திருவரங்கத்திற்கு... பூலோக வைகுண்டம் என்று பெயர். இங்கு எழுந்தருளும் திருவரங்கநாதனுக்கு... வைகுண்டநாதன் என்று பெயர்.
திருவரங்கம் முதலான அனைத்து வைணவ ஆலயங்களிலும், ஒவ்வொரு வருட மார்கழி மாதத்திலும் வரும் வளர்பிறையில் ஆரம்பித்து... முதல் பத்து நாட்களின் பகல் பொழுதும்... தொடரும் 10 நாட்களின் இரவுப் பொழுதும்... வைகுண்ட ஏகாதசி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதைப் 'பகல் பத்து' மற்றும் 'இராப் பத்து' என்று அழைப்பர்.
இந்த உற்சவத்தின் 'இரண்டு அம்சங்கள்' மிகவும் சூட்சுமம் வாய்ந்தவைகள்.
1. வைகுண்ட வாசல் திறப்பு.
2. ஆழ்வார் மோக்ஷம்.
வைகுண்ட வாசல் திறப்பு... பகல் பத்து கடந்து... 11 ஆவது நாளான 'ஏகாதசி திதி' அன்றும்... வைகுண்ட ஏகாதசி விழா பூர்த்தியாகிற இராப் பத்து கடந்த 11ஆம் நாளில்... ஆழ்வார் மோக்ஷமும் நடைபெறுகிறது.
வைகுண்டம்... என்ற சொல்லால் குறிக்கப்படுவது, இறைவனின் திருவடி என்ற மோக்ஷம். அதைத்தான்... முக்தி... சொர்க்கம்... கைவல்யம்... ஸமாதி... பேரின்பம்... என்ற பல பெயர்களால் அழைக்கிறோம். ஒரு ஜீவனின் வாழ்க்கைப் பயணத்தின் நோக்கம், அது 'இறைவனின் திருவடிக் கமலங்களில் கலப்பதுதான்'. அதற்கான வழிகாட்டுதல்களாகத்தான் இந்த உற்சவங்கள் யாவுமே இறைவனின் சங்கல்பத்துடன் நடந்தேருகின்றன.
'பகல் பத்து' என்பதன் சூட்சுமம்... 'உலக வாழ்வுப் பயணம்'. 'இராப் பத்து' என்பதன் சூட்சுமம்... 'உள்நோக்கிய வாழ்வின் பயணம்'. 'வைகுண்ட வாசல்' என்பதுதான்... உலக வாழ்விலிருந்து ஜீவன் உள் திரும்பும் வாழ்வின் மையம்.
நிரந்தர மற்ற உலக வாழ்வின் பயணத்தில் இருக்கும் ஜீவனின் வாழ்வை, 'பகல் பத்துக்கும்'... அதன் நிரந்தரமற்றத் தன்மையை உணர்ந்து, என்றும் நிரந்தரமமான இறைவனின் திருவடிகளை நோக்கி உள் திரும்பும் நிலையை, 'வைகுண்ட வாசல்' அல்லது 'சொர்க்க வாசல்' என்றும்... அந்த உள் வாழ்க்கைப் பயணத்தை நோக்கித் திரும்பும் ஜீவனின் வாழ்வை 'இராப் பத்துக்கும்' ஒப்பிடலாம்.
பகல் பத்து என்பது... ஒரு ஜீவனின் 'ஐந்து கர்மேந்திரியங்களும்'... 'ஐந்து ஞானேந்திரியங்களும்'. இந்த கண்களுக்குப் புலப்படா ஐந்து ஞானேந்திரியங்களின் வழியாக வெளியேரும் மனம், கண்ணுக்குத் தெரியும் ஐந்து கர்மேந்திரியங்களின் வழியாக உலக வாழ்வில் சங்கமிக்கிறது.
இந்த மனம் என்ற ஸ்தானத்திலிருந்துதான்... ஜீவனது 'கர்ம வினைகள்' எண்ணங்களாக வெளிப்படுகிறது. அந்த எண்ணங்களை வெளிப்படுத்தும் ஸ்தானங்களாகத்தான்... ஞானம், கர்மம் என்ற இந்திரியங்கள் செயல் படுகின்றன.
# இந்த கர்மேந்திரியங்கள் என்ற புலன்களிலிருந்து மனதை மீட்பதுதான்... பகல் பத்தின் நோக்கம். அதை பக்தி என்ற சாதனையின் மூலமும்,,, ஞானம் என்ற தியான ஒருங்கிணைப்பின் மூலமும் கடந்து போவதைத்தான் பகல் பத்து உணர்த்துகிறது.
# இவ்வாறு பக்தியினாலும்... ஞானத்தினாலும் ஒருமை பெற்ற மனம்... உள் திரும்பும் நிலையைத்தான்... வைகுண்ட வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு நமக்கு உணர்த்துகிறது.
# உள் திரும்பிய மனம், ஞானேந்திரியங்களின் வழியாக... அதன் மூலத்தை நோக்கித் திரும்புவதைத்தான்... இராப்பத்து உணர்த்துகிறது.
# இவ்வாறு உள் திரும்பிய மனம்... ஆத்மாவில் சங்கமிப்பதையே... 'ஆழ்வார் மோக்ஷம்' என்ற உற்சவம் உணர்த்துகிறது. இதைத்தான்... 'மோக்ஷம்' என்றும்... 'சொர்க்கம்' என்றும் வருணிக்கிறோம்.
இந்த மனித ஜீவ வாழ்வின் சூட்சுமத்தை உணர்த்தும் உற்சவமாகத்தான்... இந்த 'வைகுண்ட ஏகாதசித் திருநாள்' கொண்டாடப்படுகிறது... இறைவனின் கருணையினால்...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment