சர் தாமஸ் மன்றோ... ஒரு சாதாரண பிரிட்டிஷ் இராணுவ சிப்பாயாக 1789 ல் அன்றைய சென்னை மாகணத்திற்கு வந்து சேர்ந்தார். அவரது பணி சென்னை மாகாணத்தைச் சுற்றி 1807 வரை தொடர்ந்தது.
இராணுவ சிப்பாயாக இருந்தவர்... படிப்படியாக இராணுவ அதிகாரியாக உயர்ந்தார். இராணுவ அதிகாரியாக பொறுப்பேற்ற அவரது பணி... வருவாய் ஆய்வு... மற்றும் மதிப்பீட்டுக் கொள்கைகளை வரையரை செய்வது... என்ற துறைகளில் தொடர்ந்தது.
1807 ல் அவரை இங்கிலாந்து அரசு... அரசுப் பணிகளுக்காக திரும்பி அழைத்துக் கொண்டது. அவரது நிர்வாகத் திறமையையும்... இந்திய மக்களின் மீதும்... இந்திய கலாச்சாரத்தின் மீதும்... அவரது உள்ளார்ந்த வெளிப்பாடுகளை உணர்ந்து கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம்... மீண்டும் அவரை 1814 ஆம் ஆண்டு, அன்றைய சென்னை மாகாணத்தின் கவர்னராக நியமித்தது.
சென்னை மாகானத்தின் கவர்னராக அவர் பணியாற்றிய காலங்களில்... வருவாய் மற்றும் மதிப்பிடுகளில் அவர் பெற்றிருந்த அனுபவம்... புதிய முறையிலான வருவாய் மற்றும் மதிப்பீட்டுக் கொள்கைகளின் சீரமைப்புகள்... வரையறைகளாக... அன்றும், இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
வரி மதிப்பிட்டுக் கொள்கைகளில் மாற்றங்கள் செயத பிரிட்டிஷ் பேரரசு...கோவில்களுக்கு மானியங்களாகக் கொடுத்த நிலங்களை... வாரிசுகள் இல்லாத பக்ஷத்தில்... அரசாங்கமே கையகப்படுத்திக் கொள்ளும்... சட்டமொன்றை அமுல்படுத்தியது. நாடு முழுவதும்... அந்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பக்தர்களின் மத்தியில் எழுந்தது.
அன்றைய பெல்லாரி மாவட்டம்... சென்னை மாகாணத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. பெல்லாரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் 'பகவான் ஸ்ரீ ராகவேந்திரரது மடத்திற்குச்' சொந்தமான நிலங்களையும்... அதன் மானியத்திற்கான காலம் முடிந்திருதபடியால்... அரசாங்கம் கையப்படுத்த ஆணை பிறப்பித்தது.
அரசின் ஆணைக்கு எதிராக பக்தர்கள் போர்க்கொடி பிடித்தனர். அந்தப் போராட்டத்தின் வலிமை கூடுவதை அறிந்த அரசு நிர்வாகம்... கவர்னர். சர் தாமஸ் மன்றோவின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து. அந்த குழு தனது ஆய்விற்காக 'மந்த்ராலாயம்' வந்து சேர்ந்தது.
இந்திய மக்களின் மத நம்பிக்கைகளில் மரியாதை வைத்திருந்தவர் தாமஸ் மன்றோ. அவரது பதவிக் காலத்தில்தான்... திருப்பதி தேவஸ்தானத்திற்கான... திட்டமதிப்பீடுகளை வரையறை செய்திருந்தார். அந்த நிகழ்வின் நியமம் இன்றும் சர் தாமஸ் மன்றோவின் பெயரில்... திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தினரால்... கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மந்த்ராலாய மட நிர்வாகம் கொடுத்த ஆதாரங்களை ஆய்வு செய்தவருக்கு... உள்ளே இருந்த பிருந்தாவனத்தில்... 'பகவான் ஸ்ரீ ராகவேந்த்ரப் பிரபு'... 1671ஆம் ஆண்டில்... ஜீவ சமாதி அடைந்திருப்பதை அறிந்து கொண்டார். தன்னுடன் வந்திருந்தவர்களுடன்... மந்த்ராலய மகானின் பிருந்தாவன வாயிலுக்கு முன் நின்றிருந்தவர்... தன்னை யாரோ உள்ளேயிருந்து அழைப்பது போல... தனது காலணிகளையும்... தொப்பியையும்... கழட்டி வைத்து விட்டு... பிருந்தாவனத்தை நோக்கிச் சென்று... வணக்கம் செலுத்திவிட்டு... சத்தமாகப் பேச ஆரம்பித்தார்.
அவருடன் சென்ற குழுவினருக்கும்... மந்த்ராலயத்தில் குழுமியிருந்த பக்தர்கள் மற்றும் மடத்தினருக்கும்... இது மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர் யாரிடமோ... ஆங்கிலேய அரசு வெளியிட்டிருந்த அரசாணை பற்றி விரிவாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரது விளக்கத்திற்குப் பிறகு, வேறு யாரோ... அவருக்கு சில விளக்கங்கள் கொடுப்பதைக் கேட்டுக் கொண்டிருப்பது போல... தலையை அசைத்து, அசைத்து அனைத்து விளக்கங்களையும் உள் வாங்கிக் கொண்டார். இந்த விவரணங்கள் அனைத்தும் முடிவுற்றதற்கு சாட்சியாக... தனது தலையை ஒப்புதலாக அசைத்துவிட்டு... ஆங்கிலேய முறைப்படி... ஒரு சல்யூட் அடித்து விட்டு... மிக மரியாதையாக பிருந்தாவனத்தை விட்டு வெளியெ வந்தார்.
வெகு நேர உரையாடலை முடித்துக் கொண்டு வெளியேறியவரிடம்... அவர் உள்ளே யாரிடம் பேசிக் கொண்டிருந்தார் என்று கேட்ட போது, 'பிருந்தாவனத்திற்கு அருகே காவி உடை அணிந்த ஒளிவீசும் கண்களுடன் இருந்த ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நான் அரசு மானியங்களைப் பற்றிய விவரங்களை அளித்துக் கொண்டிருந்தேன். அவரும் அது குறித்து என்னிடம் உரையாடி...மடத்தின் சொத்து பற்றிய சரியான விளக்கங்களை எனக்குத் தந்துவிட்டார். இந்த இடம் மடத்திற்குத்தான் சொந்தம் என்பதில் எந்த ஐயமும் இல்லை' என்றார்.
அவரது ஒளி வீசும் கண்கள்... கம்பீரமான குரல்... நேர்த்தியான ஆங்கில உச்சரிப்பு... ஆகியவற்றால் மிக வியந்து போனவர், குழுவினரிடம், 'ஏன், நீங்கள் அவரைக் காணவில்லையா... ?' என்று கேட்டார். தங்கள் கண்களுக்கு யாரும் தெரியவில்லை என்று கூறியவர்கள்... அவரிடம் உரையாடியவர் சாட்சாத் 'ராகவேந்திரப் பிரபுதான்' என்று உணர்த்தினர்.
கடந்த நூற்றான்டில் காலமான மகான்... தனக்கு முன் நேரில் தோன்றி... தனது பாஷையான ஆங்கிலத்தில் பேசி... பிரச்சனையை தீர்த்த விதம் பற்றி ஆச்சரியத்தில் மூழ்கிப் போன... சர் தாமஸ் மன்றோ... தனக்குக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி உளம் மகிழ்ந்து போனார்... அன்றிலிருந்து பகவான் ராகவேந்திரரின் பகதருமானார்.
அரசுக்கும், ஆளுனருக்கும் அந்த இடம் மடத்திற்குச் சட்டப் படி உரிமையுள்ள நிலம்தான்... என்ற தனது ஆய்வறிக்கையை அனுப்பிவைத்தார். பின்னர், தற்காலிக ஆளுனராக அவர் பொறுப்பேற்றதும்... அவர் இட்ட முதல் கையெழுத்து...மடத்திற்கு நிலம் அளிப்பது தொடர்பான கோப்பில்தான்.
இந்த சம்பவம்... அன்றைய சென்னை மாகாண கெஜட்டிலும் (அரசு ஆவணக் குறிப்பு)... மடத்தின் ஆவணக் குறிப்பிலும்... இடம் பெற்றுள்ளது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment