சற்சங்க மென்றிவரைச் சார்வதினுந் தான் றனித்து
நிற்சங்க முற்றிருந்த னேரியதா (ம்) - நிற்சங்கம்
மெள்ள மெள்ள வேனு முனை மேன் மேலும் பற்றறுத்துக்
கொள்ளுதவி செய்துகொடுக் கும்.
சற்று... இந்தப் பாடலை எளிமையாக்கினால்...
சத்சங்கம் என்று இவரைச் சர்வதினும் தான் தனித்து
நிர்சங்கம் முற்றிருந்தல் அரியதாம். நிர்சங்கம்
மெல்ல மெல்ல வேணும் உனை மென்மேலும் பற்றறுத்துக்
கொள்ள உதவி செய்து கொடுக்கும்.
பொருள் :
ஆத்மசங்கமத்திற்காக இன்னொருவரைச் சார்ந்து... அவரின் உதவியோடு... தனது ஆத்மாவில் நிற்க முயலுவதைவிட... தான் தனித்து தனிமையில் தனது ஆத்மாவில் நிலைத்து நிற்பதுதான் அரியதான செயல். இவ்வாறு தனித்து ஆத்மாவில் நிலைத்து நிறக் முயல... மெல்ல மெல்ல தான் பற்றறுத்துக் கொள்ள இந்த முயற்சி உதவி செய்யும். ஆகவே, சத்சங்கத்தை விட நிர்சங்கமே உத்தமமானதாகும்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment