பாபாவின் புகழைப் பரப்பியவர்களில்... தாஸ்கணு என்ற கதா கீர்த்தனம் செய்யும்... பாபாவின் பக்தரின் சேவை மகத்தானது.
அவர் எப்போதும் மாலையணிவித்த... பாபாவின் திருவுருவப் படத்தை... தனது கதா கீர்த்தனத்திற்கு முன்... மேடையில் வைப்பது வழக்கம். அது போன்றதொரு, கதா கீர்த்தனம்... பம்பாய்ப் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள 'கௌபினீஸ்வரர் ஆலயத்தில்' ஒரு மாலை நேரம் நிகழ்ந்தது.
சோல்கர்... ஒரு சாதாரன குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பம்பாய் நகர நீதிமன்றத்தில்... தற்காலிக எழுத்தராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சோல்கரின் சொற்ப வருமானத்தில்தான் அவரது குடும்ப நிர்வாகமே நடந்து கொண்டிருந்தது. சோல்கர், வரப் போகும் குமாஸ்தா தேர்வுக்கான பரீட்சைக்காகக் காத்துக் கொண்டிருந்தார். அதில் அவர் வெற்றி பெற்றால்தான்... குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்டு... நிம்மதியான வாழ்வை அளிக்கமுடியும்... என்ற நிலையில்... எப்போதும் கௌபினீஸ்வரரை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அன்றைய தரிசன நேரத்தில்தான்... தாஸ்கணு அவர்களின் கதா கீர்த்தனத்தை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. கதா கீர்த்தனத்துடன்... பாபாவின் திருவுருப் படத்தையும் தரிசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது, அன்றைய கதாகாலாட்சேபமும்... சோல்கரின் எண்ணங்களுக்கு ஏற்ப பாபாவின் வரலாற்றைப் பற்றியதாக இருந்தது. பாபாவின் சரித்திரத்தைக் கேட்ட சோல்கர், மனதில் ஒரு சங்கல்பத்தை ஏற்றுக் கொண்டார்.
அது, 'பாபா, அடியவனின் குடும்பமோ... ஒரு ஏழைக் குடும்பம். அடியவனின் எதிர் காலமே... அந்த குமாஸ்தா வேலையில்தான் அடங்கியிருக்கிறது. அந்தப் பரீட்சையில் மட்டும் நான் தேறிவிட்டால்... நான் சீரடி வந்து... உங்களை தரிசனம் செய்து... தட்டு நிறைய கல்கண்டுகளை சமர்ப்பிக்கின்றேன். அதுவரை, எனக்குப் பிடித்த தேநீரை... சர்க்கரை இல்லாமல் எடுத்துக் கொள்வேன். பாபா எனக்கு அந்த குமாஸ்தா வேலையைப் பெற்றுக் கொடுங்கள்... !' என்பதுதான்.
சோல்கரின் சங்கல்பத்தை... பாபா வெகு விரைவில் நிறைவேற்றினார். பரீட்சையில் தேறி... வெற்றி பெற்று... குமாஸ்தா பதவியிலும் அமர்ந்து விட்டார். ஆனால், ஒரு ஏழை மனிதனின் பிரார்த்தனை நிறைவேற்றம் என்பது... 'ஒரு ஏழை மனிதன் அவனது வீட்டின் நிலைபடிக் கட்டை தாண்டுவது... போன்ற... மிகக் கடினமானதுதானே... !' ஆதலால், சர்க்கரைக்கான செலவைக் குறைத்து... கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமித்து... ஒரு நிறைந்த நாளில், கற்கண்டு மற்றும் பூஜைக்கு உறிய பொருட்களோடு... பாபாவை தரிசனம் செய்ய வந்தார்.
பாபாவை தரிசனம் செய்து... பூஜைக்கான பொருட்களோடு... தட்டு நிறைந்த கற்கண்டுகளையும் சமர்ப்பித்தார். பூஜையைப் பூர்த்தி செய்து... பாபாவின் பாதங்களில் நமஸ்காரம் தெரிவித்து... கை நிறைய கற்கண்டுகளை அள்ளி பாபாவின் கைகளில் சமர்ப்பித்தார். புன்னைகையோடு அந்தக் கற்கண்டுகளை ஏற்றுக் கொண்ட பாபா, இந்த தரிசனத்திற்கு உதவிய சீரடியைச் சேர்ந்த ஜோக் என்ற பாபாவின் அத்யந்த பக்தரிடம், ' பாவூ, அவரை அழைத்துச் சென்று, அவருக்குப் பூரிதமாக... நிறைந்த சர்க்கரையுடன் கூடிய... தேநீரைக் கொடு... !' என்றார்.
பாபாவின் குறிபுணர்த்திய சொற்களைக் கேட்டு, கண்களில் ஆனந்த பாஷ்யம் பொங்க சோல்கர் பேரானந்தத்தில் மூழ்கிப் போனார். ஏனெனில், அவரது சங்கல்பமோ, அவருக்கும் மட்டும் தெரிந்த ரகசியம். அதை அவர் யாரிடமும் வெளிப்படுத்தியதில்லை. ஆனால், இந்த மகனோ, அவரது உள்ளத்தின் ரகசியக் கதவுகளையெல்லாம் திறந்து... 'உனது சங்கல்பங்களையும்... உனது வாழ்வு நிலையையும்... நான் அறிவேன்... !' என்று உணர்த்திவிட்டார். சோலகர் வியந்து போனார்... 'என்னே இந்த அற்புத மகானின் அந்தர் ஞானம்... !'.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment