தனது அன்புக் கரங்களால்... ஒன்பது வெள்ளி நாணயங்களை வெகுமதியாக அளித்தார்.

பதினாறு வயது பாலகனாக பாபா, சிரீடிக்கு விஜயம் செய்த போது, ஊருக்கு வெளியில் அமைந்திருந்த ஒரு வேப்பமரத்தின் கீழே எப்போதும் மோன தவத்தில் வீற்றிருந்தார். அவரின் தெய்வீக எழிலையும்... அந்த சிறு வயதிலேயே அந்த இளைஞன் பெற்றிருந்த வைராக்கிய தவத்தையும்... கண்டு, அவரின் மீது பக்தி வைத்தவர்தான்... லக்ஷ்மீ பாய்.

அந்த இளைஞனைத் தேடி காடுகளுக்குள் பயணம் செய்து... அந்த இளைஞன் கண்மூடி ஆழ்ந்த தவத்தில் இருந்தாலும்... சோள ரொட்டியைப் பாலில் நனைத்து... அந்த இளைஞனின் வாயைத் திறந்து வலிந்து ஊட்டிவிட்ட தாயார்தான் இந்த லக்ஷ்மீ பாய். அவரின் சேவை, பாபாவின் இறுதி நாள் வரைத் தொடர்ந்தது என்றால்... இது, தாய்க்கும் மகனுக்கும் இடையேயான பந்தத்தைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்... !

எப்போதும் மதிய உணவு வேளையில்... துவாரகமாயியில்... மத்திய ஆராதனை நேரத்திற்குப் பின், பாபாவுக்கு நிவேதனம் செய்யப்பட்ட வித விதமான உணவு வகைகள் தட்டுகளில் நிறைந்து இருக்கும். எல்லோரும், பாபாவுக்கு இருமருங்கிலும் அமர்ந்து உணவு உட்கொள்ளத் தயாராக இருப்பார்கள். ஆனால் பாபாவோ... லக்ஷ்மீ பாயின் சோள ரொட்டிக்காகக் காத்திருப்பார். அவரது சோள ரொட்டி வெஞ்சனத்துடன் வந்து சேர்ந்த உடன்... பாபா உண்ணும் முதல் கவளம் லக்ஷ்மீ பாயீயின் சோள ரொட்டியாகத்தான் இருக்கும்.

பாபாவுக்கும், லக்ஷ்மீ பாயீக்கும் இடையே நடந்த எண்ணற்ற நிகழ்வுகள் பக்தர்கள் அனைவருக்கும் பெரும் பாடங்களாக அமைந்தன. ஒரு நாள் மதிய வேளையில், தமக்கு அருகிலிருந்த லக்ஷ்மீ பாயிடம், 'தாயே... ! எனக்குப் பசிக்கிறது... கொஞ்சம் சோள ரொட்டி கிடைக்குமா... ? என்று பாபா கேட்டார். 'பாபா...! சில நொடிகள் பொறுத்திருங்கள்... உடனே வந்து விடுகிறேன்' என்று சென்ற லக்ஷ்மீ பாயீ, சுடச் சுட சோள ரொட்டியையும்... சர்க்கரை கலந்த பால் மற்றும் வெஞ்சனத்தை பாபாவின் முன் வைத்தார்.

தனக்கு முன் வைத்த சோள ரொட்டியை தட்டுடன் நகர்த்தி எதிரில் வைத்தார்... பாபா. அதுவரை வாலை ஆட்டிக் கொண்டு சுவரோரமாக நின்ற நாயொன்று ஆவலுடன் ஓடி வந்து அந்த தட்டிலிருந்த சோள ரொட்டியை வேக வேகமாக விழுங்கியது. நாய் பசியாறியதும்... தனது வயிற்றைத் தடவிக் கொண்ட பாபா... பசியாறியதற்கு ஏதுவாக ஏப்பம் விட்டு முறுவலித்தார்.

'இந்த நாய்க்கு உணவிடுவதற்காகத்தான்... என்னை இத்தனை வேகமாக சமைக்கச் சொல்லி... கொண்டுவரச் சொன்னீர்களா...?' என்று அவர் பொய்க் கோபம் கொண்டு கடிந்து கொள்கையில்... பாபா, 'எனக்கு உணவு அளிப்பதும்... பசியில் வாடி நிற்கு அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பதும் ஒன்றுதான்... லக்ஷ்மீ...!' என்று பகர்ந்தார்.

இந்த பந்தத்திற்கு பாபா செய்த நன்றிதான்... தனது இறுதி நேரத்தில் அந்தத் தாயாரின் கைகளில் கொடுத்த ஒன்பது... ஒரு ருபாய் வெள்ளி நாணயங்கள். அந்த நாணயங்களை கொடுக்கும் போது... அவர் அப்போதுதான் கடும் காய்ச்சலிலிருந்து எழுந்திருந்தார். தானே எழுந்து... கைக் கிராதியின் மேல் சாய்ந்து கொண்டு... தனது கஃப்னியின் பாக்கெட்டில் கைவிட்டு... முதலில் ஐந்து நாணயங்களையும்... பிறகு நான்கு நாணயங்களையும்... லக்ஷ்மீ பாயீயின் கைகளில் வைத்தார்.

ஏன் இந்த நடைமுறை...? பாகவதத்தில், பகவான் கிருஷ்ணர் உத்தவருக்கு அளித்த உபதேசத்தில்... பக்தர்களின் பாங்கு... ஒரு குருவிடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை 'ஒன்பது குணங்களாக' வரிசைப் படுத்துகிறார். இது 'ஸ்ரீமத் பாகவதத்தின்'... 11 ஆவது காண்டத்தில்... 10 ஆவது அத்தியாயத்தில்... 6 ஆவது சுலோகத்தில்... முதல் வரியில் 'ஐந்தாகவும்'.... இரண்டாவது வரியில் 'நான்காகவும்' வர்சைப்படுத்தப் படுகிறது. அதே கிரமத்தில்தான்... பாபாவும் இந்த நாணயங்களை... பக்தியில் சிறந்த லக்ச்மீ பாயீ சாவித்திரிக்கு அளித்திருக்கிறார். அதை இன்றும் சீரடி செல்லும் பக்தர்கள்... லக்ஷ்மி பாயீயின் வீட்டில் பார்க்கலாம்.

அந்த 'ஒன்பது நாணயங்கள்' மூலம்... 'பகவான் கிருஷ்ணர்' உபதேசித்த... சிஷ்யர்களுக்கான... ஒன்பது உத்தம குணங்களைப் பார்ப்போம்...

1. கர்வமில்லாமல் இருப்பது.
2. பொறாமை இல்லாமல் இருப்பது.
3. சாமர்த்தியம் உள்ளவராக இருப்பது.
4. மமதை இல்லாதவராக இருப்பது.
5. திடமான அன்புள்ளவராக இருப்பது.
6. அவசரப்படாதவராக இருப்பது.
7. அர்த்தத்தை அறிய ஆவலுல்ளவராக இருப்பது.
8. அசூசை இல்லாதவராக இருப்பது.
9. வீண் பேச்சு பேசதவராக இருப்பது.

ஸாய்ராம்.




Monday, May 4, 2020

ஸ்ரீ சாது ஓம் சுவாமிகளின் ஸ்ரீ ரமண வழி, 'சாதனை சாரம்' : சற்சங்கம் - பாடல் 10.





'தண்டென் றன் மாருதமுன் றன்விசிறி வீணெ'ன்றின்
றண்ட ரிறைரம ணாசிரியென் - விண்ட
வுரையுண்மை மேன்மை யுணர்ந்துசற் சங்க
வரையுட் புகுந்துவாழ் வோம்.

சற்று... இந்தப் பாடலை எளிமையாக்கினால்...

தண்டு என்ற நல் மாருதம் முன் நன் விசிறி வீண் என்று
ஈண்ட இறை ரமணாசிரியன் - விண்ட
உரை உண்மை மேன்மை உணர்ந்து சத்சங்க
வரையுள் புகுந்து வாழ்வோம்.

பொருள் :

நல்ல மாருதம் என்ற தென்றல் வீசும் போது... கையில் இருக்கும் விசிறியின் பயன் தேவையற்றது போல... நமது இறைவனான ரமண சத்குரு... தாமாகக் கண்டு உணர்ந்த... ஆத்மாவில் நின்று தன்னை உணரும் 'சத்சங்கம்' என்ற அனுபவ வரையருட்குள் புகுந்து... நாமும் அந்த ஆத்ம சங்கமத்தில் திளைப்போம்.

ஸாய்ராம்.


ஸ்ரீ சாது ஓம் சுவாமிகளின் ஸ்ரீ ரமண வழி, 'சாதனை சாரம்' : சற்சங்கம் - பாடல் 9.





உறக்கத் தறியாம லூட்டல்போற் புத்தித்
திறததர் தா முந்த்தெரியா தேயுள் - ளுறப்புகுந்து
நம்மைத் திருத்திமன நாசஞ்சய் சத்கிருபை
யம்மே ! யளப்பற் றது.

சற்று... இந்தப் பாடலை எளிமையாக்கினால்...

உறக்கதில் அறியாமல் ஊட்டல் போல புத்தித்
திறத்தார் தாமும் தெரியாதே உள்ளுறப் - புகுந்து
நம்மைத் திருத்தி மனம் நாசம் செய்யும் சத் கிருபை
அம்மே ! ஆளப்பற்றது.

பொருள் :

நாம் உறங்கிக் கொண்டிருக்கும் போது நம்மை அறியாது... நமக்கு உணவு ஊட்டும் தாய் போல... நாம் எவ்வளவு அறிவுத் திறமானவர்களாக இருந்தாலும்... அதையெல்லாம் மீறி... நாமறியாமலேயே நமது அகத்துள் புகுந்து நமது மனதை நாசம் செய்து... நம்மை நம் ஆத்மாவுக்குள் நிலை நிறுத்தும் ஆற்றல் மிக்க... அருள் திறம் மிக்க சத்குருக்களின் 'சத்சங்கம்' இருக்கிறதே... அந்த கருணை அம்மா ! அளப்பறியது.

ஸாய்ராம்.

ஸ்ரீ சாது ஓம் சுவாமிகளின் ஸ்ரீ ரமண வழி, 'சாதனை சாரம்' : சற்சங்கம் - பாடல் 8.




நாமறிய நல்ல விவேகந் தலைப்படலை
நாமேசா தித்ததா நம்பாதே - தாமயல்போ
லண்மை யிருக்குஞ்சத் தாள ரருட்டிறத்தா
லுண்மையுந்தி யூட்டப்படும்.

சற்று... இந்தப் பாடலை எளிமையாக்கினால்...

நாமறிய நல்ல விவேகம் தலைப்படலை
நாமே சாதித்தாய் நம்பாதே - தாம் அயல் போல
அண்மை இருக்கும் சத்தாளர் அருள் திறத்தால்
உண்மை உந்தி ஊட்டப்படும்.

பொருள் :

தொடர்ந்து நமக்குள்ளே ஆத்ம விசாரம் என்ற சத்சங்கத்தில் நிலைத்து நிற்கும் போது... நமக்கு விவேகம் என்ற நித்யா நித்ய வஸ்த்துக்கள் பற்றிய தெளிவு ஏற்படும். அதை நாம்தான் சாதித்தோம் என்று நம்பாதே. தமக்கு அயல் போல நம்மை விட்டு விலகியிருந்து... நம்மை வழிநடத்தும்... சத்குருக்களின் அருளினால்தான்... அந்த விவேகம் நமக்கு ஊட்டப்பட்டது... என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேன்டும்.

ஸாய்ராம்.

Sunday, May 3, 2020

ஸ்ரீ சாது ஓம் சுவாமிகளின் ஸ்ரீ ரமண வழி, 'சாதனை சாரம்' : சற்சங்கம் - பாடல் 7.





சற்புருட ரோடே சகவா சஞ் செய்யுங்கா
னித்தியா நித்தியத்தி நிண்ணயமும் - பக்தியும்
உள்ளத்திற் றாமேமே லோங்கி வளருவதைத்
தெள்ளத் தெளிந்தறிய லாம்.

சற்று ... இந்தப் பாடலை எளிமையாக்கினால்...

சத்புருஷரோடு சகவாசம் செய்யும்கால்
நித்தியா நித்திய நிர்ணயமும் - பக்தியும்
உள்ளத்தில் தாமே மேலோங்கி வளருவதைத்
தெள்ளந்த் தெளிந்து அறியலாம்.

பொருள் :

சத்சங்கம் என்பது, சத்தியம் என்ற ஆத்மாவுடன் நித்தியமாக சகவாசம் செய்வது. அவ்வாறு செய்யும் போது... பக்தியும்... நித்தியா நித்திய வஸ்துக்களை பகுத்தறியும் விவேகமும்... தாமே தமக்குள் ஓங்கி வளர்வதை தெள்ளந் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஸாய்ராம்.

Saturday, May 2, 2020

ஸ்ரீ சாது ஓம் சுவாமிகளின் ஸ்ரீ ரமண வழி, 'சாதனை சாரம்' : சற்சங்கம் - பாடல் 6.





சத்சங்க  மென்னுந் தனிபெரும் பாகியச்சீ
ருற்றொர்க்கீ டில்லை யுலகேழின் - பொற்குவையும் ;
தாண்டரிய வஞ்ஞான சாகரத்தைத் தாண்டியவ
ரீண்டரிய வீடுறலா லே.

சற்று... இந்தப் பாடலை எளிமையாக்கினால்...

சத்சங்கம் என்னும் தனிப்பெரும் பாக்கியச் சீர்
பெற்றோர்க்கு ஈடில்லை உலகு ஏழின் - பொற்குவையும்
தண்டரிய அஞ்ஞான சாகரத்தைத் தாண்டியவர்
ஈண்டு அரிய வீடுறலாலே.

பொருள் :

சத்சங்கம் என்ற... தனது ஆத்ம சங்கமத்தில் ஊன்றியிருக்கும் பெரும் பாக்கியத்தை பெற்றவருக்கு... இந்த ஏழு உலகத்தின் பொன்னாலான குவியல்களைக் கொண்டு வந்து குவித்தாலும்... அதற்கு ஈடாகாது. ஏனெனில், தண்டுவதற்கு அரிய இந்த பிறவி என்ற பெரும் சாகரத்தை அவர்... இந்த ஆத்ம சங்கமம் என்ற சத்சங்கத்தில் ஈடுபட்டு அடைவதாலே.

ஸாய்ராம்.

Friday, May 1, 2020

ஸ்ரீ சாது ஓம் சுவாமிகளின் ஸ்ரீ ரமண வழி, 'சாதனை சாரம்' : சற்சங்கம் - பாடல் 5.





சற்சங்க மென்றிவரைச் சார்வதினுந் தான் றனித்து
நிற்சங்க முற்றிருந்த னேரியதா (ம்) - நிற்சங்கம்
மெள்ள மெள்ள வேனு முனை மேன் மேலும் பற்றறுத்துக்
கொள்ளுதவி செய்துகொடுக் கும்.

சற்று... இந்தப் பாடலை எளிமையாக்கினால்...

சத்சங்கம் என்று இவரைச் சர்வதினும் தான் தனித்து
நிர்சங்கம் முற்றிருந்தல் அரியதாம். நிர்சங்கம்
மெல்ல மெல்ல வேணும் உனை மென்மேலும் பற்றறுத்துக்
கொள்ள உதவி செய்து கொடுக்கும்.

பொருள் :

ஆத்மசங்கமத்திற்காக  இன்னொருவரைச் சார்ந்து... அவரின் உதவியோடு... தனது ஆத்மாவில் நிற்க முயலுவதைவிட... தான் தனித்து தனிமையில் தனது ஆத்மாவில் நிலைத்து நிற்பதுதான் அரியதான செயல். இவ்வாறு தனித்து ஆத்மாவில் நிலைத்து நிறக் முயல... மெல்ல மெல்ல தான் பற்றறுத்துக் கொள்ள இந்த முயற்சி உதவி செய்யும். ஆகவே, சத்சங்கத்தை விட நிர்சங்கமே உத்தமமானதாகும்.

ஸாய்ராம்.

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...