கேந்திர ஸ்தானங்கள்... சர லக்னத்தாருக்கு ( மேஷம்-கடகம்-துலாம்-மகரம்) அளிக்கும் 'பூர்வ வினைகளின் விளைவுகளை...' உதாரணத்தோடு அணுகிப் பார்ப்போம்...
உதாரணம் - 1
'மேஷ லக்னத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு...
- லக்ன கேந்திராதிபதியாகிய... 'செவ்வாய் பகவான்' - மேஷ இராசியில்... 'கார்த்திகை நட்சத்திரத்தின் 1 ஆம் பாதத்திலும்'...
- 4 ஆம் ஸ்தான கேந்திராதிபதியாகிய... 'சந்திர பகவான்' - கடக இராசியில்... 'புனர்பூச நட்சத்திரத்தின் 4 ஆம் பாதத்திலும்'...
- 7 ஆம் ஸ்தான கேந்திராதிபதியாகிய... 'சுக்கிர பகவான்' - துலா இராசியில்... 'சுவாதி நட்சத்திரத்தின் 2 ஆம் பாதத்திலும்'...
- 10 ஆம் ஸ்தான கேந்திராதிபதியாகிய... 'சனி பகவான்' - மகர இராசியில்... 'திருவோண நட்சத்திரத்தின் 2 ஆம் பாதத்திலும்'... அமைவதாகக் கொள்வோம்.
# இந்த ஜாதகருக்கு லக்ன கேந்திராதிபதியாகிய செவ்வாய் பகவான்... லக்னத்திலேயே அமர்ந்து, வலுத்து... தனது 4 ஆம் பார்வையாக... 'சுக ஸ்தானத்தையும்', அதிலமர்ந்திருக்கிற 'சுகாதிபதியாகிய'... 'சந்திர பகவானையும்' பார்வை செய்கிறார். தனது 7 ஆம் பார்வையாக... 'களத்திர ஸ்தானத்தையும்', அதிலமர்ந்திருக்கிற... 'சுக்கிர பகவானையும்' பார்வை செய்கிறார். தனது 8 ஆம் பார்வையாக... 'ஆயுள் ஸ்தானமான' தனது வீட்டைப் பார்வை செய்கிறார்.
# சுக கேந்திராதிபதியாகிய சந்திர பகவான்... 'சுக ஸ்தானத்திலேயே' அமர்ந்து, வலுத்து... தனது 7 ஆம் பார்வையாக...'ஜீவன பாவமான'... கேந்திரத்தையும்... கேந்திர ஸ்தானாதிபதியாகிய... 'சனி பகவானையும்' பார்வை செய்கிறார்.
# தசம கேந்திரதிபதியாகிய சனி பகவான்... 'தசம கேந்திரமான ஜீவன-கர்ம ஸ்தானத்திலேயே' வலுத்து... தனது 3 ஆம் பார்வையாக... 'விரயம் என்ற சுக-சயன ஸ்தானத்தையும்'... 7 ஆம் பார்வையாக 'சுக ஸ்தானமான கேந்திரத்தையும்'... கேந்திராதிபதியான 'சந்திர பகவானையும்' பார்வை செய்கிறார். தனது 10 ஆம் பார்வையாக... களத்திர, கேந்திர ஸ்தானாதிபதியாகிய 'சுக்கிர பகவானையும்'... பார்வை செய்கிறார்.
இந்த அமைவில் உள்ள ஜாதகருக்கு...
லக்ன கேந்திராதிபதியாகிய 'செவ்வாய் பகவானின் அமைவினால்...
* தனக்கென பாதையை வகுத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றவராக இருப்பார்.
* தனது முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் தன்மையுள்ளவராக இருப்பார்.
* தான் நினைத்ததைச் சாதித்துக் கொள்ளும் வல்லமை பெற்றவராக இருப்பார் (சந்திர பகவானை பார்ப்பதால்..)
* தனது ஆளுமையை வெளிப்படுத்தி... தன் வட்டத்திற்குள் வரும் அனைவரையும் தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் வல்லமையைப் பெற்றிருப்பார் (சுக்கிர பகவானின் பார்வையைப் பெறுவதால்...)
* மிகவும் சுறு சுறுப்பானவராகவும்... கடின உழைப்பாளராகவும்... சிறந்த நிர்வாகத் திறமை மிக்கவராகவும்... கட்டுப்பாடுடன் கூடிய ஒழுக்க சீலராகாவும் திகழ்வார் ( சூரிய பகவானின் நட்சத்திர சாரம் பெற்றதால்...)
சுக கேந்திராதிபதியாகிய 'சந்திர பகவானின்' அமைவினால்...
* நிறந்த சுகத்தை அனுபவிப்பராக இருப்பார்.
* அதற்கேற்ப உடல் மற்றும் மன வலிமையைப் பெற்றிருப்பார் (செவ்வாய் பகவானின் பார்வையைப் பெறுவதால்...)
* கடமைகளைச் செய்யும் போது... அதன் பாதையில் எந்த சுகத்தையும் இழக்கத் தயாராக இருப்பார் ( சனி பகவானின் பார்வையைப் பெறுவதால்...)
களத்திர கேந்திராதிபதியாகிய 'சுக்கிர பகவானின்' அமைவினால்...
* மனதிற்கு இனியவர்கள் நட்பாகவும்... துணையாகவும் அமைவார்கள்.
* மனதிற்குள் இருக்கும் அன்பை... செயல்களினால்தான் வெளிப்படுத்துவார்கள். வார்த்தைகளால் வெளிப்படுத்தும் தன்மை இவர்களிடம் இருப்பது அரிது (செவ்வாய் பகவானின் பார்வையைப் பெறுவதால்...)
* நண்பர்களுக்கும்... துணைவருக்கும் எப்போதும் துணையாக இருப்பார்கள். அவர்களுக்கான கடமைகளிலிருந்து ஒரு போதும் விலகி விட மாட்டார்கள் (சனி பகவானின் பார்வையைப் பெறுவதால்...)
தசம கேந்திராதிபதியாகிய 'சனி பகவானின்' அமைவினால்...
* கடமைகளை தவற விட மாட்டார்கள்.
* கடமைகளிலிருந்து விலகவும் மாட்டார்கள்.
* நினைத்தை... நினைத்தபடியே முடிப்பதற்கு எவ்வளவு முயற்சியையும் மேற்கொள்ளத் தயாராக இருப்பர்.(சந்திர பகவானின் பார்வையைப் பெறுவதால்...)
* கடும் உழைப்புக்கேற்ற உடல் வன்மையைப் பெற்றிருப்பார் (செவ்வாய் பகவானைப் பார்ப்பதால்...)
*இவரின் அனைத்து செயல்பாடுகளும் மிக சேர்த்தியாக மட்டுமல்ல... மிக அழகியலுடன் கூடியதாகவும் இருக்கும் )சுக்கிர பகவானை பார்வை செய்வதால்)
இதுவரை... 'லக்னம்-சுகம்-களத்திரம்-ஜீவனம்' என்ற கேந்திராதிபதிகள்... 'சர லக்னத்தை' சார்ந்த ஜாதகருக்கு... பலம் பெற்று அமையும் போது... அவை வெளிப்படுத்தும் 'பூர்வ கர்ம வினைகளின் வெளிப்பாடுகள்...' எவ்வாறு அமைகிறாது என்பதைக் கண்டோம்.
இனிவரும் பகுதிகளில்... 'ஸ்திரம் மற்றும் உபய லக்னங்களில்' பிறக்கும் ஜாதகர்களின்... 'கேந்திர ஸ்தான அமைவுகள்' உணர்த்தும் கர்ம வினைப் பயன்களின் வெளிப்பாடுகளை... படிப்படியாக ஆய்வோம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment