Saturday, January 29, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 213. 'வக்கிர கதியில் உலவும் கிரகம் எதை உணர்த்துகிறது...?'


கிரகங்கள் வக்கிர கதியில் உலவிக் கொண்டிருப்பதைத்தான்... ஜாதகத்தின் இராசிக் கட்டத்தில், அந்தக் கிரகத்திற்கு அருகில், (வக்) என்ற குறியீட்டின் மூலம் குறிப்பிட்டிருப் பட்டிருக்கும்.

பிரபஞ்சத்தில் 'சூரிய பகவானை' மையமாகக் கொண்டு, அதனதன் அச்சு வட்டத்தில் சீராக இயங்கிக் கொண்டிருக்கும் கிரகங்களின் ஆகர்ஷணங்களை, நட்சத்திரக் கூட்டங்களின் வழியே கண்டறிந்து, அவற்றைத் துல்லியமாக வகைப்படுத்தி, அவற்றை மூலமாகக் கொண்டு, ஒரு ஜீவனின் வாழ்க்கைப் பாதையைக் கணிக்கும் கலைதான் ஜோதிடக் கலை.

பூமியின் சுழற்சி மாற்றம், கிரகங்களின் சுழற்சிகளை சற்று பின்னோக்கிக் காணவேண்டியதாக அமைந்து விடும். அப்போது, அந்த குறிப்பிட்ட கிரகம் பின்னோக்கி நகர்ந்திருப்பதாகத் தோன்றும். அந்த நகர்தல் புவியில், அதன் ஆகர்ஷணத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த மாற்றத்திற்கும்... அந்த ஆகர்ஷணத்தை அனுபவிக்கும் ஜீவனின் 'கர்ம வினைகளுக்கும்'... நிச்சயமாக தொடர்பு உண்டு. உதாரணமாக ; 

- 'சிம்ம இராசியை' லக்னமாகக் கொண்ட ஒரு ஜாதகருக்கு, 'சூரிய பகவான்' 5 ஆம் பாவத்தில் (உத்திராடம் 1 ஆம் பாதம்) அமர்ந்திருக்கிறார். 'புத பகவான்', 6 ஆம் பாவத்தில் (உத்திராடம் 2 ஆம் பாதம்) அமர்ந்திருக்கிறார். இந்த அமைவு, ஜாதகருக்கு உயர் கல்வியில், பட்டப் படிப்பை பூர்த்தி செய்யும் வாய்ப்பில் தடையை ஏற்படுத்தும். 

- அந்தத் தடையினால், அவரின் 'கர்ம வினையின் புண்ணிய பலனான', அரசுத் துறையில் அமையவிருக்கும் ஒரு உயர்ந்த பதவியின் வாய்ப்பும் தடை படுவதாக அமைந்தால்... அந்தக் 'கர்ம வினையின்' புண்ணிய பலத்தினால், 'புத பகவானுக்கு' வக்கிர கதி ஏற்பட்டு, 'புத பகவான்' சற்று பின்னோக்கி நகர்ந்து, 'உத்திராடம் 1 ஆம் பாதத்தில்' நிலை கொள்வார். அப்போது, 'சூரிய பகவானும்' அதே இடத்தில் நிலை கொண்டிருப்பார். இந்த 'புத பகவானின்' வக்கிர கதியினால், 'சூரிய - புத பகவான்களின்' இணைவு', 5 ஆம் பாவத்தில் 'நிபுண யோகம்' ஏற்படுவதற்கு வழி வகுக்கும்.

- இந்த 'கர்ம வினையின் புண்ணிய பலன்' ஜாதகருக்கு உயர் கல்வியில் வெற்றியை மட்டுமல்ல... ஜாதகருக்கு பூர்வ புண்ணிய பலத்தினால், அரசுப் பணியும் அமைய வழி வகுத்து விடும்.

அது போல, 'கர்ம வினையின் பாப வினையின் விளைவு' ஜாதகருக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் இந்த 'வக்கிர கதி' அந்தக் குறிப்பிட்டக் காலத்தில் நிகழ்ந்து விடாது, ஜாதகர் தனது உயர் கல்வியை மட்டுமல்ல... அரசு வேலை வாய்ப்பையும்... இழக்கும் வாய்ப்பும் அமைந்து விடும்.

ஸாய்ராம்.


Tuesday, January 25, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 212. கிரகங்களும்... வண்ணங்களும்...'


 எண்ணங்களை, வண்ணங்களை மூலமாகக் கொண்டு வெளிப்படுத்தும் 'ஓவியக் கலையில்'...

- சிவப்பு வண்ணம் : விடியல்...புரட்சி... ஆளுமை... அதிகாரம்... நிர்வாகம்... ஒழுங்கு... நேர்மை...என்பனவற்றையும் ;

- வெண்மை வண்ணம் : அமைதி... ஒழுங்கு... சமாதானம்... தூய்மை... ஆனந்தம்... சுகம்... என்பவனவற்றையும் ;

- பச்சை வண்ணம் : பரந்து விரிதல்... பசுமை... மலர்ச்சி... அறிவு...புத்துணர்ச்சி... என்பனவற்றையும் ;

- நீல வண்ணம் : தூரம்... தொலைவு... எல்லையற்ற... உள்ளார்ந்த விருப்பங்கள்... என்பனவற்றையும் ;

- மஞ்சள் வண்ணம் : அமைதி... சாந்தம்... புனிதம்...ஆரம்பம்... என்பனவற்றையும் ;

- கருப்பு வண்ணம் : இருள்... துக்கம்... துயரம்... அறியாமை... என்பனவற்றையும்;

... வெளிப்படுத்துவதாக அமையும்.

இந்த வன்ணங்களின், எண்ணங்களுக்கு அடிப்படையாக இருப்பது, 'ஜோதிடக் கலைதான்'. ஜோதிடக் கலையில், கிரகங்களுக்குறிய வண்ணங்கள் என, ஒன்பது கிரகங்களுக்கும், தனித் தனியே, வண்ணங்கள் வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன.

சூரியன் - செவ்வாய் : சிவப்பு வண்ணம்.

சந்திரன் - சுக்கிரன் : வெண்மை வண்ணம்.

புதன் " பச்சை வண்ணம்.

குரு : மஞ்சள் வண்ணன்.

சனி : கருப்பு வண்ணம்.

ராகு : கரு நீல வண்ணம்.

கேது : மஞ்சள் மற்றும் கலவைகள் கலந்த வண்ணம்.

ஒரு ஜீவனின் வாழ்வில்... அந்த ஜீவனின் 'கர்ம வினைகளின் விளைவுகளுக்கு' ஏற்ப, இந்த வண்ணங்களும் வெளிப்பட்ட வண்ணமே இருக்கும். இதை அனுபவத்தில் கண்டு உணரலாம்.

ஸாய்ராம்.


Sunday, January 23, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 211. 'மகான்களின் ஜாதகத்தில் மறைந்திருக்கும் சூட்சுமங்கள்...'


 இது, ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் அவர்களின் ஜனன ஜாதகம்.

ஒரு சேத்திர சந்நியாசியாக,  அருணாசலேஸ்வரர் உறைந்திருக்கும், காந்த மலையாகிய அருணாச்சலத்தால் ஈர்க்கப்படு, அருணாச்சலேஸ்வரருடனேயே, ஒன்றிவிட்ட மகாபுருஷர்தான்... சேஷாத்திரி சுவாமிகள்.

மகன்னீயர்களின் ஜாதகங்களை, மிகவும் நுட்பமாக அணுகுவது அவசியம். உலக மாந்தர்களை ஒட்டிய அணுகுமுறைகளான, கல்வி... வேலை வாய்ப்பு... இல்வாழ்க்கை அமைவு...புத்திர பாக்கியம்... சுக வாழ்வுக்கான பாக்கியங்கள்... எனறு, இகவாழ்வை ஒட்டி அணுகுவது முறையாகாது.

'உற்பத்தியானவை அனைத்தும், அதனதன் மூலத்திலேயே அடங்கிவிடும்...' என்ற 'நியதியின்' வழியே, மாந்தர்களின் ஜாதகங்களின் மீது ஆய்வை மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு ஜீவனின் வாழ்வும், அந்தப் பயணத்தில், எவ்வாளவு தொலைவைக் கடந்து கொண்டிருக்கிறது... என்ற உண்மை புலப்பட ஆரம்பிக்கும்.

மகானின் ஜாதகத்தில் இந்த அணுகுமுறை, பல சூட்சுமங்களை வெளிப்படுத்துகிறது. 

1. 'குரு பகவானின்' ஆட்சி வீடான 'தனுர் இராசியை' லக்னமாகக் கொண்டு அவதரித்த மகானின் ஜாதகத்தில், அந்த 'குருபகவான்' பூர்வ புண்ணிய ஸ்தானத்திலேயே (இரண்டாவது திரிகோணம்) அமர்ந்து... லக்னத்தையும் (முதல் திரிகோணம்)... பாக்கிய ஸ்தானத்தையும் (மூன்றாவது திரிகோணம்)... தனது பார்வையால் ஆகர்ஷித்துக் கொண்டிருக்கிறார்.

2. நவாம்ஸத்தில், லகனத்திலேயே அமர்ந்து, இவரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து, ஆட்கொண்டிருக்கிறார்.

3. இராசியில், தன்னை, தனது நட்சத்திர சாரத்தால் (பரணி) வழி நடத்தும் 'சுக்கிர பகவானை', 'குரு பகவான்' தனது நட்சத்திரத்தால் (பூரட்டாதி) வழி நடத்துகிறார்.

4. இவரது ஜாதகத்தில், முற்பிறப்பைக் குறிக்கு 12 ஆம் பாவாதிபதியான 'செவ்வாய் பகவானுக்கும்'... தொடரப் போகும் பிறவியைக் குறிப்பிடும் பாவமான 2 ஆம் பாவாதிபதியான 'சனி பகவானுக்கும்' இடையே 'பரிவர்த்தனை' நிகழ்ந்திருக்கிறது. இந்தப் பரிவரத்தனையில் 'லக்னாதிபதியான' குரு பகவானைத் தவிர ஏனைய அனைத்து பாவாதிபதிகளும், சிக்குண்டு இருக்கிறார்கள்.

5. இந்தப் பரிவரத்தனையை விட்டு விலகி, முற்பிறப்புகளிலிருந்தும்... இனி வரும் பிறவிகளிலிருந்தும்... விடுபட்டு, உலக வாழ்வின் பந்தங்களிலிருந்தும், பற்றுக்களிலிருந்தும், விலகியிருக்கும், அமைவைத்தான் லக்னாதிபதியாக அமைந்திருக்கும் 'குரு பகவானின்' தனித்த...அற்புத அமைவு... சுட்டிக் காட்டுகிறது.

இவ்வாறாக, இந்தப் பிறவியிலேயே, தன்னை 'பிறவித் தளைகளிலிருந்து' விடுவித்துக் கொண்டு, அந்தப் 'பரம்பொருளுடன்' இணைந்து விடுவதைத்தான், இவரது ஜனன ஜாதகத்தில் அமைந்திருக்கிற 'குரு பகவானின்' தனித்த அமைவும்... 'சனி பகவான் - செவ்வாய் பகவான்களின்' பரிவர்த்தனையும்... லக்னாதிபதியைத் தவிர்த்து, ஏனைய பாவதிபதிகள் அனைத்தும், சூட்சுமமாக இந்தப் பரிவர்த்தனையில் சிக்கிக் கொண்டிருப்பதும்... நமக்குச் சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது.

ஸ்ரீ சத்குரு சேஷாத்திரி சுவாமிகளின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.

ஸாய்ராம்.





Sunday, January 16, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 210. 'காலத்திற்குள் கட்டுண்டு கிடக்கும் மானிட வாழ்வு'


 மனிதன் மட்டுமல்ல... இந்த பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளும், இரண்டு நிலைகளில் கட்டுண்டு இருக்கின்றன. ஒன்று, அவை அவைகளின் 'சூழ்நிலைகள்'... இரண்டாவது, அவைகள் வாழும் காலத்தின் 'சுற்றுப் புறம்'.

மனிதர்களின் சூழ்நிலையை, அவரவர்களின் ஜாதகங்கள் சுட்டிக் காட்டி விடுகின்றன. அதுபோல காலத்தின் சுழ்நிலையை, அது கடந்து போகும் சுற்றுப் புறம்தான் சுட்டிக் காட்டுகிறது.

ஒரு ஜாதகம், அந்த ஜீவன் சுமந்து கொண்டு வந்திருக்கும் 'கர்ம வினைகளை' சுட்டிக் காட்டுகிறது. அந்த கர்ம வினைகள் அளிக்கும் விளைவுகளைத்தான், அந்த ஜீவன் தனது வாழ்வில், இன்பமாகவோ... துன்பமாகவோ... அனுபவிக்கிறது. அதர்கு ஏற்றாற் போலவே, அந்த ஜீவனின் சுற்றுப் புறமும் அமைந்து விடும். அதுதான் இயல்பான நடைமுறை.

உதாரணமாக, ஒருவர், கட்டிடத் துறையில் கல்வியும்... அதனடிப்படையில் கட்டுமானத்துறையில் அனுபவுமும் பெறுமாறு... அவரது 'சூழ்நிலை' அமைகிறது என்று கொள்வோம். அதற்கேற்றாற் போலவே, அவரது 'சுற்றுப் புறமும்' அமைந்து விடும். அதாவது, அவர் தொழில் செய்யும் பகுதியில் விரிவாக்கங்களும், அதற்குண்டான தொழில் நுட்பத் தேவைகளும் அவசியமாக அமைந்து விடும். இதைத்தான்... 'நேரமும்... காலமும்....' கூடி வந்திருக்கும் அமைப்பு... என்றும், 'சூழ்நிலையும்... சுற்றுப் புறமும்...' இணைந்திருக்கும் அமைப்பும் என்று  கூறுகிறோம். 

ஆனால், வெகு சில நேரங்களில் காலம் தனது 'சுற்றுப் புறத்தை' இயல்பான நிலையிலிருந்து மாற்றிக் கொள்கிறது. தற்போதைய நிலையைப் (கிருமித் தொற்றுக் காலமாமான 2020 - 2021 - 2022 ) போல... இது போன்ற சூழலில்,ஒருவரின் 'சூழ்நிலை' எவ்வளவு சாதகமாக இருந்தாலும்... அதற்கேற்ற 'சுற்றுப் புறம்' அமையததால்... சாதகமான பலன்கள் ஏற்பட்டு விடுவதில்லை.

உதாரணமாக, அதே கட்டுமானத் துறையில் அனுபவமேற்பட்ட ஒருவருக்கு, தற்போது, அவரது 'சூழ்நிலை' சரியாக அமைந்திருந்தாலும், தற்போதைய நெருக்கடியான நேரத்தில்... கட்டுமானத் துறையில் ஏற்பட்டிருக்கும் தொய்வுகளால்... அவரின்  'சூழ்நிலைக்கு' அடிப்படையான கர்ம வினைகளின் 'புண்ணிய பலன்களை' அவரால் முழுமையாக அனுபவிக்க முடியாத நிலை உருவாகி விடுகிறது.

இது போன்ற நேரங்களில்தான் ... ஜோதிடர்கள் கணிக்கும், ஜாதகப் பலன்கள், மாறி விடுவதைப் போலவும்... தவறி விடுவதைப் போலவும்... அமைந்து விடுகின்றன. இதற்குக் காரணம், ஜாதகமோ... அதைக் கணித்த ஜோதிடரோ அல்ல... எதிர்பாராத கால மாறுபாடான 'சுற்றுப் புற' மாற்றம்தான்... என்பதை, ஜோதிடர்களும், ஜாதகர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஸாய்ராம்.



ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...