'மறைவு ஸ்தானங்கள்' என்றழைக்கப்படும் 3, 6, 8 மற்றும் 12 ஆம் பாவங்கள் வெளிப்படுத்தும்... 'கர்ம வினைகளின் விளைவுகளின்' ஆய்வுகளில், இதுவரை, 3 மற்றும் 6 ஆம் பாவங்களை ஆய்ந்தோம்.
தொடர்ந்து... '8 ஆம் பாவம்' வெளிப்படுத்தும்... கர்ம வினைகளின் விளைவுகளை ஆய்வோம்...
8 ஆம் பாவம் ( அஷ்டமம் மற்றும் ஆயுள் ஸ்தானம்)
இந்த பாவம் பொதுவாக 'ஆயுள் ஸ்தானம்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் 'அட்டமம்' என்ற சொல்லின் உச்சரிப்பு... ஜோதிட ஆர்வலர்களினிடையே, இந்த 8 ஆம் பாவம் மிகவும் 'கடினமான ஸ்தானம்' என்ற என்ற எண்ணத்தை வளர்த்திருக்கிறது. 6 ஆம் பாவத்தைப் போலவே இந்த ஸ்தானமும்... ஒரு ஜீவனின் 'கர்ம வினைகளின் விளைவுகளை' வெளிப்படுத்தும் ஸ்தானமாக அமைகிறது. இந்த ஸ்தானம் 'மறைபொருள் வெளிப்படும் ஸ்தானமாக' அமைகிறது. உள் வாழ்வின் சூட்சுமங்களான 'அருள் செல்வத்தையும்'... வெளி வாழ்வான உலகவாழ்வின் கல்வி, செல்வம், வளமான வாழ்வு என்ற 'பொருட் செல்வங்கள்' புதைந்துள்ள ஸ்தானமாகவும் அமைகிறது.
உதாரணம் 1
'விருச்சிக லக்னத்தில்' பிறந்திருக்கிற ஜாதகருக்கு... 'புத பகவான்'... மிதுன இராசியில், மிருகஷீரிட நட்சத்திரத்தின் 3 ஆம் பாதத்திலும்... 'சூரிய பகவான்'... மிதுன இராசியில், புனர்பூச நட்சத்திரத்தின் 1 ஆம் பாதத்திலும்... அமைவதாகக் கொள்வோம்.
# அஷ்டமாதிபதியாகிய 'புத பகவான்' 8 ஆம் பாவமான ஆயுள் ஸ்தானத்தில்... ஆட்சி பலம் பெறுகிறார். இவர் லக்னாதிபதியாகிய 'செவ்வாய் பகவானின்' நட்சத்திர சாரத்தில் பலம் பெற்று அமைகிறார். இவரது தனது 7 ஆம் பார்வையால்... தன-வாக்கு-குடும்ப ஸ்தானத்தை பார்வை செய்கிறார்.
# ஜீவன ஸ்தானாதிபதியாகிய 'சூரிய பகவான்' அஷ்டம பாவமான 8 ஆம் பாவத்தில்... 8 ஆம் பாவாதிபதியுடன் இணைகிறார். ஜீவன் ஸ்தானாதிபதியாகி மறைவு ஸ்தானத்தில் மறைகிறார். ஆனாலும்... 'தன-பஞ்சமாதிபதியாகிய'... 'குரு பகவானின்' நட்சத்திர சாரத்தால் இயக்கப்படுகிறார். அவர் தனது7 ஆம் பார்வையால்... தன-வாக்கு-குடும்ப ஸ்தானத்தை பார்வை செய்கிறார்.
இந்த அமைவுகளைப் பெற்ற ஜாதகர்...
* இந்த ஜாதகர் மிகவும் புத்தி சாதூர்யம் மிக்கவராகத் திகழ்வார். ( சூரிய - புத பகவான்களின் இணைவு... நிபுண யோகம் பெறுவதால்...)
* நீண்ட ஆயுளும்... தேக ஆரோக்கியமும் பெற்றிருப்பார். (புத பகவானின் ஆட்சி பலம்)
* இவரது 'சொற்கள்' பெரும் மதிப்பு மிக்கதாக இருக்கும். நிறைந்த உள் அர்த்தங்களும்... சூட்சுமங்களும்... புத்தி சாதூர்யம் நிறைந்ததாகவும் இருக்கும். ( புத-சூரிய பகவான்களின் பார்வையைப் பெறும் 2 ஆம் பாவம்...)
* அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளிலோ அல்லது பெரும் தனியார் தொழில் துறைகளிலோ... உயர் நிலை ஆலோசகராக இருக்கும் வாய்ப்பு கூடி வரும்.(சூரிய-புத பகவான்கள்... ஜீவன-லாப ஸ்தானாதிபதிகளாக அமைவதால்...)
* இவரின் நேர்மை இவரை தனித்துவமானவராகக் காட்டும்.
* அட்டமாதிபத்தியத்தை 'புத பகவான்' பெரும்பாலும் இழந்துவிடும் நிலைக்குத் தள்ளப் படுவார். (ஆத்மக்காரகரான 'சூரிய பகவானுடன்' இணைவதாலும், லக்னாதிபதியான செவ்வாய் பகவானின் நட்நத்திர சாரத்தைப் பெறுவதால்....)
உதாரணம் 2
'விருச்சிக லக்னத்தில்' பிறந்திருக்கிற ஜாதகருக்கு... 'புத பகவான்'... மிதுன இராசியில், மிருகஷீரிட நட்சத்திரத்தின் 3 ஆம் பாவத்திலும்... 'சூரிய பகவான்'... கடக இராசியில், பூச நட்சத்திரத்தின் 3 ஆம் பாவத்திலும்... அமைவதாகக் கொள்வோம்.
# 8 ஆம் பாவத்தில் பலத்துடன் அமைகிற 'புத பகவான்' லக்னாதிபதியின் சாரம் பெற்று வலுத்து... தனது 7 ஆம் பார்வையாக தன-குடும்ப-வாக்கு ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.
# பாக்கிய ஸ்தானத்தில் அமர்கிற ஜீவனாதிபதி... தர்ம ஸ்தானத்தில் அமர்கிற கர்ம ஸ்தானாதிபதியாக இருந்தாலும்... 'சனி பகவானின்' பூச நட்சத்திரத்தில் அமைந்து... அம்ஸத்தில் நீச நிலையில் பலமிழந்த நிலையில் சஞ்சரிக்கிறார். அவரது 7 ஆம் பார்வை... 3 ஆம் பாவமான தைர்ய ஸ்தானத்திற்கு அமைகிறது.
இந்த அமைவைப் பெற்ற ஜாதகர்...
* நிறைந்த ஆயுளைப் பெற்றவராக இந்த ஜாதகர் இருப்பார்.(புத பகவான்... ஆட்சி பலம் பெற்றிருப்பதால்...)
* இவரின் பிறப்பு கடும் பொருளாதர நெருக்கடிகளுக்குள் அமையும். (அட்டமாதியின் பலம்...)
* குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியினால்... இவரது கல்வி... பொருள் தேடும் அவசியமான... ஒரு தொழில் கல்வியை நோக்கி நகரும். (புத பகவானின் மறைவு... செவ்வாய் பகவானின் நட்சத்திர சாரம்...)
* அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள்... தனியார் துறைகள் என்பவற்றில்... தொழிளாராக பணியாற்றும் வாய்ப்பு அமையும். ( சூரிய பகவானின்... பாக்கிய ஸ்தான அமைவினால்...)
* உழைப்புக் கேற்ற ஊதியமும்... அதையொட்டிய வாழ்வும் அமையும். (புத பகவானின் 7 ஆம் பார்வையை பெறும் 2 ஆம் பாவம்...)
இதுவரை 8 ஆம் பாவம் வெளிப்படுத்தும்... பூர்வ கர்ம-வினைகளின் விளைவுகளின் வழியாக பயணித்தோம்.
தொடர்ந்து... 12 என்ற சுக-சயன பாவம் வெளிப்படுத்தும்... கர்ம வினைகளின் விளைவுகளை ஆய்வோம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment