Tuesday, December 31, 2019

'கனகாதாரா ஸ்தோத்திரம்' - 'குருவின் கருணை', ஒரு பார்வை :






அங்கம் ஹரே புலக பூஷ்ணமாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகாலாபரணம் தமாலம்
அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலா
மாங்கல்யதாஸ்து மம மங்கல தேவதாய :

'மலரிடம் நேயம் வைத்த வண்டுகள் போல... நீல மேகத்தைப் போன்ற திருமாலின் மேல் நீ வைத்த நேயத்தால்தான்... திருமால் நிறைந்த செல்வத்துக்கு அதிபதியாகிறார். அவர் மீது வைத்து அந்த அழகிய கண்கள் இரண்டையும்...  அடியேனான என் மீதும் வைத்தாயென்றால்... கடல் மீது வாழும் அந்த திருமால் போல... உந்தன் கருணையால் செல்வம் பெற்று... கண் நிறைந்த வாழ்வைப் பெறுவேன். கமலத்தாயே ! கண் வைப்பாய் நீயே !!...'

இந்த சுலோகத்தை முதலாகக் கொண்டு 'பகவான் ஆதிசங்கரர்'... ஒரு எளிய, ஏழ்மை நிலையில் தத்தளித்த, ஒரு பெண்ணின் மீது கொண்ட கருணைதான்... 'கனகதாரா ஸ்தோத்திரமாக' மலர்ந்தது.

கண்களை மயக்கும் தோற்றம். நிறைந்த தேஜசுடன் கூடிய திருமுகம். உலர்த்திக் கட்டிய வஸ்திரம். தேகம் முழுவதும் முறையாகத் தரித்திருந்த விபூதி. தோளில் 'உஞ்ச விருத்திக்கான' சோலி. கைகளில் தாளக் கருவி. இந்த சுந்தர ரூபத்துடன்... வீதியில் நுழையும் சிறுவனைப் பார்க்கின்றாள் இந்தப் பெண்.

பகவானைச் சரணடைந்தவர்களுக்கான கடமைகளுள் மிக முக்கியமான கடமை...'உஞ்சவிருத்தி'. இந்த நிலையை அடைந்த மகன்னீயர்கள்... தமக்கான உணவுக்காக எந்த உடல் சிரமத்தையும் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. கிரகஸ்தாரர்கள் என்ற இல்லறத்தாரிடம் சென்று... பிக்க்ஷை ஏற்க வேண்டும்.

அதற்காக, ஒரு 'சோலி' என்ற நான்கு புறமும் சேர்த்து முடிச்சிட்ட ஒரு துணியை தோளில் சுமந்து... கைகளில் தாளக் கருவியுடன்... பகவானது ஸ்தோத்திரங்களை ஸ்மரித்தபடியே... ஒவ்வொரு வீட்டின் வாயிலில் நின்று... 'பகவதி பிக்க்ஷாந்தேஹி !' என்று மூன்று முறை அழைப்பது முறை.

சிந்தனை பகவானின் திருவடிகளில்தான் நிலைத்திருக்க வேண்டும். மூன்றாவது முறை, பிக்ஷைக்கு அழைத்த பிறகு... தாமாகவே அடுத்த இல்லறத்தாரை நோக்கி நகர்ந்து விட வேண்டும். யார் வருகிறார்கள் ? அவர்கள் எதை சோலியில் சேர்க்கிறார்கள் ? இது பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல்... உஞ்சவிருத்தியை பூரணம் செய்து... சேர்ந்த உணவுப் பொருள்களைப் பிரித்து... சமைத்து... அதை இறைவனுக்கு நிவேதனம் செய்து... பின்னர், தன் பசியை ஆற்றிக் கொள்வதுதான்...உஞ்ச விருத்தியின் மகிமை.

இதைத்தான்... அந்த சிறுவன் மேற்கொண்டிருக்கிறான். இந்தக் காட்சியைக் கண்ட இந்தப் பெண்ணுக்கோ பதைபதைப்பு. காரணம்... மிக ஏழ்மையான வாழ்வு... வீட்டிலே உணவுக்கென ஒரு தானியம் கூட இல்லாத வறுமை... தண்ணீரை மட்டுமே ஆகாரமாக உட்கொள்ளும் தன்னால்... அந்தச் சிறுவனுக்கு எதைக் கொடுக்க முடியும்...? அவனோ, ஒவ்வொரு வீடாக பிக்க்ஷை ஏந்தி... தனது வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறான்.

பதைபதைப்புடன் விட்டில், அங்கும்... இங்கும்... தேடிப் பார்க்கிறாள். என்றோ, சுவாமிக்கு நிவேதனம் செய்த, காய்ந்து... உலர்ந்த... சில நெல்லிக் கனிகள்... சுவாமியின் மடியில் இருப்பதைக் கண்டு... அதைக் கையில் அள்ளிக் கொண்டு... வாசலின் நிலைகளுக்குள்ளே மறைந்து நின்று பார்க்கின்றாள்.

அந்தப் பாலகனோ... முன் விட்டில் பிக்க்ஷையேந்திய பின்... தன் வீட்டை நோக்கி நடந்து வரும் ஓசை கேட்கிறது. இறைவனை மனதாரப் பிரார்த்திக்கின்றாள். 'ஓ, இறைவா ! இந்த பாலகனை நமது வீட்டைக் கடந்து போக வைப்பாய்... கையில் இருக்கும்... உலர்ந்த... காய்ந்து போன... எதற்கும் உதவாத... இந்த நெல்லிக் கனிகளையா... இந்த சிறுவனுக்கு அளிப்பது  ? இறைவா,  என்னைக் காப்பாய் !..' என்று  கலங்கி நிற்கின்றாள்.

ஆனால், சிறுவனோ... அவள் வீட்டு வாசலில் வந்து நின்று... 'தாயே ! பகவதி பிக்க்ஷாந்தேஹி... !' என்று முதல் முறை அழைக்கின்றான்.

இவளின் நிலை 'இரு தலைக் கொள்ளி எறும்பாகத்...' தவிக்கிறது.

தனது வறுமையை, அண்டை வீட்டார்கள் அறியாதபடி இதுவரை பார்த்துக் கொண்டவளுக்கு... பிக்க்ஷையிட்ட அனைவரும், அவரவர் வீட்டின் வாயிற்படியில் நின்று... இந்த சிறுவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது... பெரும் தடையாக இருக்கிறது.

விருத்திக்கான சோலியில் ஏதும் இட்டு... பின், அந்த பாலகனை விழுந்து வணங்கா விட்டால்... தனது வறுமை நிலை அனைவருக்கும் தெரிந்துவிடும். 

அந்தச் சோலியில், இந்தக் காய்ந்த நெல்லிக் கனிகளை சேர்த்தாலோ... சோலியை அவிழ்த்துப் பிள்ளை பார்க்கும் போது... இந்த நெல்லிக் கனிகளை இட்டவர்களை... நிந்திப்பானோ, என்ற கவலை ஒருபுறம்.

மீண்டும், வாசலில் பாலகனின் குரல்... இரண்டாவது முறையாகவும், பின் மூன்றாவது முறையாகவும்... ஒலிக்கிறது.

பதை பதைப்புடன், ஓடிச்சென்று... குனிந்த தலையுடன்... தொங்கும் சோலியில் யாரும் அறியாவண்ணம் அந்த உலர்ந்த கனிகளைச் சேர்த்துவிட்டு... மன்னிப்பு கேட்கும் தொனியில்... அந்தச் சிறுவனது பாதத்தில் வீழ்ந்து வணங்கிவிட்டு... வேகமாகத் திரும்பி வந்து... நிலைக் கதவுக்குப் பின் அழுதுகொண்டே நின்றிருந்தாள்.

அவளது கண்ணீர்... தனது பாதங்களில் சூடாக விழுவதை அந்தச் சிறுவன் உணர்கிறான். தனது சிந்தையை... பகவானின் திருப்பாதங்களிலிருந்து திருப்பி... தனது கண்களை மூடியபடி நின்ற அந்தப் பாலகனின் மனத்திரையில்... அந்த விட்டின் சூழல்கள் அனைத்தும் தெளிவாகத் தெரியக் கண்டான்.

பகவானை மனதில் நிறுத்தி... 'தாயார் மஹாலக்ஷ்மியிடம்...' அந்தப் பெண்ணுக்காக... கருணையுடன்... அந்தப் பாலகன் செய்த  பிரார்த்தனைதான்... 'கனகதார ஸ்தோத்திரமாக...' அந்தப் பெண்ணின் வீட்டின் வாசலில் மலர்ந்தது.

சற்று நேரம் பிரார்த்திவிட்டு... அந்த சிறுவன் திருவாய் மலரும் அந்த 'சுலோகங்களை'... கண்களில் நீர் பெருகக் கேட்டுகொண்டிருந்தாள் அந்தப் பெண். சுலோகங்களை உதிர்த்துவிட்டு... அடுத்த விட்டை நோக்கி... பிக்க்ஷைக்காக நகர்ந்து விட்டான்... அந்தப் பாலகன். நிகழ்ந்த நிகழ்வுகளை எண்ணி... மனம் வருந்தி... சுவாமி மாடத்திற்கு முன்... அழுது நின்ற பெண்ணுக்கு காத்திருந்ததோ... ஒரு அதிர்ச்சி !

ஆம்... அவளது விட்டின் நடு முற்றத்தில்... குவியலாகக் குவிந்திருந்தது 'நெல்லிக் கனிகள்'. அருகில் சென்று பார்த்தபோது... ஆச்சரியத்தால் வியந்து போனாள். ஏனெனில், அத்தனையும்... 'தங்க நெல்லிக் கனிகள்'.

பக்தனின் நிலையை பகவான் அறிவான். அந்த நிலையை மாற்ற... பாகவதனை அனுப்பி வைப்பான்.

இதைத்தான்... 'ஆதிசங்கர பகவத் பாதர்' தமது வாழ்வில் நடத்திக் காடினார்.

ஸாய்ராம்.


Monday, December 30, 2019

2020 - ஆங்கில ஆண்டுப் பிறப்பு - 'ஜோதிட ரீதியில் ஒரு ஆய்வு'


2020 ஆம் ஆண்டு, 01.01.2020 அன்று 'புதன் கிழமை', 12.01 மணிக்கு பிறக்கிறது. அந்த நேரத்திற்கான ஜாதகத்தை, 'அசல் 28 - நெ - விகாரி வருஷ சுத்த வாக்கியப் பஞ்சாங்கத்தின்' மூலம் கணித்து அளிக்கப்படுகிறது.




லக்னம் - கன்னி,  நவாம்ஸ லக்னம் - மீனம், இராசி - கும்பம், நட்சத்திரம் - சதயம் 4 ஆம் பாதம், தசா புத்தி இருப்பு - ராகு பகவானின் தசாவில் 01 வருடம்; 03 மாதம்; 28 நாட்கள், நடப்பு தசா, புத்தி - 23.10.2019 முதல் 23.04 2020 வரை 'ராகு பகவானின்' தசாவில் 'சந்திர பகவானின் புத்தி'.

லக்னாதிபதியாகிய 'புத பகவானும்', பஞ்சாமாதிபதியாகிய 'சனி பகவானும்', பாக்கியாதிபதியாகிய 'சுக்கிர பகவானும்'... 'திரி கோணாதிபதிகளாக'... ஜாதகத்தில் வலுத்துக் காணப்படுகிறார்கள்.

இந்தப் புது வருடப் பிறப்பின் போது, ஜாதகத்தில் அமைந்திருக்கிற அனைத்துக் கிரகங்களும்... 'குரு பகவானின்' தொடர்புடனும்... அவரின் கட்டுப்பாட்டுக்குள்ளும்  அமைவது... 'குருவின் அருளன்றி' வேறேது...!

# லக்னாதிபதியாகிய... 'புத பகவானும்', பஞ்சாமாதிபதியாகிய... 'சனி பகவானும்'... குரு பகவானுடன் இணைந்திருக்கிறார்கள்.

# தைர்ய-அட்டமாபதியாகிய... 'செவ்வாய் பகவானை', குரு பகவான் தனது நட்சத்திர சாரத்தால் இயக்குகிறார்.

# சுகம்-களத்திர ஸ்தானாதிபதியாக... 'குரு பகவானே' ஆட்சி பெற்று பலத்துடன்... தனது விட்டிலேயே அமைகிறார்.

# தன-பாக்கியாதிபதியாகிய... 'சுக்கிர பகவான்' அமர்ந்த ஸ்தானாதிபதி 'சனி பகவான்', குரு பகவானுடன் இணைந்திருக்கிறார்.

# லாபாதிபதியாகிய 'சந்திர பகவான்' அமர்ந்த ஸ்தானாதிபதி 'சனி பகவான்'... சந்திர பகவானைப் பார்த்தும்... குரு பகவானுடன் இணைந்தும் இருக்கிறார்.

# சுக-சயன-விரயாதிபதியாகிய... 'சூரிய பகவான்' குரு பகவானுடன் இணைந்து இருக்கிறார்.

# 'கேது பகவான்'... குரு பகவானை இயக்கினாலும்... சுக ஸ்தானத்தில் அவருடன் இணைந்து, அவரது வீட்டிலேயே சங்கமமாகியிருக்கிறார்.

# 'ராகு பகவான்'... தசம் கேந்திரமான ஜீவன் ஸ்தானத்தில்... தனது சுய சாரத்தில் இருந்தாலும்... குரு பகவானின் பார்வையைப் பெறுகிறார்.

இருப்பினும்... 29.11.2018 லிருந்து 23.10.2019 வரை நடந்த 'ராகு பகவானின் தசாவின் சூரிய பகவானின் புத்திக் காலம்'... வீடு, நாடு என்ற இரு நிலைகளையும்... ஜீவனம் என்ற வெற்றி எதிர் நீச்சலுடனும், நிர்வாகம் என்ற போராட்டத்துடனும், அதில் தர்மம்-நியாயம்-நேர்மை என்ற நிலைகளைக் கடைப்பிடிக்க நேர்ந்ததில் இருந்த மன உளைச்சலுடனும்... கடந்து போக வைத்தது. விரயங்கள்... அது 'மன நிம்மதியாக இருந்தாலும்', 'பொருளாதர ஏற்றமாக இருந்தாலும்'...  அதில் 'நிறைவு இல்லாமல்' இருக்கலாம், ஆனால், 'கடமைகளை பூரணமாக்கியதில்' என்னவோ... திருப்திகரமாக அமைந்தது.

நடந்து கொண்டிருக்கும்... 'சந்திர பகவானின்' புத்திக் காலமான... 23.10.2019 லிருந்து 23.04.2020 வரையிலான காலம்... வீடு, நாடு என்ற இரு நிலைகளையும்... பெரும் போராட்டகளமாக மாற்றியிருப்பதை... 'சந்திர பகவானின்' அமைவே சுட்டிக் காட்டுகின்றது. லாபாதிபதியாகிய 'சந்திர பகவான்' ருண-ரோக-சத்ரு ஸ்தானத்தில்... 'ராகு பகவானின்' சாரம் பெற்று... சுக-சயன-விரய ஸ்தானத்தை பார்ப்பதிலிருந்தே... இதை உணரலாம்.

இந்த அமைவு,

* மன நிம்மதியை இழக்கவைக்கும்.
* நிம்மதியை இழந்த மனதில் குழப்பங்களை ஏற்படுத்தும்.
* அதனால், குடும்ப-பொருளாதார நிலைகளில் முடிவுகள் எடுப்பதில் தயக்கமும், தாமதமும் ஏற்படும்.
* தேவையான, நேர்மையான, தைர்யமான, தர்மமான, கடமைகளுக்கான முடிவுகளும் சோதனைக்குள்ளாகும்.

தொடரப் போகும்... 'செவ்வாய் பகவானின்' புத்திக் காலமான... 23.04.2020 லிருந்து 29.04.2021 வரையிலான காலம்... மிக நல்ல காலமாக அமைகிறது. தைர்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கின்ற 'செவ்வாய் பகவானை' இயக்குவது... 'குரு பகவானே'. மேலும்... 'கெட்டவன் கிட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்' என்ற நிலையில் 'செவ்வாய் பகவான்'... அம்ஸத்தில் 'நீச நிலையில்' அமர்கிறார். இந்த அமைவு...

* 23.10.2019 லிருந்து 23.04.2020 வரையில் நிலவி வந்த,குழப்பங்களை நீக்கி... தயக்கங்களையும், தாமதங்களையும் கடந்து... சோதனைகளிலிருந்து விடுபட்டு... கடமைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் காலமாக அமையும்.

* கடந்த காலத்தில் திட்டமிட்டு, பூர்த்தி செய்யப்படாத நியாயமான திட்டங்கள் அனைத்தும் வெற்றியடையும்.

* நமக்கு எதிராக இருந்த அனைத்துத் தடைகளும்... தவிடு பொடியாகும்.

* இதுவரை, நமக்கு எதிராக இருந்த எதிர்ப்புகள் அனைத்தும்... நமது நிலைப்பாடுகளின் நியாயத்தை உணர்ந்து... நமக்குச் சாதகமாக செயல்பட ஆரம்பிக்கும்.

* கனவுகளாக மனதில் உறுதி பெற்றிருந்த 'ஜீவனத்திற்கான திட்டங்கள்' அனைத்தும்... முழு வடிவம் பெற்று... வெற்றிப் பாதையில் நடைபோடும்.

* நாட்டிலும்... விட்டிலும் அமைதி நிலவும்.

பிறக்கும் இந்த 'ஆங்கிலப் புது வருடமான 2020'... வீட்டிற்கும், நாட்டிற்கும் மாற்றமாகவும்... ஏற்றமாகவும் அமைய... இறைவனை பிரார்த்திக்கின்றோம்...

ஸாய்ராம்.

Saturday, December 28, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 65. ' துலாம்-மகர லக்னங்களும் செவ்வாய் பகவானும்'





'துலா லக்னத்திற்கு', செவ்வாய் பகவான் 'இரண்டு மற்றும் ஏழாம் வீடுகளுக்கு' அதிபதியாகிறார்.

அதுபோல, 'மகர லக்னத்திற்கு', சுகம் மற்றும் லாபஸ்தானத்திற்கு அதிபதியாகிறார்.

இவ்வாறு, இந்த இரண்டு லக்னங்களுக்கும், செவ்வாய் பகவான்... குடும்பம், சுகம், களத்திரம் மற்றும் லாப ஸ்தானங்களுக்கு அதிபதியாகி 'சுப பலன்களை அளிப்பது' மிகவும் முக்கியாமாகக் கவனிக்கப் பட வேண்டிய அம்சம்.

ஆனால், இவ்விரண்டு லக்னங்களுக்கும் இதே 'செவ்வாய் பகவான்' மாராகாதிபதியாகவும்... பாதாகாதிபதியாகவும் அமைந்து 'அசுப பலன்களை அளிப்பது' என்பதையும் மறுக்க முடியாது.

இவ்வாறு, செவ்வாய் பகவானின் 'சுப ஆதிபத்திய பலன்களையும்'... 'பாதக மற்றும் மாரக ஆதிபத்திய பலன்களையும்'... அளிப்பது, அந்தந்த ஜீவர்களின் 'பூர்வ புண்ணிய கர்ம-வினைகளின் விளைவுகளைப்' பொருத்ததே.

இந்த இரண்டு லக்னங்களுக்கும், மாரகம் மற்றும் பாதகம் விளைவிக்கும், 'செவ்வாய் பகவானின்' அமைவை 'விருச்சிக இராசியும்'... 'மேஷ இராசியும்'... பங்கிட்டுக் கொள்கின்றன.

இந்த விருச்சிக, மேஷ இராசிகளில்... செவ்வாய் பகவான்.

# 'குரு பகவானின்' சாரமான... விசாக நட்சத்திரத்தின் 4 ஆவது பாதத்தையும்...

# 'சனி பகவானின்' சாரமான... அனுஷ நட்சத்திரத்தின் 1,2,3 மற்றும் 4 ஆம் பாதங்களையும்...

# 'புத பகவானின்' சாரமான... கேட்டை நட்சத்திரத்தின் 1,2,3 மற்றும் 4 ஆம் பாதங்களையும்...

# 'கேது பகவானின்' சாரமான... அசுவனி நட்சத்திரத்தின் 1,2,3 மற்றும் 4 ஆம் பாதங்களையும்...

# 'சுக்கிர பகவானின்' சாரமான... பரணி நட்சத்திரத்தின் 1,2,3 மற்றும் 4 ஆம் பாதங்களையும்...

# 'சூரிய பகவானின்' சாரமான... கார்த்திகை நட்சத்திரத்தின் 1 ஆம் பாதத்தையும்...

... கடந்து போகிறார்...

இதில் 'செவ்வாய் பகவான்'... 

* துலாம் மற்றும் மகர லக்னாதிபதிகளான 'சுக்கிர பகவான்' மற்றும் 'சனி பகவானுக்கு'... 'யோகாதிபதிகளான' சுக்கிரன், புதன் மற்றும் சனி பகவான்களின் சாரம் பெற்ற நட்சத்திரங்களின் வழியே பயணம் செய்கிறார்.

* நிழல் கிரகமான... கேது பகவானின் சாரத்தில் பயணம் செய்கிறார்.

* 'மறைவு ஸ்தானங்களுக்கு' அதிபதியாகும்... குரு பகவானின் சாரத்தில் பயணம் செய்கிறார்.

* 'மறைவு மற்றும் பாதகத்திற்கு' அதிபதியாகும் 'சூரிய பகவானின்' சாரத்தில் பயணம் செய்கிறார்.

இந்த அமைவுகள் எலாம் வெளிப்படுத்தும் ஒரு உண்மை... அந்தந்த ஜீவனின் கர்ம வினைகளின் விளைவுகளை வெளிப்படுத்தும் வண்ணம்தான்... செவ்வாய் பகவானின் அமைவு இராசியிலும்... அவர் பெறும் சாரத்தின் வழியே அம்ஸத்திலும் அமையப் பெறும் என்பதுதான்.

'சூரிய பகவானுக்கு' அடுத்ததாக ஆற்றலையும்... சக்தியையும்... ஆத்ம சாரத்தையும்... வெளிப்படுத்தும், 'செவ்வாய் பகவானை' ஆய்ந்து கணிப்பதே உத்தமம்.

ஸாய்ராம்.


ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 64. 'கடக-சிம்ம லக்னங்களும் சனி பகவானும்'





பொதுவாக 'சனி பகவானை' பற்றிய பயம் ஜோதிடத்தை அணுகுபவர்களுக்கு நிறைந்திருந்தாலும்... அது அவ்வாறானதல்ல...

'ஆயுள் காரகராக' இருந்தாலும்... அவர் 'தர்மத்தை' நிலை நாட்டுபவராக செயல் படுவதால்... தர்மத்தின் வழியே நடக்கும் போது... 'சனி பகவானைப்' பற்றிய கவலையை தள்ளி வைப்பதுதான் நியாயம்.

அனைத்து லக்னதாரர்களும் 'சனி பகவானைப்' பற்றிய ஆய்வுகளில் ஆர்வம் காட்டினாலும்... 'கடக - சிம்ம லக்னதாரர்கள்'... 'சனி பகவானையும்', அவரது அமைவையும்... அவரது தசாக் காலத்தையும்... மிகவும் ஆபத்தானதாகவே பார்க்கிறார்கள்.

அது அவ்வாறானதல்ல... ஏனெனில்... கடக லக்னாதிபதியான 'சந்திர பகவானுக்கும்'... சிம்ம லக்னாதிபதியான 'சூரிய பகவானுக்கும்'... சனி பகவானே, 'களத்திர ஸ்தானாதிபதியாகிறார்'. இதிலிருந்தே அவரின் முக்கியத்துவம் எவ்வாறானது என்பது தெரிகிறது. அதனால்தான், இந்த 'சனி பகவானின்' அமைவை நன்றாக ஊன்றி கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

கடக லக்னத்திற்கும்... சிம்ம லக்னத்திற்கும்... சனி பகவான், 'மகர இராசியையும்', 'கும்ப இராசியையும்' தனது ஆதிபத்தியத்தால் ஆள்கிறார்.

மகர இராசியிலும், கும்ப இராசியிலும்... சனி பகவான்...

# 'சூரிய பகவானின்' சாரமான... உத்திராட நட்சத்திரத்தின் 2,3 மற்றும் 4 ஆவது பாதங்களையும்...

# 'சந்திர பகவானின்' சாரமான... திருவோண நட்சத்திரத்தின் 1,2,3 மற்றும் 4 ஆவது பாதங்களையும்...

# 'செவ்வாய் பகவானின்' சாரமான... அவிட்ட நட்சத்திரத்தின் 1,2,3 மற்றும் 4 ஆவது பாதங்களையும்...

# 'ராகு பகவானின்' சாரமான... சதய நட்சத்திரத்தின் 1,2,3 மற்றும் 4 ஆவது பாதங்களையும்...

# 'குரு பகவானின்' சாரமான... பூரட்டாதி நட்சத்திரத்தின் 1,2 மற்றும் 3 ஆவது பாதங்களையும்...

... கடந்து போகிறார்.

இதில், 'சனி பகவான்' கடந்து போகும் நட்சத்திர சாராதிபதிகளாகிய... 'சூரிய - சந்திர - செவ்வாய் - குரு பகவான்கள்'... கடக இராசிக்கும், சிம்ம இராசிக்கும்... 'யோகாதிபதிகளாக' அமைகிறார்கள். 'ராகு பகவான்'... 'நிழல் கிரகமாகி', அவரின் நிலையை ஒட்டிய பலன்களை அளிக்க வல்லவராகிறார்.

ஆதலால், 'சனி பகவான்' அவரமரும் சாரங்களின் வழியேயான 'கர்ம வினைகளின் விளைவுகளைத்தான்' வெளிப்படுத்துவார். இதை 'இராசியில்' அவர் அமரும் நிலைகளைப் பொருத்தும், இந்த நட்சத்திர சாரத்தைக் கொண்டு... இவர் 'அம்ஸத்தில்' அமையும் பலத்தையும் பொருத்துத்தான், நிர்ணயம் செய்தல் வேண்டும்.

தர்மத்தின் நாயகனை... பூரணமாக அறிந்து கொள்வதே, அவரின் மீது கொள்ளும் அனாவசியமான பயத்தை நீக்கும் வழியாகும்.

ஸாய்ராம்.


Friday, December 27, 2019

வைகுண்ட ஏகாதசியும் அதன் சூட்சுமமும்...




திருவரங்கத்திற்கு... பூலோக வைகுண்டம் என்று பெயர். இங்கு எழுந்தருளும் திருவரங்கநாதனுக்கு... வைகுண்டநாதன் என்று பெயர்.

திருவரங்கம் முதலான அனைத்து வைணவ ஆலயங்களிலும், ஒவ்வொரு வருட மார்கழி மாதத்திலும் வரும் வளர்பிறையில் ஆரம்பித்து... முதல் பத்து நாட்களின் பகல் பொழுதும்... தொடரும் 10 நாட்களின் இரவுப் பொழுதும்... வைகுண்ட ஏகாதசி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதைப் 'பகல் பத்து' மற்றும் 'இராப் பத்து' என்று அழைப்பர்.

இந்த உற்சவத்தின் 'இரண்டு அம்சங்கள்' மிகவும் சூட்சுமம் வாய்ந்தவைகள்.

1. வைகுண்ட வாசல் திறப்பு.
2. ஆழ்வார் மோக்ஷம்.

வைகுண்ட வாசல் திறப்பு... பகல் பத்து கடந்து... 11 ஆவது நாளான 'ஏகாதசி திதி' அன்றும்... வைகுண்ட ஏகாதசி விழா பூர்த்தியாகிற இராப் பத்து கடந்த 11ஆம் நாளில்... ஆழ்வார் மோக்ஷமும் நடைபெறுகிறது.

வைகுண்டம்... என்ற சொல்லால் குறிக்கப்படுவது, இறைவனின் திருவடி என்ற மோக்ஷம். அதைத்தான்... முக்தி... சொர்க்கம்... கைவல்யம்... ஸமாதி... பேரின்பம்... என்ற பல பெயர்களால் அழைக்கிறோம். ஒரு ஜீவனின் வாழ்க்கைப் பயணத்தின் நோக்கம், அது 'இறைவனின் திருவடிக் கமலங்களில் கலப்பதுதான்'. அதற்கான வழிகாட்டுதல்களாகத்தான் இந்த உற்சவங்கள் யாவுமே இறைவனின் சங்கல்பத்துடன் நடந்தேருகின்றன.

'பகல் பத்து' என்பதன் சூட்சுமம்... 'உலக வாழ்வுப் பயணம்'. 'இராப் பத்து' என்பதன் சூட்சுமம்... 'உள்நோக்கிய வாழ்வின் பயணம்'. 'வைகுண்ட வாசல்' என்பதுதான்... உலக வாழ்விலிருந்து ஜீவன் உள் திரும்பும் வாழ்வின் மையம்.

நிரந்தர மற்ற உலக வாழ்வின் பயணத்தில் இருக்கும் ஜீவனின் வாழ்வை, 'பகல் பத்துக்கும்'...  அதன் நிரந்தரமற்றத் தன்மையை உணர்ந்து, என்றும் நிரந்தரமமான இறைவனின் திருவடிகளை நோக்கி உள் திரும்பும் நிலையை, 'வைகுண்ட வாசல்' அல்லது 'சொர்க்க வாசல்' என்றும்... அந்த உள் வாழ்க்கைப் பயணத்தை நோக்கித் திரும்பும் ஜீவனின் வாழ்வை 'இராப் பத்துக்கும்' ஒப்பிடலாம்.

பகல் பத்து என்பது... ஒரு ஜீவனின் 'ஐந்து கர்மேந்திரியங்களும்'... 'ஐந்து ஞானேந்திரியங்களும்'. இந்த கண்களுக்குப் புலப்படா ஐந்து ஞானேந்திரியங்களின் வழியாக வெளியேரும் மனம், கண்ணுக்குத் தெரியும் ஐந்து கர்மேந்திரியங்களின் வழியாக உலக வாழ்வில் சங்கமிக்கிறது.

இந்த மனம் என்ற ஸ்தானத்திலிருந்துதான்... ஜீவனது 'கர்ம வினைகள்' எண்ணங்களாக வெளிப்படுகிறது. அந்த எண்ணங்களை வெளிப்படுத்தும் ஸ்தானங்களாகத்தான்... ஞானம், கர்மம் என்ற இந்திரியங்கள் செயல் படுகின்றன.

# இந்த கர்மேந்திரியங்கள் என்ற புலன்களிலிருந்து மனதை மீட்பதுதான்... பகல் பத்தின் நோக்கம். அதை பக்தி என்ற சாதனையின் மூலமும்,,, ஞானம் என்ற தியான ஒருங்கிணைப்பின் மூலமும் கடந்து போவதைத்தான் பகல் பத்து உணர்த்துகிறது.

# இவ்வாறு பக்தியினாலும்... ஞானத்தினாலும் ஒருமை பெற்ற மனம்... உள் திரும்பும் நிலையைத்தான்... வைகுண்ட வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு நமக்கு உணர்த்துகிறது.

# உள் திரும்பிய மனம், ஞானேந்திரியங்களின் வழியாக... அதன் மூலத்தை நோக்கித் திரும்புவதைத்தான்... இராப்பத்து உணர்த்துகிறது.

# இவ்வாறு உள் திரும்பிய மனம்... ஆத்மாவில் சங்கமிப்பதையே... 'ஆழ்வார் மோக்ஷம்' என்ற உற்சவம் உணர்த்துகிறது. இதைத்தான்... 'மோக்ஷம்' என்றும்... 'சொர்க்கம்' என்றும் வருணிக்கிறோம்.

இந்த மனித ஜீவ வாழ்வின் சூட்சுமத்தை உணர்த்தும் உற்சவமாகத்தான்... இந்த 'வைகுண்ட ஏகாதசித் திருநாள்' கொண்டாடப்படுகிறது... இறைவனின் கருணையினால்...

ஸாய்ராம்.

Sunday, December 22, 2019

ஆலய தரிசனம்தான்... ஆன்மீகத்தின் ஆரம்பம்.





நமக்குள் இருக்கும் 'இறைவனின் பேரருள் கருணையை' நாம் உணர்ந்து கொள்வதுதான்... பக்தியை மூலமாகக் கொண்ட ஆன்மீகத்தின் நோக்கம். அதற்கான முதல்படிதான் ஆலய தரிசனம்.

'ஆகம விதிகளின்படி' உருவாக்கப்பட்டுள்ள ஆலயங்களின் அமைவே இதனை உறுதிப்படுத்துகிறது. ஆலயங்களின் அமைவுக்கும்... மனித உடலமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மனித உடல் எவ்வாறு... படைப்பவனின் சூட்சுமங்களைக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கிறாதோ... அதுபோலவே. ஆலயங்களும்... அதே சூட்சும அமைவுகளைக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

கண்ணுக்குப் புலனாகும் உருவ அமைவுகளுடனும்... கண்ணுக்குப் புலனாகாத உருவ அமைவுகளுடனும் மனித உடல் படைக்கப்பட்டிருக்கிறது.

கண்ணுக்குப் புலனாகும் மனித உடல்... 'மூளையை' மையமாகக் கொள்கிறது. கண்ணுக்குப் புலனாகாத மனித உடல்... 'மனதை' மூலமாகக் கொண்டது.

கண்ணுக்குப் புலனாகும் மனித உடலின் மூலமான... 'மூளையை' , கண்ணுக்குப் புலனாகாத மனித உடலின் மூலமான... 'மனம்தான்' இயக்குகிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்வதுதான் ஆன்மீகத்தின்  முதல் படி. இதற்கான விதையை விதைக்கும் இடம்தான் ஆலயம்.

மனதை மூலமாகக் கொண்டு இயங்கும் மனித உடல்... அதன் மூலமான உயிரின் மையத்தில் இருந்து உற்பத்தியாகிறது. அந்த உற்பத்தி ஸ்தான மூலத்திற்குத்தான்... 'ஆன்மா' என்று பெயர். அதுதான்... இந்த உடலின் புலனாகாத அமைப்பின் 'மூலம்' அல்லது 'கருவறை'.

இதே அமைவைத்தான்... 'ஆகம விதிகளாக' உருவாக்கி 'ஆலயங்களை' அமைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்களான ரிஷி புங்கவர்கள். 'இறைவனின் ரூபத்தை' மூலமாகக் கொண்டு... கண்ணுக்குத் தெரியும் இறைவன் உருக்கொண்டிருக்கும் இடமாக அமைத்திருக்கிறார்கள். அதனால், இந்த ஆலயங்களுக்குள் நாம் பிரவேசிக்கும் போது... நமது உடலின் கண்ணுக்குத் தெரியும் உடலமைவு... இந்த ஆலய அமைவுடன் ஒத்துப் போகும்படியாக அமைகிறது.

நமது உடலை 'எண் சாண்' உடல் என்று அழைக்கிறோம். அவரவர்களது 'கை சாண்' அளவின் எட்டு மடங்கு போல இந்த உடலளவு அமைகிறது. அதுபோலவே, ஆலய அமைவுகளும்... மனித உடலைப் பிரதிபலிப்பது போல... இராஜ கோபுரத்திலிருந்து, கருவறை வறையில்... 'எண்சாண்' அளவுகளில் அமைக்கப்பட்டிருக்கிறது.

அதனுள் பிரவேசிக்கும்... மனிதனுக்கு, எவ்வாறு... அவனது கண்களுக்குப் புலனாக 'மனதின் இயக்கம்' அவனை வழி நடத்துகிறதோ... அதுபோலவே, ஆலயத்தில்... கண்ணுக்குப் புலனாக 'இறைவனின் சூட்சும இயக்கம்' மனிதனின், மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இந்த மாற்றம்தான்... இறுதியில், 'உள்ளிருந்து நம்மை இயக்கும் அந்த பேராற்றலின் உணர்வுதான்... இறைவனின் பேரருள் கருணை...' என்ற உண்மையை உணரவைக்கிறது.

'ஆலய தரிசனம்தான்... ஆன்மீகத்தின் ஆரம்பம்...!'

ஸாய்ராம்.

Friday, December 20, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 63. "மறைவு ஸ்தானங்கள்- '12 ஆம் பாவம்' - வழியேயான ஜீவனின் வாழ்வு"... பகுதி-19.





'மறைவு ஸ்தானங்கள்' என்றழைக்கப்படும் 3, 6, 8 மற்றும் 12 ஆம் பாவங்கள் வெளிப்படுத்தும்... 'கர்ம வினைகளின் விளைவுகளின்' ஆய்வுகளில், இதுவரை 3, 6 மற்றும் 8 அம் பாவங்களை ஆய்ந்தோம்.

தொடர்ந்து... 12 ஆம் பாவம் வெளிப்படுத்தும்... கர்ம வினைகளின் விளைவுகளை ஆய்வோம்...

12 ஆம் பாவம் ( சுக-சயன-விரய ஸ்தானம் )

பொதுவாகவே இந்த ஸ்தானத்தை 'விரய ஸ்தானம்' என்று அழைக்கிறோம். அது இருக்கும் அல்லது சேர்க்கும் பொருள்கள் மற்றும் சொத்துக்களை இழக்கும் இடம் மட்டுமல்ல... இந்த ஜீவன் கொண்டுவந்திருக்கும் 'கர்ம வினைகளின் விளைவுகளையும்' இழக்கும் ஸ்தானம். மேலும் இந்த ஸ்தானம் 'நிம்மதியான' வாழ்வையும், நிறைவான தூக்கத்தையும் கொடுக்கக் கூடிய 'சுக-சயன் ஸ்தானம்' என்ற பணிக்கும் காரணமாகிறது.

உதாரணம் 1

'விருச்சிக லக்னத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு... 12 ஆம் பாவத்தில்... அந்த ஸ்தானாதிபதியாகிய 'சுக்கிர பகவான்'... துலா இராசியில், சித்திரை நட்சத்திரத்தின் 3 ஆம் பாதத்தில் அமைவதாகக் கொள்வோம்.

# 12 ஆம் பாவத்தில் அமரும் 'சுக்கிர பகவான்' அந்த ஸ்தானத்திற்கு அதிபதியாகி... ஆட்சி பலம் பெறுகிறார். மேலும்... லக்னாதிபதியாகிய 'செவ்வாய் பகவானின்' நட்சத்திரமான... சித்திரை நட்சத்திரத்தின் 3 ஆம் பாதத்தில் அமர்ந்து லக்னாதிபதிக்கு துணையாக, பலமாக அமைகிறார். அவரின் 7 ஆம் பார்வை 6 அம் பாவத்திற்கு அமைகிறது.

இந்த அமைவைப் பெற்ற ஜாதகர்...

* இந்த ஜாதகரின் வாழ்வின் அடிப்படை தேவைகள் எப்போதும்... அவரின் வாழ் நாள் முழுவதும் நிறைவாக பூர்த்தி செய்யப்படுவதாக... இவரின் வாழ்வு அமையும். (சுக்கிர பகவானின் ஆட்சி பலமும்... செவ்வாய் பகவானின் நட்சத்திர இயக்கமும்...)

* நேர்த்தியான உடைகளை அணிபவராகவும்... இவரின் சூழல்கள் அனைத்தும் அது வீடாக இருந்தாலும்... பணி புரியும் அலுவலகமாக இருந்தாலும்... தொழில் புரியும் இடமாக இருந்தாலும்... சுத்தமாகவும், நேர்த்தியாகவும், அழகாகவும், ஒழுங்குடனும் இருக்கும். ( சுக்கிர பகவானுக்கும்... செவ்வாய் பகவானுக்குமான சூட்சுமத் தொடர்பு...)

* இவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் சூழல்களையும்... இவரின் செயல்கள் முழுமையடைய இவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் சூழல்களையும்... மிக நேர்த்தியாக எதிர் கொண்டு வெற்றி பெறுவார். ( சுக்கிர பகவானின் பார்வையை 6 ஆம் பாவம் பெறுவதால்...)

* குறைவான உணவை உட்கொண்டாலும்... அது சுவையாகவும், சூடாகவும், சத்தனதாகவும் உட்கொள்வார்.

* இவரின் தூக்கமும்... நிம்மதியும் எப்போதும் நிறைவானதாக இருக்கும்.

உதாரணம் 2

'விருச்சிக லக்னத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு... 12 ஆம் பாவத்தின் ஸ்தானாதிபதியாகிய  'சுக்கிர பகவான்'...  கன்னி இராசியில்... துலா இராசியில், சித்திரை நட்சத்திரத்தின் 1 ஆம் பாதத்தில் அமைவதாகக் கொள்வோம்.

# 11 ஆம் ஸ்தானமான லாப ஸ்தானத்தில் 12 ஆம் பாவாதிபதியும், ஸ்தானாதிபதியுமாகிய 'சுக்கிர பகவான்' அமர்ந்தாலும்... நீச நிலையில் பலமற்று அமைகிறார். அவரின் 7 அம் பார்வை... பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் பாவத்தின் மீது படிகிறது.

இந்த அமைவைக் கொண்ட ஜாதகர்...

* சுக வாழ்வுக்காக ஏங்குபவராக இருப்பார். ( சுக்கிர பகவானின் நீசத்துவம்...)

* தனது சுக வாழ்வுக்காக தனது பூர்வத்தையே இழப்பவராக இருப்பார். ( சுக்கிர பகவானின் பார்வையை 5 ஆம் பாவமான பூர்வ புண்ணிய ஸ்தானம் பெறுவதால்...)

* தனது தூக்கத்திற்காக ஏதாவது ஒரு புற வழியை தேர்ந்தெடுப்பார். (மாத்திரைகள்... வஸ்துக்கள்... போன்றவற்றை...)

* எவ்வளவு முயற்சி செய்யினும்... அதன் விளைவான லாபத்தை மிகவும் சிரமப்பட்டு அடைவது மட்டுமல்ல... அதுவும் முழுமையாக அனுபவிக்க முடியாத சூழலும் ஏற்படும்.

* இவரின் தூக்கம்... கனவுகளால் களைக்கப்படுவதாகவும், நிம்மதியற்ற நிலையிலும் அமையும்.

இது வரையிலும்... திரிகோணம்; கேந்திரம்; பணபர ஸ்தானங்கள்; மறைவு ஸ்தானங்கள்... பூர்வ புண்ணிய கர்ம-வினைகளை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பதை... உதாரணங்களுடன் ஒரு சிறு ஆய்வாக கடந்து வந்தோம்.

இறைவனின் அருளோடு... மேலும் பல ஜோதிட சூட்சுமங்களை தொடர்ந்து ஆய்வோம்...

ஸாய்ராம்.

Thursday, December 19, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 62. "மறைவு ஸ்தானங்கள்- '8 ஆம் பாவம்' - வழியேயான ஜீவனின் வாழ்வு"... பகுதி-18.





'மறைவு ஸ்தானங்கள்' என்றழைக்கப்படும் 3, 6, 8 மற்றும் 12 ஆம் பாவங்கள் வெளிப்படுத்தும்... 'கர்ம வினைகளின் விளைவுகளின்' ஆய்வுகளில், இதுவரை, 3 மற்றும் 6 ஆம் பாவங்களை ஆய்ந்தோம்.

தொடர்ந்து... '8 ஆம் பாவம்' வெளிப்படுத்தும்... கர்ம வினைகளின் விளைவுகளை ஆய்வோம்...

8 ஆம் பாவம் ( அஷ்டமம் மற்றும் ஆயுள் ஸ்தானம்)

இந்த பாவம் பொதுவாக 'ஆயுள் ஸ்தானம்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் 'அட்டமம்' என்ற சொல்லின் உச்சரிப்பு... ஜோதிட ஆர்வலர்களினிடையே, இந்த 8 ஆம் பாவம் மிகவும் 'கடினமான ஸ்தானம்' என்ற என்ற எண்ணத்தை வளர்த்திருக்கிறது. 6 ஆம் பாவத்தைப் போலவே இந்த ஸ்தானமும்... ஒரு ஜீவனின் 'கர்ம வினைகளின் விளைவுகளை' வெளிப்படுத்தும் ஸ்தானமாக அமைகிறது. இந்த ஸ்தானம் 'மறைபொருள் வெளிப்படும் ஸ்தானமாக' அமைகிறது. உள் வாழ்வின் சூட்சுமங்களான 'அருள் செல்வத்தையும்'... வெளி வாழ்வான உலகவாழ்வின் கல்வி, செல்வம், வளமான வாழ்வு என்ற 'பொருட் செல்வங்கள்' புதைந்துள்ள ஸ்தானமாகவும் அமைகிறது.

உதாரணம் 1

'விருச்சிக லக்னத்தில்' பிறந்திருக்கிற ஜாதகருக்கு... 'புத பகவான்'...  மிதுன இராசியில், மிருகஷீரிட நட்சத்திரத்தின் 3 ஆம் பாதத்திலும்... 'சூரிய பகவான்'...  மிதுன இராசியில், புனர்பூச நட்சத்திரத்தின் 1 ஆம் பாதத்திலும்... அமைவதாகக் கொள்வோம்.

# அஷ்டமாதிபதியாகிய 'புத பகவான்' 8 ஆம் பாவமான ஆயுள் ஸ்தானத்தில்... ஆட்சி பலம் பெறுகிறார். இவர் லக்னாதிபதியாகிய 'செவ்வாய் பகவானின்' நட்சத்திர சாரத்தில் பலம் பெற்று அமைகிறார். இவரது தனது 7 ஆம் பார்வையால்... தன-வாக்கு-குடும்ப ஸ்தானத்தை பார்வை செய்கிறார்.

# ஜீவன ஸ்தானாதிபதியாகிய 'சூரிய பகவான்' அஷ்டம பாவமான 8 ஆம் பாவத்தில்... 8 ஆம் பாவாதிபதியுடன் இணைகிறார். ஜீவன் ஸ்தானாதிபதியாகி மறைவு ஸ்தானத்தில் மறைகிறார். ஆனாலும்... 'தன-பஞ்சமாதிபதியாகிய'... 'குரு பகவானின்' நட்சத்திர சாரத்தால் இயக்கப்படுகிறார். அவர் தனது7 ஆம் பார்வையால்... தன-வாக்கு-குடும்ப ஸ்தானத்தை பார்வை செய்கிறார்.

இந்த அமைவுகளைப் பெற்ற ஜாதகர்...

* இந்த ஜாதகர் மிகவும் புத்தி சாதூர்யம் மிக்கவராகத் திகழ்வார். ( சூரிய - புத பகவான்களின் இணைவு... நிபுண யோகம் பெறுவதால்...)

* நீண்ட ஆயுளும்... தேக ஆரோக்கியமும் பெற்றிருப்பார். (புத பகவானின் ஆட்சி பலம்)

* இவரது 'சொற்கள்' பெரும் மதிப்பு மிக்கதாக இருக்கும். நிறைந்த உள் அர்த்தங்களும்... சூட்சுமங்களும்... புத்தி சாதூர்யம் நிறைந்ததாகவும் இருக்கும். ( புத-சூரிய பகவான்களின் பார்வையைப் பெறும் 2 ஆம் பாவம்...)

* அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளிலோ அல்லது பெரும் தனியார் தொழில் துறைகளிலோ... உயர் நிலை ஆலோசகராக இருக்கும் வாய்ப்பு கூடி வரும்.(சூரிய-புத பகவான்கள்... ஜீவன-லாப ஸ்தானாதிபதிகளாக அமைவதால்...)

* இவரின் நேர்மை இவரை தனித்துவமானவராகக் காட்டும்.

* அட்டமாதிபத்தியத்தை 'புத பகவான்' பெரும்பாலும் இழந்துவிடும் நிலைக்குத் தள்ளப் படுவார். (ஆத்மக்காரகரான 'சூரிய பகவானுடன்' இணைவதாலும், லக்னாதிபதியான செவ்வாய் பகவானின் நட்நத்திர சாரத்தைப் பெறுவதால்....)

உதாரணம் 2 

'விருச்சிக லக்னத்தில்' பிறந்திருக்கிற ஜாதகருக்கு... 'புத பகவான்'... மிதுன இராசியில், மிருகஷீரிட நட்சத்திரத்தின் 3 ஆம் பாவத்திலும்... 'சூரிய பகவான்'... கடக இராசியில், பூச நட்சத்திரத்தின் 3 ஆம் பாவத்திலும்... அமைவதாகக் கொள்வோம்.

# 8 ஆம் பாவத்தில் பலத்துடன் அமைகிற 'புத பகவான்' லக்னாதிபதியின் சாரம் பெற்று வலுத்து... தனது 7 ஆம் பார்வையாக தன-குடும்ப-வாக்கு ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.

# பாக்கிய ஸ்தானத்தில் அமர்கிற ஜீவனாதிபதி... தர்ம ஸ்தானத்தில் அமர்கிற கர்ம ஸ்தானாதிபதியாக இருந்தாலும்... 'சனி பகவானின்' பூச நட்சத்திரத்தில் அமைந்து... அம்ஸத்தில் நீச நிலையில் பலமிழந்த நிலையில் சஞ்சரிக்கிறார். அவரது 7 ஆம் பார்வை... 3 ஆம் பாவமான தைர்ய ஸ்தானத்திற்கு அமைகிறது.

இந்த அமைவைப் பெற்ற ஜாதகர்...

* நிறைந்த ஆயுளைப் பெற்றவராக இந்த ஜாதகர் இருப்பார்.(புத பகவான்... ஆட்சி பலம் பெற்றிருப்பதால்...)

* இவரின் பிறப்பு கடும் பொருளாதர நெருக்கடிகளுக்குள் அமையும். (அட்டமாதியின் பலம்...)

* குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியினால்... இவரது கல்வி... பொருள் தேடும் அவசியமான... ஒரு தொழில் கல்வியை நோக்கி நகரும். (புத பகவானின் மறைவு... செவ்வாய் பகவானின் நட்சத்திர சாரம்...)

* அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள்... தனியார் துறைகள் என்பவற்றில்... தொழிளாராக பணியாற்றும் வாய்ப்பு அமையும். ( சூரிய பகவானின்... பாக்கிய ஸ்தான அமைவினால்...)

* உழைப்புக் கேற்ற ஊதியமும்... அதையொட்டிய வாழ்வும் அமையும். (புத பகவானின் 7 ஆம் பார்வையை பெறும் 2 ஆம் பாவம்...)

இதுவரை 8 ஆம் பாவம் வெளிப்படுத்தும்... பூர்வ கர்ம-வினைகளின் விளைவுகளின் வழியாக பயணித்தோம்.

தொடர்ந்து... 12 என்ற சுக-சயன பாவம் வெளிப்படுத்தும்... கர்ம வினைகளின் விளைவுகளை ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 61. "மறைவு ஸ்தானங்கள்- '6 ஆம் பாவம்' - வழியேயான ஜீவனின் வாழ்வு"... பகுதி-17.





'மறைவு ஸ்தானங்கள்' என்று அழைக்கப்படும் 3, 6, 8 மற்றும் 12 ஆம் பாவங்களில்... 3 ஆம் பாவம் பற்றிய ஆய்வைத் தொடர்ந்து... இந்தப் பகுதியில், '6 ஆம் பாவம்' வெளிப்படுத்தும்... 'கர்ம வினைகளின் பூர்வ புண்ணிய விளைவுகளை' ஆய்வோம்.

6 ஆம் பாவம் ( ருண-ரோக-சத்ரு ஸ்தானம்)

இந்த பாவத்தை பொதுவாக 'கடன், நோய் மற்றும் எதிர்ப்புகளை எதிர் கொள்ளும் ஸ்தானமாக' ஜோதிடம் வரையருக்கிறது. இரண்டு விதமாகத்தான்... ஒரு ஜீவன் தனது 'கர்ம வினைகளின் விளைவுகளை' அனுபவிக்கிறது, ஒன்று... தாமாக நிகழ்த்தும் செயல்களால், இரண்டாவது தமக்கு நேரும் செயல்களுக்கு ஏற்ப வெளிப்படுத்தும் எதிர்செயல்களால். இந்த இரண்டு விதமான செயல் வடிவங்களும்... எவ்வாறு ஜீவனால் எதிர்கொள்ளப் படுகிறது என்பதை... இந்த ஸ்தானம் தீர்மானிக்கின்றது.

உதாரணம் 1

'கும்ப லக்னத்தில்' பிறந்திருக்கும் ஜாதகருக்கு... 'சனி பகவான்' 3 ஆம் பாவமான, தைர்ய ஸ்தானத்தில்... 'கார்த்திகை 1 ஆம் பாதத்திலும்', 'சந்திர பகவான்' 4 ஆம் பாவமான சுக ஸ்தானத்தில்...'ரோகிணி நட்சத்திரத்தின் 4 ஆம் பாதத்திலும்' அமைவதாகக் கொள்வோம்.

# லக்னாதிபதியாகிய... 'சனி பகவான்'... 3 ஆம் பாவமான, தைர்ய ஸ்தானத்தில் தனது வலிமையை இழந்து... நீச நிலையில் சஞ்சரிக்கிறார். இவரது 3 ஆம் பார்வை... பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், 7 ஆம் பார்வை... பாக்கிய ஸ்தானத்திலும், 10 ஆம் பார்வை... சுக-சயனம் மற்றும் விரய ஸ்தானத்திலும் விரவுகிறது.

#  6 ஆம் பாவமான... ருண-ரோக-சத்ரு ஸ்தானங்களுக்கு அதிபதியாகிற... 'சந்திர பகவான்'... சுக ஸ்தானத்தில் அமர்ந்து வலிமை பெற்று, தனது நட்சத்திரத்தின் வலிமையையும்... உச்ச நிலை பலத்தையும் பெற்று, தனது 7 ஆம் பார்வையாக ஜீவனம் மற்றும் கர்ம ஸ்தானத்தை பார்வை செய்கிறார்.

இந்த அமைவுகளைப் பெற்ற ஜாதகர்...

* அடிமை போன்ற வாழ்வு அமையப் பெற்றிருப்பார்.('சனி பகவான்' நீச நிலை)

* பூர்வ புண்ணியங்கள் என்ற அவரது பூர்வம் முழுவதும்... இவரின் பிறப்பின் போதே கடன்களால் சூழப்பட்டு... அவற்றை திருப்பி செலுத்த முடியாத நிலையில்... அவற்றை இழக்கும் சுழலில்தான் பிறவி அமைந்திருக்கும்.('சனி பகவானின்' 3 மற்றும் 10 ஆம் பார்வைகள் முறையே... பூர்வம் மற்றும் விரயத்திற்கு படுவதாலும், 'சந்திர பகவானின்' 4 ஆம் பாவத்தின் அமைவும்...)

* தனது அன்றாட வாழ்வை மேற்கொள்வதில்... 'ஒவ்வொரு நொடியையும் ஒரு யுகத்தைக் கடப்பதைப் போல கடத்த வேண்டிய...' சூழல் அமையும்.

* தனது ஒவ்வொரு கடமையையும் கடந்து போக... முதலில் கடன் பெற வேண்டிய சூழலும், பின்னர் அந்த கடனை அடைக்கமுடியாது திணறும் சுழ்நிலையும் ஏற்படும்.('சந்திர பகவானின் 7 ஆம் பார்வை... ஜீவனம் மற்றும் கர்ம ஸ்தானத்தில் படர்வதால்...)

* தனது வாழ்வில் இவர் தேடும் நட்பும், துணையும் இவரை அடிமைப்படுத்தவே நினைக்குமே அன்றி... இவருக்கு ஆறுதல் தரும் சூழ் நிலையில் அமைவதில்லை. ('சனி பகவானின்' 7 ஆம் பார்வையை பாக்கிய ஸ்தானம் பெறுவதால்...)

* லக்னாதிபதியின் பலம் குறைந்து, 6 ஆம் பாவாதிபதியின் பலம் கூடி இருப்பதால்... இவரது வாழ்வில் எப்போதும் எதிரிகளின் கை ஓங்கியிருப்பதும், அதனால் இவர் அடிபணிந்து போவதும்,,, அவமானப் படுவதும்... ஒரு தொடர்கதையாகவே அமையும்.

உதாரணம் 2 

'கும்ப லக்னத்தில்' பிறந்திருக்கும் ஜாதகருக்கு 'சனி பகவான்' பாக்கிய ஸ்தானத்தில்...'துலா இராசியில்'... சுவாதி நட்சத்திரத்தின் 3 ஆம் பாதத்தில் அமைவதாகவும், 'சந்திர பகவான்' 6 ஆம் பாவமான 'கடக இராசியில்; பூசம் நட்சத்திரத்தின் 4 ஆம் பாதத்திலும் அமைவதாகக் கொள்வோம்.

# லக்னாதிபதியாகிய 'சனி பகவான்' பாக்கிய ஸ்தானத்தில் பலம் பெற்று அமைந்து... உச்ச நிலையில் சஞ்சரிக்கிறார். அவரது 3 ஆம் பார்வை... 11 ஆம் பாவமான லாப ஸ்தானத்திற்கும், அவரது 7 ஆம் பார்வை... தைர்ய ஸ்தானத்திற்கும், அவரது 10 ஆம் பார்வை... 6 ஆம் பாவத்திற்கும், அதிலமைந்திருக்கிற பாவாதிபதி மற்றும் ஸ்தானாதிபதியாகிய 'சந்திர பகவானுக்கும்' படுகிறது.

# 6 ஆம் பாவாதிபதியாகிய... சத்ரு ஸ்தானாதிபதி 'சந்திர பகவான்' 6 ஆம் இடத்தில் 'ஆட்சி பலம்' பெற்று அமர்ந்து, அவரது 7 ஆம் பார்வை... விரய ஸ்தானத்திற்கு படுவதாக அமைகிறது.

இந்த அமைவுகளைப் பெற்ற ஜாதகர்...

* ஒரு குழுவுக்கோ அல்லது ஒரு ஸ்தானபத்திற்கோ தலைமை ஏற்பவராகத் திகழ்வார்.('சனி பகவானின்' பாக்கிய ஸ்தான உச்ச பலம்...)

* இவரின் நிர்வாகம்... ஒழுங்கும், கட்டுப்பாடும், நேர்மையும்... ஒளி வீசுவதாக அமையும். இதனால் நிர்வாகத்திற்கு பெரும் பெயரும் லாபமும் வந்து சேரும்.('சனி பகவானின்' பார்வையை லாபாதிபதி பெருவதால்...)

* நிர்வாகத்தில் எப்போதும் சச்சரவுகளும்... எதிர்ப்புகளும் இருந்தாலும் அதை இவர் மிகச் சாதுர்யமாகவும், தைர்யத்துடனும் எதிர்கொள்வார்.('சனி பகவானின்' பார்வையை தைர்ய ஸ்தானமும்... 6 ஆம் பாவமும் பெருவதால்...)

* இவரை எதிர்ப்பவர்கள் எல்லோரும் தோல்வியையே தழுவுவர்.( 'உச்சம் பெற்ற'... 'சனி பகவானின்' பார்வையைப் பெரும் 'ஆட்சி பெற்ற'... 'சந்திர பகவான்'...)

* வழக்குகள் மூலமாகவும்... மறைவான சதிகள்... மூலமாகவும் இவருக்கு வரும் நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும்... இவரின் 'எதிர்கொள்வதின் தன்மையைக்' கொண்டு... தோல்விகளைத் தழுவும்.

* ஆனால்... எப்பொது எதிர்ப்புகளின் வழியேதான்... இவரது வாழ்வு போராட்டத்துடன் கடந்து போகும்.

இதுவரை '6 ஆம் பாவம்' வெளிப்படுத்தும் 'இருவிதமான கர்ம வினைகளின் விளைவுகளை' ஆய்ந்தோம்.

தொடர்ந்து... ' 8 ஆம் பாவம்' வெளிப்படுத்தும்... கர்ம வினைகளின் பூர்வ புண்ணிய விளைவுகளை ஆய்வோம்... இறை அருளோடு...

ஸாய்ராம்.


Wednesday, December 18, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 60. "மறைவு ஸ்தானங்கள்- '3 ஆம் பாவம்' - வழியேயான ஜீவனின் வாழ்வு"... பகுதி-16.




12 இராசிகளைக் கொண்ட ஜோதிட சித்திரத்தில்... 'ஜீவன்' பிறப்பெடுத்த நேரம் லக்னமாக அமைகிறது. இந்த லக்னத்தை மூலமாகக் கொண்டுதான் ஏனைய ஸ்தானங்கள் அமைகின்றன.

அந்த ஸ்தானங்களி... இதுவரை, திரிகோணம், கேந்திரம், பணபர ஸ்தானங்கள் வழியே பயணம் செய்தோம்.

இந்தப் பகுதியில், 'மறைவு ஸ்தானங்கள்' என்றழைக்கப்படும்... ஸ்தானங்கள் எவ்வாறு... ஜீவனுக்கு அதன் 'கர்ம வினைகளின் விளவுகளை' அளிக்கிறது என்பதை உதாரணங்களோடு ஆய்வோம்...

மறைவு ஸ்தானங்கள் ( 3, 6, 8 மற்றும் 12 ஆம் பாவங்கள்)

இதை ஏன் 'மறைவு ஸ்தானங்கள்' என்று குறிப்பிட்டார்கள் எனில்... லக்னத்திலிருந்து இந்த ஸ்தானங்களில் அமையும் கிரகங்கள்... அவைகளின் ஆதிபத்தியத்திற்கு ஏற்ப... தனது 'இன்ப அனுபவங்களைக் குறைத்து'... 'தனது துன்ப அனுபவங்களைக் கூட்டியும்' கொடுப்பதால்தான்.

இவை பொதுவாக... ஜீவனின் வினைகளின் விளைவுகள வெளிப்படுத்தும் நேரடி ஸ்தானங்களாக அமைகின்றன.

3 ஆம் பாவம் ( தைர்ய ஸ்தானம்)

இதைப் பொதுவாக 'தைர்ய ஸ்தானம்' என்று அழைத்தாலும்... இந்த பாவம்; 'இளைய சகோதர ஸ்தானமாகவும்... தொடர்புக்கான ஸ்தானமாகவும்... கடிதப் போக்குவரத்துக்கான ஸ்தானமாகவும்... எவ்வகையான பாக்கியத்தை ஜீவன் அனுபவிக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கும் ஸ்தானமாகவும்'... அமைகிறது.

உதாரணம் 1

'மிதுன லக்னத்தில்' பிறந்திருக்கும் ஜாதகருக்கு... 3 ஆம் பாவத்தில், 'சூரிய பகவான்'... 'உத்திர நட்சத்திரத்தின் 1 ஆம் பாதத்தில்' அமைவதாகக் கொள்வோம்... இந்த ஜாதகருக்கு... 'சூரிய பகவானின்' அமைவு எத்தகைய கர்ம வினைகளின் விளைவுகளை வெளிப்படுத்துகிறது... என்பதை ஆய்வோம்...

# 'சிம்ம இராசியில்' தனது 'ஆட்சி வீட்டில்'... தனது நட்சத்திரமான 'உத்திரத்திலேயே' அமர்ந்து மிகவும் வலிமை பெற்று... தனது 7 ஆம் பார்வையாக... பாக்கிய ஸ்தத்தைப் பார்வை செய்கிறார்.

இந்த அமைவைப்[ பெற்ற ஜாதகருக்கு...

* 'ஆத்மகாரகன்' என்ற 'சூரிய பகவான்' 3 ஆம் பாவாதிபதியாகவும், ஸ்தானாதிபதியாகவும் அமைந்ததனால்... மிகவும் 'மனோ-தைர்யம்' பெற்றவராக இருப்பார்.
* மிகவும் நேர்மையாகவும்... வெளிப்படையாகவும் காரியங்களை அணுகுபவராக இருப்பார்.
* தான் மேற்கொள்ளும் காரியங்கள் அணைத்தும்... தர்மத்துடன் கூடியதாக இருக்கிறதா... என்பதை ஆராய்ந்தபின்தான் செயலில் இறங்குவார்.
* தான் மேற்கொள்ளும் காரியங்களுக்கு... அவை நன்மையாக முடிந்தாலும் தீமையாக முடிந்தாலும்...  எந்த வித தயக்கமுமில்லாமல்... தாம்தான் பொறுப்பு எனத் தாமே... பொறுப்பேற்றுக் கொள்வார்.
* அரசு மற்றும் அரசு சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகள் கூடிவரும்.
* தனது கடமைகளை கண்ணும் கருத்துமாக இருந்து பூர்த்தி செய்வார்.

உதாரணம் 2 

இதுவே, 'மிதுன லக்ன ஜாதகருக்கு'... 3 ஆம் பாவத்திற்குறிய 'சூரிய பகவான்'... 6 ஆம் பாவமான...'விருச்சிக இராசியில்'... 'அனுஷ நட்சத்திரத்தின் 3 ஆம் பாதத்தில்' அமைவதாகக் கொள்வோம்... இந்த அமைவு உணர்த்தும் 'பூர்வ புண்ணிய கர்ம-வினைகள்' எவ்வாறு அமைகிறது என்பதை... ஆய்வோம்...

# விருச்சிக இராசியில்... 6 ஆம் பாவத்தில்... அமர்ந்து, தனது 7 ஆம் பார்வையாக... 12 ஆம் இடமான, சுக-சயன மற்றும் விரய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.

இந்த அமைவு பெற்ற ஜாதகருக்கு...

* இவரின் 'மனோ தைர்யம்' இவரை அடிக்கடி 'நியாயாதிபதிக்கு' முன் கொண்டு நிறுத்தும்.
* மிகவும் தைர்யமாக இவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும்... இவரின் முன்னேற்றத்தைத் தடுத்து... இவரை விரயத்துக்குள் கொண்டு செலுத்தும்.
* அடிக்கடி... அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளின் எதிர்ப்புகளுக்கு ஆளாகக் கூடும்.
* பெரும்பாலும் இந்த அமைவு... இவருக்கு இவர் விரும்பி மணந்து கொள்ளும் வாழ்விற்குள் கொண்டு செலுத்தும்.
* பெரும்பாலும் கடனுடன் கூடிய வாழ்வுக்குள் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கும்.

இதுவரை... 3 ஆம் பாவம் வெளிப்படுத்தும் கர்மவினைகளின் விளைவுகளை ஆய்ந்தோம்.

தொடர்ந்து... 6 ஆம் பாவத்தை... ஆய்வோம்... இறைவனின் அருளோடு,,,

ஸாய்ராம்.

Saturday, December 14, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 59. "பணபர ஸ்தானங்கள்- வழியேயான ஜீவனின் வாழ்வு. பகுதி-15.





'பணபர ஸ்தானங்கள்' (2 ஆம் பாவம் மற்றும் 11 ஆம் பாவம்)

பொதுவாக இந்த இரண்டு பாவங்களையும்... பணபர ஸ்தானங்கள் என்று அழைப்பதுண்டு. உலக வாழ்வில் ஈடுபடும் ஜீவர்களின்... பூர்வ புண்ணிய கர்ம வினைகளின் விளைவுகளுக்கு ஏற்ப... இந்த ஸ்தானங்கள் வெளிப்படுத்தும் விளைவுகளை... உதாரணங்களுடன் அணுகுவோம்.

உதாரணம் 1

'கும்ப லகனத்தில்' பிறந்திருக்கும் ஒரு ஜாதகருக்கு 'குரு பகவான்'... தன (2 ஆம் பாவம்) மற்றும் லாபாதிபதியாகிறார்(11 ஆம் பாவம்).

- 'குரு பகவான்'... 11 ஆமிடமான 'தனுர் இராசியில்' - பூராடம் நட்சத்திரத்தின் 4 ஆம் பாதத்தில் அமைவதாகக் கொள்வோம். இந்த அமைவினால்... இந்த ஜாதகர் அனுபவிக்கும் 'புர்வ புண்ணிய கர்ம வினைகளின் விளைவுகளை' ஆய்வோம்.

# இந்த ஜாதகருக்கு தன-லாபாதிபதியாகிய 'குரு பகவான்' 11 ஆமிடம் என்ற 'லாப ஸ்தானத்தில்'... பலம் பெற்று... தனது சோந்த வீட்டிலேயே அமர்ந்திர்க்கிறார்.

# அவர், 'சுக்கிர பகவானின்' நட்சத்திர சாரத்தில்... அமர்ந்திருக்கிறார்.

# தனது 5 அம் பார்வையாக... தைர்ய ஸ்தானமான 3 அம் பாவத்தையும், தனது 7 ஆம் பார்வையாக... பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் பாவத்தையும், தனது 9 ஆம் பார்வையாக... களத்திர ஸ்தானமான 7 ஆம் பாவத்தையும் பார்வை செய்கிறார்.

இந்த அமைவில் உள்ள் ஜாதகருக்கு...

* தனக்காரகரான 'குரு பகவானே' தன-லாபாதியாக அமைவதால்... இவரின் வாழ்வில்... தனது தேவைக்கு எப்போதும் குறைவில்லாத தனப் பிராப்தி அமைந்திருக்கும்.
* இவரது சுகமும்... பாக்கியமும் குறைவில்லாத நிலையில் பாதுகாக்கப்படும். ( 'சுக்கிர பகவானின்' நட்சத்திர சாரத்தில் அமைவதால்...)
*இவருக்கு வாழ்வின் தொடர்புகள் குடும்பத்தையும் கடந்து... உலகளாவியதாக அமையும்.(குரு பகவானின் பார்வை... 3 ஆம் பாவத்திற்கு அமைவதால்...)
* இவரின் பூர்வம் தர்மத்தின் வழியாக வந்ததாகவும்... இவரும் அதன் வழியே சென்று... தனது கடமைகளை பூர்த்தி செய்து... தனது பூர்வத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்பவராக இருப்பார்.( குரு பகவானின் பார்வை... பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் பாவத்திற்கு அமைவதால்...)
*மிக உன்னதமான மனிதர்களுடன் இவருக்கு வாழ்வில் தொடர்புகள் ஏற்படும். இவரும் அந்த உன்னத நிலையை அடைவார். (குரு பகவானின் பார்வை களத்திரம் என்ற 7 அம் பாவத்திற்கு அமைவதால்...)

உதாரணம் 2

இதே 'கும்ப லக்னத்தில்' பிறந்திருக்கும் ஜாதகருக்கு...

'குரு பகவான்' 2 ஆமிடமான 'தன ஸ்தானத்தில்'... 'மீன இராசியில்'... பூரட்டாதி நட்சத்திரத்தின் 4 ஆம் பாதத்தில்' அமைவதாகக் கொள்வோம்.

# இங்கும் 'தன-லாபாதிபதி' பலம் பெறுகிறார். தன ஸ்தானத்திலேயே பலம் பெற்றிருக்கிறார். தனது 5 ஆம் பார்வையால், 6 ஆம் பாவத்தையும், தனது 7 ஆம் பார்வையால்... 8 ஆம் பாவத்தையும், தனது 9 அம் பார்வையால்... ஜீவன் ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார்.

இந்த அமைவைப் பெற்ற ஜாதகருக்கு... இந்த அமைவு...

ஜோதிட விதிகளுள் ஒன்றான... 'தனக்காரகர் தன ஸ்தானத்தில் அமையும் போது காரகநாஸ்த்தியடைவார். (தனம்-குடும்பம்-வாக்கு ஸ்தானங்களின் பூரணத்துவத்தை அனுபவிக்க முடியாத சூழலை... இவரது கர்ம வினைகள் ஏற்படுத்திக் கொடுக்கும்).

இந்த விதி... இவரின் வாழ்வில் நிகழ்த்தும் லீலைகளான... வினைகளின் விளைவுகள்...

* நல்ல பூர்வத்தில் இந்த ஜாதகர் பிறந்திருப்பார். ஆனால் அந்த பூர்வத்தில் வசிக்கும் பாக்கியத்தை இழப்பார்.
* இவரின் பிறப்பின் போது இருக்கும் செல்வச்செழிப்பு... இவரது வளர்ந்து வரும் சூழலில் குறைந்து கொண்டே போகும்.
* இவரின் அத்தியாவசிய தேவைகளுக்கும் கடன் பெரும் சூழல் ஏற்படும். (குரு பகவானின் 5 ஆம் பார்வையை... 6 ஆம் பாவம் பெறுவதால்...)
*மிகவும் கடினமான சூழல்களால்... இவரின் வாழ்வின் கடமைகளைக் கடந்து போக... மிகவும் போராட வேண்டியிருக்கும். (குரு பகவானின்' பார்வையை 8 ஆமிடம் பெறுவதால்...)
* ஆனால்... 'குரு பகவானின்' அருள் கருணையினால்... இவர் இவரது கடமைகள் அனைத்தையும் பூரணமாக்குவார்.
* நிறைந்த அனுபவங்களை வாழ்வில் பெற்றிடுவார்.
* இவர் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும்... அர்த்தம் மிகுந்ததாகவும்... அனுபவங்கள் கூடியதாகவும் இருக்கும்.
* மிகவும் தர்மத்துடன் தனது வாழ்வைக் கடந்து செல்வார்.
* மிகவும் தைர்யத்துடன் எதையும் அணுகும் இவர்... தனது கடமைகளில் இருந்து தவறாது வாழ்வதற்கு... தனது நிலையில் எந்த அளவிற்கும் தாழ்ந்து போவார்.

தொடர்ந்து... 'மறைவு ஸ்தானங்கள்' என்ற 'தைர்யம்-ருண,ரோக,சத்ரு-ஆயுள்-சுக-சயனம்,விரயம்' பற்றிய ஆய்வுகளை... தொடர்ந்து பார்ப்போம்... இறைவனின் அருளொடு...

ஸாய்ராம்.

Wednesday, December 11, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 58. "பணபர ஸ்தானங்கள்- வழியேயான ஜீவனின் வாழ்வு. பகுதி-14.




12 இராசிகளைக் கொண்ட இந்த ஜோதிட சித்திரத்தில்... ஜீவன் பிறப்பெடுத்த நேரம் 'லக்னமாக அமைகிறது. இந்த லக்னத்தை மூலமாகக் கொண்டுதான்... ஏனைய ஸ்தானங்கள் அமைகின்றன.

அந்த ஸ்தானங்களில்... இதுவரையில், திரி கோணம் மற்றும் கேந்திர ஸ்தானங்களைப் பற்றிய எளிய விளக்கங்களை... உதாரணங்களோடு அணுகினோம்.

இந்தப் பகுதியில் 'பண பர ஸ்தானங்கள்' என்ற ஸ்தானங்களின் வழியே ஆய்வுப் பயணத்தைத் தொடர்வோம்.

பணபர ஸ்தானங்கள் ( 2 ஆம் பாவம் மற்றும் 11 ஆம் பாவம்)

பொதுவாக இந்த இரண்டு பாவங்களையும்... பணபர ஸ்தானங்கள் என்று அழைப்பதுண்டு. உலக வாழ்வில் ஈடுபடும் ஜீவர்களுக்கு இந்த ஸ்தானங்களின் வழியே... இன்பத்தை லாபமாக அனுபவிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால்... இந்த ஸ்தானங்கள் அனைவராலும் ஈர்க்கப்படுகிறது.

2 ஆம் பாவம :

இந்த பாவத்தை 'குடும்ப ஸ்தானமாகவும்... வாக்கு ஸ்தானமாகவும்' பாவித்தாலும்... 'தன ஸ்தானம்' என்பதுதான் இதற்கு 'பணபர ஸ்தானம்' என்ற பெயரை ஈட்டிக் கொடுத்திருக்கிறது.

ஆனால். இந்த பாவம் 'மாரக பாவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மாரகம் என்பது... மரணம் அல்ல... 'மரணத்திற்கு ஒப்பான துன்பம்' என்பதுதான். 12 இராசிகளில்... அனைத்து வீடுகளுக்கும்... இந்த 2 ஆம் இடம் மாரக ஸ்தானமாக அமைகிறது.

காரணம்... ஒரு ஜாதகர் பிறக்கும் குடும்பத்தின் சூழல் நன்றாக அமையும் போது, நிறைந்த இன்பத்தை அனுபவிப்பராக இருப்பார். அதுவே சூழல் சற்று கடுமையாக இருக்கும் போது, மிகவும் துயரத்தை அனுபவிப்பராக இருப்பார்.

அதுபோல, நிறைந்த வசதிகளுடன் பிறந்திருக்கும் ஜாதகருக்கு... இன்பத்தை அள்ளிக் கொடுக்கும் இந்த பாவம், வசதியற்ற நிலையில் பிறந்திருக்கும் ஜாதகருக்கு... கடும் துன்பத்தை அளித்து விடுவார்.

அதுமட்டுமல்ல... குடும்பம் என்பது பந்தங்களும்... அவற்றினிடையேயான பற்றுக்களுக்குமான அமைவு என்பதால், பெரும்பாலும் சிறிதளவு இன்பத்தையும், பெரும்பாலும் துன்பத்தையுமே அளிப்பதால்... இதை 'மாரக ஸ்தானம்' என்று அழைக்கிறோம்.

11 ஆம் பாவம் :

இந்த பாவத்தை 'மூத்த சகோதர ஸ்தானம்' மற்றும் 'பூர்வத்தில் தொடர்பு உடையவர்களுடனான' ஸ்தானமாகவும் இருந்தாலும்... லாபம் என்ற 'லாப ஸ்தானம்தான்' இதற்கு புகழை ஈட்டிக் கொடுத்திருக்கிறது.

ஆனால்... அனைத்து லக்னதாரர்களுக்கும் இந்த ஸ்தானம்... பூர்வம் என்ற 5 ஆம் ஸ்தானத்திற்கு... நேரெதிர் ஸ்தானமாக (7 ஆம் ஸ்தானமாக) அமைவதால்... அந்த பூர்வம் என்ற 'கர்ம வினைகளுக்கு' ஏற்பவே இந்த உறவுகளும்-தொடர்புகளும் -இகலோக லாபங்களும்' அமைகிறது.

அதிலும்... குறிப்பாக 'சர லக்னங்களுக்கு'... இந்த லாப ஸ்தானமான 11 ஆம் பாவம்... மிகவும் 'பாதகம்' என்ற துயரினைத் தருவதாக... 'பாதக ஸ்தானமாகவும்' அமைந்து விடுகிறது.

மேற்கண்ட அமைவுகளின் மூலம்... இந்த ஸ்தானங்கள் அளிக்கும்... பூர்வ புண்ணிய கர்ம வினைகளின் விளைவுகளை... உதாரணங்களுடன்... இனிவரும் பகுதிகளில் ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

Who am i...? Bhagavan Ramana Mahirishi's experience in his early life.






WHO AM I...?


Bhagavan raised this question in his early days of his life. Venkataraman is his childhood 
name. When he was studying in Madurai, once as usual he returned from the School, was shocked to found his Father was no more.

His Father was kept in a Wooden Bench. Venkataraman went near to his father and touched him. The body was chill. He is not responding to the touch. The body was limb.

Venkataramana asked himself... Who is his father...? If he is the body... he should have responded to him now. But the body is not moving at all. So, he is not the body. He understood... something is went out from this body... which should have been his father. His father is not this body. He is something else.

The next question arises his mind was...What is that...? It was there before... So, his father was active. Now, It was not there... So, his father was inactive.

After his father's cremation process... Venkataraman became a person to himself. His Family, relatives and friends thought, his father's demise made him silent. He needed an answer to the question... What went out from his father...?

One day, after his School, he went to his room in up stair and locked himself in. Like his father, he stretched himself on the bench. He closed his eyes. Made his body rigid. Stopped his breathing from going out. He was in this state for long. His only itch was to find the 'thing' that is within him.

Later, he himself explained,what was happened. ' I closed my eyes. Controlled my breath and concentrated from where is arise.Fear came to my mind, that i am going to die.My heart beat was high. I kept on  to further... then suddenly something inside of me came to guide me through this process much easier. Nothing stopped my mind to enjoy the peaceful happiness that is happening inside. I don't know how much time had been passed. I heard some one calling from a distance, My wakening was happening very slowly...'

After this extraordinary experience, Venkataraman was always silent in School and home. Once someone came to his home from the temple town of Thirvannamalai, told his father about a town named Viluppuram that near to the Hill and Temple and the Lord Annamalaiyar. From that conversation, the name of the Lord and the Hill were attracted him. He himself drew a shape of the Hill in a paper. 

One day, the urges to go to the Hill was itching his mind. He took the piece of paper... which contains the drawing of the Hill and some money from his Brothers pocket... took a Train to Chennai... Got down in Viluppuram. From there he was walking on the path of Thiruvannamalai. In the distance he found the great Hill... and astonished that the drawing in the papar and the shape of the hill were same.

He reached the Temple. Saw the temple and the Hill behind it. Then he went to the pond opposite to the Temple... threw the paper and the money. Tear his dhotty into a small piece and wore it as an inner garment. Took a shower and went to the darkened Temple. Where he found the 'inner self' that guided him... through his inner searching... is  Annamalaiyar. 

At last he found the Source and Place. Where he rested until he mingles it.

Sairam.

Monday, December 9, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 57. "கேந்திர ஸ்தானங்கள்- 'உபய லக்னத்தை' மூலமாகக் கொண்டு" ஸ்தானங்கள். வழியேயான ஜீவனின் வாழ்வு. பகுதி-13.





உபய லக்னத்தாருக்கு... கேந்திர ஸ்தானங்கள்... தனது பூர்வ கர்ம வினைகளை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதை ஆய்வோம்...

உதாரனம் -3

'கன்யா லக்னத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு...

- லக்ன கேந்திராதிபதியாகவும்... தசம கேந்திராதிபதியாகவும் அமையும் 'புத பகவான்' - 'கடக இராசியில்'... பூச நட்சத்திரத்தின் 2 ஆவது பாதத்திலும்...

- சுக கேந்திரத்துக்கும்... களத்திர கேந்திரத்துக்கும் அதிபதிகளாகிய 'குரு பகவான்' - 'ரிஷப ராசியில்'... திருவோணம் நட்சத்திரத்தின் 4 ஆம் பாதத்திலும்... அமைவதாகக் கொள்வோம்.

# இந்த ஜாதகருக்கு 'லக்ன-தசம் கேந்திரதிபதிகளாக'... 'புதன் பகவான்' மட்டுமே அமைகிறார். இவர் 'லாப ஸ்தானத்தில்' அமர்ந்து... தனது 7 ஆம் பார்வையால்... 'பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப்' பார்வை செய்கிறார்.

# 'சுகம் மற்றும் களத்திர கேந்திர ஸ்தானாதிபதிகளாக'... 'குரு பகவான்' ஒருவரே அமைகிறார். இவர் 'பாக்கிய ஸ்தானத்தில்' அமர்ந்து... தனது 5 ஆம் பார்வையாக...'லக்னத்தையும்'... 7 ஆம் பார்வையாக 'தைர்ய ஸ்தானத்தையும்'... 9 ஆம் பார்வையாக 'பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும்' பார்வை செய்கிறார்.

இந்த அமைவில் உள்ள ஜாதகருக்கு...

லக்ன-தசம கேந்திராதிபதியாகிய 'புத பகவானின்' அமைவினால்...

* ஜாதகர் சிறந்த கல்வி மானாக இருப்பார்.
* பெரும் தொழில் மற்றும் வியாபாரங்களுக்கு, ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை நடத்துபவராகவோ... அல்லது நிர்வாக மேலாண்மை செய்பவராக... தொழில் அமையும். ( குரு பகவான் லக்னத்தை பார்வை செய்வதால்...)
* கமிஷன்... ஏஜென்ட்... சேவைத் துறையில் பெரும் பொருளை ஈட்டுபவராக... இவரது தொழில் அமையும். ( குரு பகவானின் பார்வையை 3 ஆமிடம் பெறுவதால்...)
* இவரது பொருளீட்டல்களின் மூலதனம்... பெரும்பான்மையாக Shares... Bonds... Deposits... Buildings... Shopping Malls... துறைகளில் இருக்கும்.(குரு பகவானின் பார்வை லக்னத்திற்கும்...- பூர்வத்திற்கும் இருப்பதால்...)

சுக-களத்திர கேந்திராதிபதியாகிய 'குரு பகவானின்' அமைவினால்...

* இவர் பெரும் கல்வி அறிவு, ஞானத்துடன் கூடியதாக இருக்கும். ( புத பகவானின் அமைவு...)
* வியாபாரத்துறையில் தனது கல்வி அனுபவத்தை பயன்படுத்தக் கூடிய வகையில் அவரது கல்வி அமையும். ( லக்னத்தை குரு பகவான் பார்வை செய்கிறார்...)
* Communication Skills  என்ற தொடர்பு கொள்ளும் அணுகுமுறையில் விற்பன்னராக இருப்பார். ( 3 ஆமிடத்திற்கான குரு பகவானின் பார்வை...)
* இவரின் Contacts  உலகளாவியதாக இருக்கும்.
* இவரின் பூர்வம் மிகப் புகழ்வாய்ந்ததாகவும்... பெருமை மிக்கதாகவும் இருக்கும். (குரு பகவானின் பார்வையைப் பெறும் பூர்வ புண்ணிய ஸ்தானம்...)
* இவரை அணுகும் மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் 'தேர்ந்தெடுத்ததாக' அமையும். அந்தத் தொடர்புகள் அனைத்தும் இவருக்கு மிக லாபகரமானதாகவும்... பெருமை சேர்க்கும்படியாகவும் இருக்கும்.
*சிறந்த இல்வாழ்க்கைத் துணைவரையும்... சிறந்த நண்பர்களையும் அடைவார்.
* இவரின் வார நாட்களின் ஓய்வு கூட... Gatherings ல் கழியும்.
*வாழ்க்கைத் துணைவரும்... தனக்கு ஈடான கல்வி மற்றும் தொழிலில் இவருக்கு உறு துணையாக இருக்குமாறு அமைவார்.

இதுவரையில்... கேந்திர ஸ்தானங்களின் வழியே... சர-ஸ்திர-உபய லக்னதாரர்களுக்கு... ஜாதகர்களின் பூர்வ புண்ணிய-கர்ம வினைகள்... விளைவிக்கும் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பதை ஆய்ந்தோம்.

இனிவரும் பகுதிகளில்...'பண பர ஸ்தானங்கள்' என்ற 2 மற்றும் 11 ஆம் ஸ்தானங்கள்... வெளிப்படுத்தும்... பூர்வ புண்ணிய கர்ம வினைகளின் வெளிப்பாடுகள் அமையும் விதத்தை...இறைவனின் கருணையோடு... ஆய்வோம்...

ஸாய்ராம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 56. "கேந்திர ஸ்தானங்கள்- 'ஸ்திர லக்னத்தை' மூலமாகக் கொண்டு" ஸ்தானங்கள். வழியேயான ஜீவனின் வாழ்வு. பகுதி-12.





கேந்திர ஸ்தானங்கள்... ஸ்திர லக்னத்தாருக்கு (ரிஷபம்-கடகம்-துலாம்-மகரம்) அளிக்கும் பூர்வ வினைகளின் விளைவுகளை... உதாரணத்தோடு அணுகிப் பார்ப்போம்...

உதாரணம் - 2

'கடக லக்னதத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு...

- லக்ன கேந்திராதிபதியாகிய 'சந்திர பகவான்' - 'கடக இராசியில்'... புனர் பூசம் 4 ஆம் பாதத்திலும்...

- 4 ஆம் ஸ்தான கேந்திராதிபதியாகிய... 'சுக்கிர பகவான்' - துலா இராசியில்... சுவாதி நட்சத்திரத்தின் 2 ஆம் பாதத்திலும்...

- 7 ஆம் ஸ்தான கேந்திராதிபதியாகிய... 'சனி பகவான்' - மகர இராசியில்... திருவோன நட்சத்திரத்தின் 2 ஆம் பாதத்திலும்...

- தசம கேந்திராதிபதியாகிய ... 'செவ்வாய் பகவான்' - மேஷ இராசியில்... கார்த்திகை நட்சத்திரத்தின் 1 ஆம் பாதத்திலும்... அமைவதாகக் கொள்வோம்.

# இந்த ஜாதகருக்கு லக்ன கேந்திராத்பதியாகிய 'சந்திர பகவான்' லக்ன கேந்திரத்திலேயே அமைகிறார். இவர் லக்னாதிபதியுமாகிறார். தனது 7 ஆம் பார்வையாக... 'களத்திர பாவம்' என்ற 7 ஆம் கேந்திரத்தையும்... அங்கிருக்கும் கேதிராதிபதியாகிய 'சனி பகவானையும்' பார்வை செய்கிறார்.

# சுக கேந்திராதிபதியாகிய 'சுக்கிர பகவான்' சுக ஸ்தானத்தில் பலம் பெற்று அமைகிறார். இவர் தசம கேந்திரத்தையும்... அங்கிருக்கும் 'செவ்வாய் பகவானையும்' பார்வை செய்கிறார்.

# களத்திர கேந்திராதிபதியாகிய 'சனி பகவான்' களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து... தனது 3 ஆம் பார்வையாக... சுக-விரய-சயன் ஸ்தானத்தையும், தனது 7 அம் பார்வையாக... லக்ன கேந்திரத்தையும்... கேந்திராதிபதியாகிய 'சந்திர பகவானையும்', தனது 10 ஆம் பார்வையாக... சுக கேந்திரத்தையும்... கேந்திராதிபதியாகிய 'சுக்கிர பகவானையும் பார்வை செய்கிறார்.

# தசம கேந்திராதிபதியாகிய 'செவ்வாய் பகவான்' தசம கேந்திரத்திலேயே அமர்ந்து... தனது 4 ஆம் பார்வையாக லக்ன கேந்திரத்தையும்... கேந்திராதிபதியாகிய 'சந்திர பகவானையும்', தனது 7 ஆம் பார்வையாக... சுக கேந்திரத்தையும், கேந்திராதிபதியாகிய 'சுக்கிர பகவானையும்'. தனது 8 ஆம் பார்வையாக... பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும்... பார்வை செய்கிறார்.

இந்த அமைவில் உள்ள ஜாதகருக்கு...

லக்ன கேந்திராதிபதியாகிய 'சந்திர பகவானின்' அமைவினால்...

* அழகான ரூபத்தையும்... அனைவரையும் ஈர்க்கும் உடல் வாகையையும் பெற்றிருப்பார்.
* நல்ல எண்ணங்களையும்... அதை நேர்த்தியாகவும், நேர்மையாகவும், கடமை உணர்வோடும் வெளிப்படுத்துவராகவும் இருப்பார்.( செவ்வாய் பகவானின் பார்வையையும்... சனி பகவானின் பார்வையையும் பெறுவதால்...)

சுக கேந்திராதிபதியாகிய 'சுக்கிர பகவானின்' அமைவினால்...

* நிறைந்த சுகத்தை அனுபவிப்பராக இருப்பார்.
* தனது மனதுக் கேற்ற சுக வாழ்வை வாழ்பவராகவும்... அதை தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அமைத்துக் கொடுப்பவராகவும் இருப்பார். ( சனி பகவானின் பார்வையைப் பெறுவதால்...)
* கடமைகளிலிருந்து தவறாதவராகவும்... தனது கடமைகளை மிக நேர்த்தியாகவும், அழகுணர்வோடும்... அணுகுபவராக இருப்பார். (செவ்வாய் பகவானின் பார்வையைப் பெறுவதால்...)
* விடு-வாகனம்-விளை நிலங்கள்- கால்நடைகள்... என விருத்தியாம்சமான வாழ்வை வாழ்பவராக இருப்பார்.

களத்திர கேந்திராதிபதியாகிய 'சனி பகவானின்' அமைவினால்...

* நேர்மையான... தர்மத்துடன் கூடிய நட்பும், துணையும் அமையப் பெற்றவராக இருப்பார்.
* நட்புக்கும்... துணைக்கும் அவர்களுக்கான பூரண சுதந்திரத்தையும்... அதில் அவர்களுக்குத் தனது உதவி தேவைப்படும் நேரத்தில்... தக்க உதவியை வழங்கிடும் குணாதிசியத்தைப் பெற்றவராக இருப்பார். ( சந்திர பகவானின் பார்வையைப் பெறுவதால்...)
* மன்னருக்கு மந்திரி போல்... மதியூகம் மிக்க துணை அமையும் வாய்ப்பை பெற்றிருப்பார்.

தசம கேந்திராதிபதியாகிய 'செவ்வாய் பகவானின்' அமைவினால்...

* கடமை தவறாத... கண்ணியம் மிக்க... வீரனாக செயல்படுவார்.
* செய்யும் செயல்களில் நேர்த்தியும்... அழகுணர்ச்சியும்... தனித்தன்மையும்... நிரம்பப் பெற்றவராக இருப்பார். ( செவ்வாய் பகவானின் பார்வையைப் பெறுவதால்...)
* நிர்வாக ஒழுங்கு... இவர் ஸ்தானம் வகிக்கும் ஒவ்வொரு துறையிலும் பளிச்சிடும் வண்ணமாக இவரது செயல்கள் அமையும்.
* தனது கடமைகள் அனைத்தையும் பூர்த்தி செய்பவராக இருப்பார்.

இதுவரை... லக்னம்-சுகம்-களத்திரம்-ஜீவனம் என்ற கேந்திர ஸ்தானங்கள் வழியாக 'கர்ம வினைகள் என்ற பூர்வ புண்ணிய வினைகள்'  ஸ்திர லக்ன ஜாதகர்களுக்கு செயல்படுகிறது....? என்பதைப் பார்த்தோம்.

இனிவரும் பகுதியில்... உபய லக்னத்தாருக்கு... பூர்வ வினைகளின் வெளிப்பாட்டை... இந்த கேந்திர ஸ்தானங்கள் எவ்வாறு... வெளிப்படுத்துகிறது என்பதைத் தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

Saturday, December 7, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 55. "கேந்திர ஸ்தானங்கள்- 'சர லக்னத்தை' மூலமாகக் கொண்டு" ஸ்தானங்கள். வழியேயான ஜீவனின் வாழ்வு. பகுதி-11.





கேந்திர ஸ்தானங்கள்... சர லக்னத்தாருக்கு ( மேஷம்-கடகம்-துலாம்-மகரம்) அளிக்கும் 'பூர்வ வினைகளின் விளைவுகளை...' உதாரணத்தோடு அணுகிப் பார்ப்போம்...

உதாரணம் - 1

'மேஷ லக்னத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு...

- லக்ன கேந்திராதிபதியாகிய... 'செவ்வாய் பகவான்' - மேஷ இராசியில்... 'கார்த்திகை நட்சத்திரத்தின் 1 ஆம் பாதத்திலும்'...

- 4 ஆம் ஸ்தான கேந்திராதிபதியாகிய... 'சந்திர பகவான்' - கடக இராசியில்... 'புனர்பூச நட்சத்திரத்தின் 4 ஆம் பாதத்திலும்'...

- 7 ஆம் ஸ்தான கேந்திராதிபதியாகிய... 'சுக்கிர பகவான்' - துலா இராசியில்... 'சுவாதி நட்சத்திரத்தின் 2 ஆம் பாதத்திலும்'...

- 10 ஆம் ஸ்தான கேந்திராதிபதியாகிய... 'சனி பகவான்' - மகர இராசியில்... 'திருவோண நட்சத்திரத்தின் 2 ஆம் பாதத்திலும்'... அமைவதாகக் கொள்வோம்.

# இந்த ஜாதகருக்கு லக்ன கேந்திராதிபதியாகிய செவ்வாய் பகவான்... லக்னத்திலேயே அமர்ந்து, வலுத்து... தனது 4 ஆம் பார்வையாக... 'சுக ஸ்தானத்தையும்', அதிலமர்ந்திருக்கிற 'சுகாதிபதியாகிய'... 'சந்திர பகவானையும்' பார்வை செய்கிறார். தனது 7 ஆம் பார்வையாக... 'களத்திர ஸ்தானத்தையும்', அதிலமர்ந்திருக்கிற... 'சுக்கிர பகவானையும்' பார்வை செய்கிறார். தனது 8 ஆம் பார்வையாக... 'ஆயுள் ஸ்தானமான' தனது வீட்டைப் பார்வை செய்கிறார்.

#  சுக கேந்திராதிபதியாகிய சந்திர பகவான்... 'சுக ஸ்தானத்திலேயே' அமர்ந்து, வலுத்து... தனது 7 ஆம் பார்வையாக...'ஜீவன பாவமான'... கேந்திரத்தையும்... கேந்திர ஸ்தானாதிபதியாகிய... 'சனி பகவானையும்' பார்வை செய்கிறார்.

# தசம கேந்திரதிபதியாகிய சனி பகவான்...  'தசம கேந்திரமான ஜீவன-கர்ம ஸ்தானத்திலேயே' வலுத்து... தனது 3 ஆம் பார்வையாக... 'விரயம் என்ற சுக-சயன ஸ்தானத்தையும்'... 7 ஆம் பார்வையாக 'சுக ஸ்தானமான கேந்திரத்தையும்'... கேந்திராதிபதியான 'சந்திர பகவானையும்' பார்வை செய்கிறார். தனது 10 ஆம் பார்வையாக... களத்திர, கேந்திர ஸ்தானாதிபதியாகிய 'சுக்கிர பகவானையும்'... பார்வை செய்கிறார்.

இந்த அமைவில் உள்ள ஜாதகருக்கு...

லக்ன கேந்திராதிபதியாகிய 'செவ்வாய் பகவானின் அமைவினால்...

* தனக்கென பாதையை வகுத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றவராக இருப்பார்.
* தனது முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் தன்மையுள்ளவராக இருப்பார்.
* தான் நினைத்ததைச் சாதித்துக் கொள்ளும் வல்லமை பெற்றவராக இருப்பார் (சந்திர பகவானை பார்ப்பதால்..)
* தனது ஆளுமையை வெளிப்படுத்தி... தன் வட்டத்திற்குள் வரும் அனைவரையும் தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் வல்லமையைப் பெற்றிருப்பார் (சுக்கிர பகவானின் பார்வையைப் பெறுவதால்...)
* மிகவும் சுறு சுறுப்பானவராகவும்... கடின உழைப்பாளராகவும்... சிறந்த நிர்வாகத் திறமை மிக்கவராகவும்... கட்டுப்பாடுடன் கூடிய ஒழுக்க சீலராகாவும் திகழ்வார் ( சூரிய பகவானின் நட்சத்திர சாரம் பெற்றதால்...)

சுக கேந்திராதிபதியாகிய 'சந்திர பகவானின்' அமைவினால்...

* நிறந்த சுகத்தை அனுபவிப்பராக இருப்பார்.
* அதற்கேற்ப உடல் மற்றும் மன வலிமையைப் பெற்றிருப்பார் (செவ்வாய் பகவானின் பார்வையைப் பெறுவதால்...)
* கடமைகளைச் செய்யும் போது... அதன் பாதையில் எந்த சுகத்தையும் இழக்கத் தயாராக இருப்பார் ( சனி பகவானின் பார்வையைப் பெறுவதால்...)

களத்திர கேந்திராதிபதியாகிய 'சுக்கிர பகவானின்' அமைவினால்...

* மனதிற்கு இனியவர்கள் நட்பாகவும்... துணையாகவும் அமைவார்கள்.
* மனதிற்குள் இருக்கும் அன்பை... செயல்களினால்தான் வெளிப்படுத்துவார்கள். வார்த்தைகளால் வெளிப்படுத்தும் தன்மை இவர்களிடம் இருப்பது அரிது (செவ்வாய் பகவானின் பார்வையைப் பெறுவதால்...)
* நண்பர்களுக்கும்... துணைவருக்கும் எப்போதும் துணையாக இருப்பார்கள். அவர்களுக்கான கடமைகளிலிருந்து ஒரு போதும் விலகி விட மாட்டார்கள் (சனி பகவானின் பார்வையைப் பெறுவதால்...)

தசம கேந்திராதிபதியாகிய 'சனி பகவானின்' அமைவினால்...

* கடமைகளை தவற விட மாட்டார்கள்.
* கடமைகளிலிருந்து விலகவும் மாட்டார்கள்.
* நினைத்தை... நினைத்தபடியே முடிப்பதற்கு எவ்வளவு முயற்சியையும் மேற்கொள்ளத் தயாராக இருப்பர்.(சந்திர பகவானின் பார்வையைப் பெறுவதால்...)
* கடும் உழைப்புக்கேற்ற உடல் வன்மையைப் பெற்றிருப்பார் (செவ்வாய் பகவானைப் பார்ப்பதால்...)
*இவரின் அனைத்து செயல்பாடுகளும் மிக சேர்த்தியாக மட்டுமல்ல... மிக அழகியலுடன் கூடியதாகவும் இருக்கும் )சுக்கிர பகவானை பார்வை செய்வதால்)

இதுவரை...  'லக்னம்-சுகம்-களத்திரம்-ஜீவனம்' என்ற கேந்திராதிபதிகள்... 'சர லக்னத்தை' சார்ந்த ஜாதகருக்கு... பலம் பெற்று அமையும் போது... அவை வெளிப்படுத்தும் 'பூர்வ கர்ம வினைகளின் வெளிப்பாடுகள்...' எவ்வாறு அமைகிறாது என்பதைக் கண்டோம்.

இனிவரும் பகுதிகளில்... 'ஸ்திரம் மற்றும் உபய லக்னங்களில்' பிறக்கும் ஜாதகர்களின்... 'கேந்திர ஸ்தான அமைவுகள்' உணர்த்தும் கர்ம வினைப் பயன்களின் வெளிப்பாடுகளை... படிப்படியாக ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

Friday, December 6, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 54. 'கேந்திர ஸ்தானங்கள்' ஸ்தானங்கள். வழியேயான ஜீவனின் வாழ்வு. பகுதி-10.





12 இராசி வீடுகளைக் கொண்ட இந்த ஜோதிட சித்திரத்தில்... ஜீவன் பிறப்பெடுத்த நேரம்... 'லக்னமாக' அமைகிறது. இந்த லக்னத்தை மூலமாகக் கொண்டு... 'ஏனைய ஸ்தானங்கள்' அமைகின்றன.

அந்த ஸ்தான அமைவுகளில்... 'திரிகோணம்' என்ற 'முதல் ஸ்தான அமைவை' இதுவரை ஆய்ந்தோம். இந்த ஸ்தானம் ஜீவனின் 'கர்ம வினைகளை' அடிப்படையாகக் கொண்டு... 'உலகவாழ்வையும்... உள் வாழ்வையும்'... எவ்வாறு நிர்ணயிக்கிறது என்பதையும் ஆய்ந்தோம்.

இந்தத் தொடரில்... ஒரு ஜீவன், தனது 'கர்ம வினைகளின்' வழியேயான வாழ்வை... எவ்வாறு 'உலகியல் ரீதியாகவும்... உள் வாழ்வின் ரீதியாகவும்...' தனது 'கடமைகளின் அடிப்படையில்...' கடந்து போகிறது என்பதை ஆய்வோம்.

கடமைகளின் அடிப்படையில்... எனும் போது... அதை 'கேந்திர ஸ்தானங்கள்' என்ற 'இரண்டாவது ஸ்தான அமைவு' வழியே அணுகலாம். இந்த கேந்திர ஸ்தானங்கள்... ஜீவனை உலக வாழ்வில்... ஜீவனை கடமைகளின் வழியே அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கை அளிக்கிறது.

கேந்திர ஸ்தானங்கள் :

லக்னம் (1), சுகம் (4), களத்திரம் (7) மற்றும் ஜீவனம் (10) என்ற இந்த நான்கு ஸ்தானங்களைத்தான்... 'கேந்திர ஸ்தானங்கள்' என்று அழைக்கிறோம். இந்த அமைவு...ஒரு ஜீவனின் வாழ்வு நிலையை உணர்த்தும் இரண்டாவது முக்கிய ஸ்தானங்களாக அமைகிறது.

லக்னம்

'பிராரப்த கர்மா' (கர்ம வினைகள்) என்ற... இந்த 'வாழ்விற்கான திட்டங்களுடன்' பிறப்பெடுக்கும் ஜீவன்... அதற்கேற்ப பிறவியை அடைகிறது. அந்தப் பிறவிக்குண்டான தகுதிகள் எவ்வாறு அமைகிறது... என்பதை, ஜீவனின் 'லக்ன பாவம்' உணர்த்துகிறது.

சுகம்

ஜீவன்... தனது, இளமைக் காலத்தை எவ்வாறு கடந்து போகிறது... என்பதை உணர்த்தும் 'சுக பவமாக' இந்த ஸ்தானம் அமைகிறது. அது கல்வி என்ற அறிவின் வழியே பயணித்து... அதன் வழியேயான வாழ்வை அடைகிறதா...? அல்லது உழைப்பை மூலமாகக் கொண்டு... அதன் வழியேயான வாழ்வை அடைகிறதா...? அந்த ஜீவனின் சுகானுபவங்கள் எவ்வாறு அமைகின்றது...? என்பதை உணர்த்தும் ஸ்தானமாக அமைகிறது.

களத்திரம்

உலகில் பிறப்பெடுக்கும் ஜீவனின்... வாழ்வின் பாதையை தீர்மானிக்கும் பாவமாக இந்த பாவம் அமைகிறது. தனது,, கர்ம வினைகள்... ஜீவனை, இக-லோக வாழ்வின் கடமைகளின் வழியே  'திருமண பந்தத்தில்' அழைத்துச் செல்கிறதா...? அல்லது கடமைகளிலிருந்து விடுபட்டு  'பிரம்மச்சர்யம்' என்ற பாதையில் அழைத்துச் செல்கிறதா...? என்பதை தீர்மானிக்கும் ஸ்தானமாக அமைகிறது. ஒரு ஜீவனை பந்தத்தில் இணைத்துவிடுவதும்... விடுவிப்பதும்... இந்த ஸ்தான அமைவையொட்டிதான் அமைகிறது.

ஜீவனம் 

ஜீவன், இந்த உலக வாழ்வில்... தனது 'கர்ம வினைகள்' வெளிப்படுத்தும் கடமைகளின் வழியே எவ்வாறு கடந்து போகிறது...? என்பதை வெளிப்படுத்தும் 'ஜீவன பாவமாக' அமைகிறது. ஒவ்வொரு ஜாதகச் சித்திரத்தின் ஆரம்பத்தில்லும் குறிப்படப்படும் ஒரு 'சுலோகம்'...

                                                                                                                                                                '... ஜனனி ஜன்ம சௌக்யானாம்...
     வர்த்தனீ குல சம்பதாம்...
     பதவீ பூர்வ புண்யானாம்...
     லிக்யதே ஜன்ம பத்ரிகா...'

'பதவி' என்ற ஒரு ஸ்தானம்... அந்தந்த ஜிவனின் கர்ம வினைகளின் விளைவுகளின் வழியேதான் அமைகிறது... என்பதை சுட்டிக் காட்டுகிறது. அந்தப் பதவி... அந்த ஜீவன் வகிக்கப்போகும் புத்திரன்... சகோதரன்... கணவன்... தந்தை... தாத்தா என்ற குடும்பப் பதவிகளாகவும் அமையலாம். அல்லது, உத்தியோகம்... தொழில் என்ற பதவிகளாகவும் அமையலாம். அல்லது சிஷ்யன்... குரு... சத்குரு என்ற பதவிகளாகவும் அமையலாம். இதைத்தான்... இந்த 'ஜீவன் கர்ம பாவம்' உணர்த்துகிறது.

இவற்றை உதாரணங்களோடு அணுகுவோம்... இனி வரும் பகுதிகளில்... இறவனின் அருளோடு...

ஸாய்ராம்.

Thursday, December 5, 2019

திருக்குறள் உணர்த்தும் ஞானம் - பகுதி 6. 'இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு'.





"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
 பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"...                                                                                                                                                            ( அதிகாரம் : கடவுள் வாழ்த்து, குறள்-5 )


'உலகப் பொது மறை' என்று போற்றப்படும் திருக்குறள்... 'அறம்... பொருள்...இன்பம்... வீடு...' என்ற வாழ்வின், நால்வகை வழி முறைகளை அளித்திருந்தாலும்... காலப்போக்கில், நம்மிடம் எஞ்சி இருப்பது... 'அறம்-பொருள்-இன்பம்' என்ற மூன்று வழிகாட்டுதல்கள்தான்.

ஆனால்... 'வீடு' என்ற அரும்பொக்கிஷம் அளித்திருக்கக் கூடிய அனுபவத்தை... 'கடவுள் வாழ்த்து' என்ற அதிகாரத்தில்... முதல் 'பத்து குறள்களிலேயே' அளித்து விடுகிறார் இந்த 'சித்த மகா புருஷர்'.

இந்த 5 ஆம் குறள் அளிக்கும் பொது விளக்கம்...

'கடவுளின் உண்மைப் புகழை விரும்பி... பக்தி செலுத்துகிறவர்களிடம், இருள் வாழ்வை ஒப்பும்... இரண்டு வினைகளும் சேர்வதில்லை...' என்பதாக அமைகிறது.

'உலகவாழ்வு, உள்வாழ்வு'... என்ற இரு நிலைகளிலும் நம்மை வழி நடத்தும்... 'பொதுமறையான'... திருக்குறள், 'இரு நிலை வாழ்வுக்கும்' மிகத் தெளிவான... அனுபவத்துடன் கூடிய... வழிகாட்டுதல்களை அளிக்கிறது.

உலக வாழ்வில்... 'பிறவிப் பிணி' என்ற 'தொடர் பிறவிகள்தான்'... நீக்க முடியாத துன்பமாகக் கருதப்படுகிறது. இந்தத் துன்பத்திலிருந்து நீங்குவதற்கான, ஒரே வழி... மீண்டும் பிறவியை அடையாத நிலைதான். அந்த நிலைக்கான வழிமுறையைத்தான்... இந்த முனிபுங்கவர் அளிக்கிறார்.

பிறவிக்குக் காரணமான 'கர்ம வினைகளுக்கு'... மூலமாக இருப்பது... ஜீவன், தனது 'கர்ம வினைகளின்' மூலம் வெளிப்படுத்தும்... செயல்பாடுகளின் விளைவுகளினால்... சேரும், 'நல்வினைகள் மற்றும் தீவினைகள்'... என்ற 'இரு வினைகளின் 'தொகுப்புகள்தான்.

இந்த இருவினைகளின் சேர்க்கை, மீண்டும், மீண்டும் ,,, ஜீவர்களை பிறப்புகளுக்குள் ஆழ்த்துகிறது. இந்த 'இருள் வாழ்விலிருந்து' மீள்வதற்கான உபாயம் எது...? என்ற கேள்விக்கான பதிலை இந்தக் குறளின் மூலம் அளிக்கிறார்.

எவரொருவர்... தனது வாழ்நாளிலேயே... இந்த இரு-வினைகளிலிருந்தும் விடுபட்டு... இந்த 'இருள் வாழ்வின் சுழலை வென்று'... 'என்றும் ஒளிரும்... ஒளி வாழ்வில் ஒன்று கலந்திருக்கிறாரோ... அவரால்தான், இதற்கு வழிகாட்ட முடியும். அவர்தான்...'சத்குரு' என்று அழைக்கப்படுகிறார்.

அந்த 'சத்குருவைத்தான்'... இறைவன் பொருள் சேர்ந்தார் புகழ்புரிந்தார் மாட்டு' என்ற அடியில் வலியுருத்துகிறார்.

உலகச் சுகங்களுக்காக தேடும் 'பொருள்களாக'... பிறவிகளுக்குள் ஆழ்த்தும், 'நிலையற்ற செல்வங்களைக்' குறிப்பிடுகிறார்.

உள்வாழ்வின் நிரந்தர சுகங்களுக்காக... இறைவனிடம் சென்றடையும்... 'பக்தி - ஞானம் - கர்மம்...' என்ற நிலையான வழிமுறைகள... 'பொருள்கள்' என்று குறிப்பிடுகிறார்.

அந்த ... இறைவனை அடையும் வழிமுறைகளான... பக்தி... ஞானம்... கர்மம்... வழியே... ஒரு ஜீவனை, வழிநடத்தும் 'சத்குரு'... அந்த ஜீவனை, மீண்டும் இருள் நிலைக்குத் தள்ளும்... பிறவிகளிலிருந்து மீட்டு... ஒளியுள்ள... இரண்டு வினைகளும் சேராத... பிறவிகளற்ற வாழ்வில் கொண்டு சேர்த்துவிடுவார்... என்பதைத்தான் இந்தக் குறள்... சூட்சுமமாக வெளிப்படுத்துகிறது.

இதைத்தான்...

'குரு பிரம்மா... குரு விஷ்ணு... குருத் தேவோ மகேஸ்வரஹ... குரு சாக்ஷாத் பரப்பிரம்மா... தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ...'

என்ற சுலோகம் வெளிப்படுத்துகிறது.

ஸாய்ராம்.


Wednesday, December 4, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 53. 'திரிகோணமும் -_உலக வாழ்வும்'. ஸ்தானங்கள் வழியேயான ஜீவனின் வாழ்வு. பகுதி-9.





திரிகோண அமைவுகள் உணர்த்தும் சில சூட்சும பலன்கள் :

'உலக வாழ்விலே' திளைத்து நிற்கும் ஜீவர்களுக்கென அமையும்... சில சிறப்பான அமைவுகளை ஆய்வோம்...

கிரகங்களின் சிறப்பு அமைவுகள் :

* ஆத்மகாரகரான 'சூரிய பகவானும்'... அறிவு, புத்தி மற்றும் வியாபாரயுக்தியையும்... மதியூகத்தையும் வழங்கும்... 'புத பகவானும்'... இணைந்து... வலுப்பெற்றிருப்பர். இந்த இணைவு... தொழில் மற்றும் லாபாதிபதியுடனும்... தொடர்பையும் பெற்றிருக்கும் வண்ணம் அமைந்திருக்கும்.

* கிரகிக்கிம் தன்மையை வழங்கும்... 'சந்திர பகவானும்'... ஆற்றலை வழங்கும் 'செவ்வாய் பகவானும்'... ஜாதகத்தில் வலுத்து அமைந்திருப்பார்கள். அவர்களுக்கிடையே 'ஒரு சூட்சும தொடர்பு' இருக்கும் வண்ணம் அமைவு இருக்கும்.

* ஞானக்காரகரான 'குரு பகவான்'... தனக்காரகராகவும் இருப்பதால்... அவர் வலிமை பெருவது மட்டுமல்ல... திரிகோணாதிபதிகளுடனும்... தன-லாபாதிபதிகளுடன்  தொடர்பைப் பெற்றிருப்பார்.

* உலக சுகங்களுக்கு ஆதாரமான... 'சுக்கிர பகவான்' வலுப்பெற்று அமர்ந்திருப்பார். ஆயுள் காரகராகவும்... உழைப்பு மற்றும் உழைப்பாளர்களின் காரகத்துவத்துக்கு அதிபதியாகி வலுத்த...'சனி பகவானுடனும்'... வியாபாரம் என்ற உலக விருத்தி நாயகனான... 'புத பகவானுடனும்' ஒரு சூட்சுமமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்.

* 'போகக்காரகன்' என்று வருணிக்கப்படும்... 'ராகு பகவான்'... நிழல் கிரகமாக இருப்பதால்... நிழலாகவும், கனவாகவும், கற்பனையாகவும் நினைக்கப்படும் தொழில்களில்...  வல்லமையுடன் இருக்கும் வண்ணமாக அமைந்திருப்பார்.

* ஞானம் மற்றும் மோக்ஷத்திற்குக் காரகரான... 'கேது பகவான்'... பலம் குன்றி இருப்பார். அவர் உலக வாழ்வுக்கு இடையூறு இல்லா வண்ணம் அமைந்திருப்பார்.

இராசிக் கட்டத்தில்... 'லக்ன பாவங்கள்'... சில சூட்சும அமைவுகள் மூலம்... உலக வாழ்வை நோக்கித் திரும்பும் ஜீவனுக்கான அமைவை சுட்டிக் காட்டும்...

* லக்ன பாவம் வலுத்து... பூர்வம், பாக்கியத்துடன் தொடர்பு பெற்றிருக்கும்.
* தன-லாப பாவங்கள் வலுத்திருக்கும்.
* தைர்ய பாவம் வலுத்திருக்கும்
* சுக பாவம் வலுத்திருக்கும்.
* பூர்வ பாவம் வலுத்து... லக்னம் மற்றும் பாக்கியத்துடன் தொடர்பு பெற்றிருக்கும்.
* சத்ரு பாவம் நசித்திருக்கும்.
* களத்திர பாவம் வலுத்து பூர்வத்துடன் ஒரு தொடர்பை பெற்றிருக்கும்.
* ஆயுள் பாவம் வலுத்து அதன் அட்டமாதித்தியம் குறைந்திருக்கும்.
* தர்மம்-பாக்கிய பாவம் வலுத்து... லக்னம் மற்றும் பூர்வத்துடன் தொடர்பை பெற்றிருக்கும்
* ஜீவன'கர்ம ஸ்தானம் வலுத்து... லக்னத்துடன் சூட்சுமமான தொடர்பை பெற்றிருக்கும்.
* சுக-சயன் ஸ்தானம் வலு குறைந்திருக்கும். ஓயாத உழைப்புக்கு வழிகாட்டுவதாக அமையும்.

இவ்வாறு... கிரகங்களும்... பாவங்களும் அமைந்து, ஜீவனை உலக வாழ்வின் சுகம் மட்டுமே இலக்கு என்பதற்கு ஏற்றவாறு ஜீவனை வழி நடத்தும்.

இதுவரை... திரிகோண அமைவை பற்றிய சில சூட்சுமமான விடயங்களுக்குள் இறைவனின் அருளோடு... பயணித்தோம்... தொடர்ந்து... கேந்திர அமைவை பற்றிய சூட்சுமங்களுக்குள் பயணிப்போம்...

ஸாய்ராம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 52. 'திரிகோணமும் -_உலக வாழ்வும்'. ஸ்தானங்கள் வழியேயான ஜீவனின் வாழ்வு. பகுதி-8.





'உலக வாழ்வுக்கு' இட்டுச் செல்லும் 'திரிகோண அமைவையும்'... அதற்கேற்ப ஜாதகத்தில் அமையும் கிரக அமைவுகள் மற்றும் பாவ அமைவுகளையும் ஆய்வோம்...

# 'உலக வாழ்வு' என்ற புற வாழ்வை நோக்கி பயணம் செய்யும் ஜீவனுக்கு... இந்த 'திரிகோணம்' என்ற 'முக்கூட்டுக் கிரகங்கள்' வலுக்கும் போது... பரந்து... விரிந்து இருக்கும் உலக வாழ்வில்... அனைத்து சுகங்களையும் அனுபவிக்கும் பாக்கியங்களும்... பெயரும்... புகழும் வந்து சேரும் வகையில் ஜீவனின் பிறப்பு அமையும்.

பிறவியின் போதே... உலக வாழ்வு உச்சத்திற்கு செல்லும் வாய்ப்புடைய குடும்பத்தில் பிறவி அமையும். செல்வச் செழிப்பில் பிறக்கும் வாய்ப்பு ஏற்படும். தேடுதல் என்ற குறிக்கோளுடன்... தனது இலக்கை நோக்கி பயணம் செய்வதற்கான புண்ணியங்களைப் பெற்றுக் கொண்டு பிறவி அமையும். 'The baby born with silver spoon...' என்ற வாக்குக்கு ஏற்றபடியான... பூர்வம் என்ற 5 ஆம் கோணம் அமையும்.

பிறந்ததிலிருந்தே ஒரு தேடுதல் இந்த ஜீவனுக்கு இருக்கும். குடும்பத்திலும்... உறவிலும்... சுற்றத்திலும்... அனைவரும் ஈர்க்கும் வண்ணம் பிள்ளைப் பருவம் இருக்கும். எதிர்கால சுக வாழ்வுக்கான போராட்டத்திற்கு ஏற்றவாறு கல்விப் பாதை அமையும். புரிந்து கொண்டு படிக்கும் தன்மையும்... அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது எப்படி...? என்ற தேடுதல் எப்போதும் இருக்கும். எந்த விஷயத்தை அணுகினாலும்... அதனால் தனக்கு என்ன லாபம் கிடைக்கும்...? என்ற தேடுதல் இருக்கும். எந்தப் போராட்டத்தையும்... தைர்யத்துடன் எதிர்கொள்ளும் தன்மை இயல்பாகவே இருக்கும். சுறுசுறுப்பான உள்ளத்தையும் ... தெகத்தையும் கொண்டவராக ஜாதகர் இருப்பார். இதை லக்னம் என்ற 1 ஆம் கோணம் உணர்த்தும்.


'தொட்டது எல்லாம் துலங்கும்...' என்பது இவருக்குப் பொருந்தும். இயற்கையாகவே ஈர்ப்புத் தன்மை கொண்டவராதலால்... எந்தத் துறையில் இவர் ஈடுபட்டாலும்... அந்தத் துறையில் உள்ளவர்களால்... அரவணைக்கப்படுவார். அந்தத் துறையில் இருக்கும் அனைத்து படிநிலைகளையும் கற்றுத் தேர்ந்து... அதில் முன்னிலை வகிப்பார். தந்தை, தாய், சகோதரம்... உறவுகள்... நட்பு... சுற்றம்... என அனைவருடனும் அரவணைப்புடன் நடந்து கொள்வார். அனைவரது அன்பையும்... அரவணைப்பையும்... எப்போதும் அனுபவிப்பாராக வாழ்வு அமையும்.

பூர்வத்திலும்... தனது உழைப்பாலும் சேர்த்த சொத்துக்களை பன்மடங்காகப் பெருக்கும் வண்ணம்... இவரது வாழ்வு அமையும். தன-தான்யங்கள்... வீடு-வாகனங்கள்... பொன்-பொருள்கள்... என செல்வச் செழிப்புடனான வாழ்வை வாழ்வார். பெயரும்... புகழும் கிடைக்கும் வகையிலான தான-தர்மங்களில் மட்டும் ஈடுபடுவார். உலக வாழ்க்கை சுகம் மட்டுமே உண்மை... என்ற அசையா நம்பிக்கையைப் பெற்றிருப்பார். இதை பாக்கியம் என்ற 9 ஆம் கோணம் வெளிப்படுத்தும்.

இந்த 'உலக வாழ்வை' வெளிப்படுத்தும் ஜாதகத்தில்... அமைந்திருக்கும் சிறப்பான கிரக அமைவுகளைப் பற்றியும்... லக்ன பாவங்களையும்... தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்...

Tuesday, December 3, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 51. 'திரிகோணமும் -_உள்வாழ்வும்'. ஸ்தானங்கள் வழியேயான ஜீவனின் வாழ்வு. பகுதி-7.







'திரிகோண அமைவுகள்' உணர்த்தும் சில சூட்சுமங்கள்...

'உள் வாழ்வை' நோக்கித் திரும்பும் ஜாதகங்களில்... ' சிறப்பு அமைவுகள்' அமைந்திருக்கும்...

கிரகங்களின் சிறப்பு அமைவுகள் :

* ஆத்மக்காரகர் என்றழைகாப்படும் 'சூரிய பகவான்' பெரும்பாலும்... உச்ச கதி, ஸ்தான பலம், நட்பு வீட்டுகள் என பலத்துடன் அமைந்திருப்பார்.

* அறிவுக்கும், புத்திக்கும் காரகரான... 'புத பகவான்', 'மறைந்த புதன் நிறைந்த கல்வி...' என்பதற்கேற்ப... பொருள் தேடும் உலகக் கல்வியை விடுத்து... அருள் தேடும் ஞானக்கல்வியை அளிக்கும் வகையில்... அமைந்திருப்பார்.

* கிரகிக்கும் தன்மையை வெளிப்படுத்தும்... 'சந்திர பகவான்'... 'புத பகவானுடன்'... சூட்சுமமான தொடர்பைப் பெற்றிருப்பார்.

* ஆற்றலை வெளிப்படுத்தும்... 'செவ்வாய் பகவான்' பலத்துடன் அமைந்து... மனம் மற்றும் உடலை ஆளும்... 'சந்திர பகவானை' சூட்சுமமாக இயக்கும்படி அமைந்திருப்பார்.

* ஞானத்தையும்... மோக்ஷத்தையும் அளிக்கும் 'கேது பகவான்'... பலமுடன் அமைந்து... உள் வாழ்வுக்கான வழிகாட்டுதலுக்கு வழிகாட்டியாக இருப்பார்.

* உள் வாழ்வுக்கு வழி காட்டும் பிரதானமான கிரகமான... ஞானக்காரகரான... 'குரு பகவான்' மிகுந்த வலிமையுடன் இருப்பார். அவர் மேற்குறிப்பிட்ட அமைவுகளில் அமைந்திருக்கும்... 'சூரிய-சந்திர-செவ்வாய்-புத-கேது பகவான்களுடன்' தொடர்புடன் இருப்பார்.


*  துறவுக்கும்... உறவுக்கும் ஆயுள் பலம் தேவை. ஆயுளுக்குக் காரகரான 'சனி பகவான்'... துறவு என்ற பற்றற்ற நிலக்கும்... உள்வாழ்வுக்கும்... காரகத்துவமானவர்தான். உள்வாழ்வுக்கான ஜாதக அமைவில்... இந்த சனி பகவான்... 'குரு பகவானின்'  சூட்சுமமான கட்டுக்குள் கட்டுப்பட்டிருப்பார்.

* உலக சுகத்திற்கு வழிகாட்டும்... 'சுக்கிர பகவானும்'... 'ராகு பகவானும்'... பலம் இழந்து காணப்படுவர்.

இராசிக் கட்டத்தில்... 'லக்ன பாவங்கள்'... சில சூட்சும அமைவுகளின் மூலம்... இந்த உள்வாழ்வை நோக்கித் திரும்பும் ஜீவனுக்கான அமைவை சுட்டிக் காட்டும்...:

* லக்ன பாவம் வலுத்திருக்கும்.
* குடும்ப பாவம் வலு குறைந்திருக்கும்.
* தைர்ய பாவம் வலுத்திருக்கும்.
* சுக பாவம் நசித்திருக்கும்.
* பூர்வ பாவம் வலுத்து... அது, உலக வாழ்வை துறக்கும் படியாக இருக்கும்.
* சத்ரு பாவம் வலுத்திருக்கும்.
* களத்திர பாவம் வலுவில்லாமல் இருக்கும்.
* ஆயுள் பாவம் வலுத்திருக்கும்.
* தர்ம ஸ்தானம் வலுத்திருக்கும்.
* ஜீவன பாவம்... கர்மத்தை அனுசரிக்கும்படியாக அமைந்திருக்கும்.
* லாப பாவம் வலுத்திருக்கும்.
* சுக-சயன பாவம் நசித்திருக்கும்.

மேற்கண்ட சிறப்பு அமைவுகளில்... 'திரிகோணம் வலுத்திருப்பதைக் காணலாம்'. ஆனால் இந்த திரிகோண அமைவு எவ்வாறு... அந்த ஜீவனை உள் நோக்கிய பயணத்திற்கு அழைத்துச் செல்வதற்கு ஏதுவாக இருக்கிறது... என்பதையும் அறிந்து கொல்ளலாம்.

தொடர்ந்து... 'உலக வாழ்வுக்கு' இட்டுச் செல்லும் திரிகோண அமைவும்... அவை காட்டும் கிரக... பாவ அமைவுகளையும்... ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

.ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 50. 'திரிகோணமும் -_உள்வாழ்வும்'. ஸ்தானங்கள் வழியேயான ஜீவனின் வாழ்வு. பகுதி-6.





கடந்த தொடர்களில்... 'திரிகோண அமைவுகளின்' பலம் மற்றும் பலவீனங்களைப் பொருந்து... ஜீவர்கள் அனுபவிக்கும் 'கர்ம வினைகளின் விளைவுகள்' பற்றிய நிலைகளை ஆய்ந்தோம்.

இந்தத் 'திரிகோண அமைவு' உணர்த்தும் 'சில சூட்சுமங்களை' வரிசைப்படுத்துவோம்...

'லக்னம்-பூர்வம்-பாக்கியம்' என்ற இந்த 'முக்கூட்டு' அமைப்பு... உள் வாழ்வுக்கும்... உலக வாழ்வுக்கும்... உணர்த்தும் சூட்சுமத்தை உதாரணங்கள் மூலமாக பார்ப்போம்...

# 'உள் வாழ்வு' என்ற... மூலத்தை நோக்கித் திரும்பும் ஜீவனுக்கு... இந்த திரிகோணம் என்ற ஸ்தானங்கள் வலுக்கும் போது, 'ஆத்மாவுக்குறிய' குணங்களான 'சத்து - சித்து - பரமானந்தம்' என்ற குணங்களுடன் அந்த ஜீவனின் பிறப்பு அமையும்.

பிறவியின் போதே... அந்த 'உள் வாழ்வுக்கான' குடும்ப சூழலில் பிறப்பு ஏற்படும். அந்தப் பெற்றோர், இது போன்ற ஒரு குழந்தைப் பேறுக்காக  இறை வழிபாடும்... பிரார்த்தனைகளும் செய்தவர்களாக இருப்பர். அருள் வழியிலான வாழ்வும்... அதற்கேற்ப சூழல்களும்... இந்தக் குழந்தையின் பிறப்பின் போது இயல்பாகவே அமைந்து விடும். பிறந்ததற்குப் பின் எதிர் கொள்ளப் போகும் வாழ்வின் சூழல்களால்... தடம் மாறி விடாது... தனது இலக்கை நோக்கிப் பயணம் செய்வதற்கான புண்ணியங்களைப் பெற்றுக் கொண்டு பிறக்கும்.  இதைப் 'பூர்வம் என்ற 5 ஆம் கோண அமைவு' உணர்த்தும்.

இந்த சூழலில்... அதற்கேற்ப ஒரு தகுதியான ஜீவனாக இந்த ஜீவனின் பிறப்பு அமையும். பிறந்ததிலிருந்து 'உள் நோக்கித் திரும்பும் பாதையில்' அடியெடுத்து வைக்கும் குழந்தையாக இருக்கும். தெய்வீக நாட்டமும்... பக்தியும்... சிரத்தையும்... இயல்பாகவே அமையும். எதையும் ஆழ்ந்து உள்வாங்கும் தன்மையும்... அதைத் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும்... தக்க நேரத்தில் அதை வெளிப்படுத்தும் தன்மையும் இயல்பாகவே கூடி வரும். எந்த சூழலிலும் அதன் பாதையை மாற்றிக் கொள்ளாத... சலனமற்ற மனோ நிலையைப் பெற்றிருக்கும். உடலும்... உள்ளமும் வலிமையானதாக பிறப்பு அமையும். இதை 'லக்னம் என்ற 1 ஆம் கோணம்' உணர்த்தும்.

இலக்கை நோக்கிய பயணத்திற்கும்... அதற்கேற்ற தகுதியும் பெற்றிருக்கும் ஜீவனுக்கு... தனது வாழ்வின் கடமைகளை 'தர்மத்துடனும்... கர்மத்துடனும்' அணுகும் தன்மை இயல்பாகவே அமையும். உள் வாழ்வு பயணத்திற்கு எந்த வித தடையும் வாராத நிலைகள் அமையும். அதன் பயணம் பக்குவம் கூடியதாக ஜீவனை படிப்படியான நிலைகளில்... ஒவ்வொன்றையும் அனுபவித்து கடந்து போக வைக்கும்.

வெளி வாழ்வைப் போன்றல்லாமல்... உள் வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்றமும் களைந்து போகும் தன்மையுடன் இருக்காது. அது அடுத்தடுத்த நிலைகளுக்கு ஜீவனை இட்டுச் செல்லும் தன்மையுடன் அமையும். தனது வாழ்வின் நிலை எங்குள்ளதோ... அந்த நிலையின் கடமைகள் அனைத்தையும் 'பற்றற்று' முடித்து... தனது 'கர்ம வினைகளின் கட்டுகளை' அவிழ்த்து... உள் வாழ்வில் கலந்து போகும் பாக்கியம் தானாக அமையும். இதை 'பாக்கியம் என்ற 9 ஆம் கோணம் உணர்த்தும்.

இந்த 'உள் வாழ்வை' நோக்கித் திரும்பும் ஜாதகங்களில் 'சிறப்பு அமைவுகள்' அமைந்திருக்கும்... அதைத் தொடர்ந்து ஆய்வோம்... இறை அருளோடு...

ஸாய்ராம்.

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...