Saturday, January 29, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 213. 'வக்கிர கதியில் உலவும் கிரகம் எதை உணர்த்துகிறது...?'


கிரகங்கள் வக்கிர கதியில் உலவிக் கொண்டிருப்பதைத்தான்... ஜாதகத்தின் இராசிக் கட்டத்தில், அந்தக் கிரகத்திற்கு அருகில், (வக்) என்ற குறியீட்டின் மூலம் குறிப்பிட்டிருப் பட்டிருக்கும்.

பிரபஞ்சத்தில் 'சூரிய பகவானை' மையமாகக் கொண்டு, அதனதன் அச்சு வட்டத்தில் சீராக இயங்கிக் கொண்டிருக்கும் கிரகங்களின் ஆகர்ஷணங்களை, நட்சத்திரக் கூட்டங்களின் வழியே கண்டறிந்து, அவற்றைத் துல்லியமாக வகைப்படுத்தி, அவற்றை மூலமாகக் கொண்டு, ஒரு ஜீவனின் வாழ்க்கைப் பாதையைக் கணிக்கும் கலைதான் ஜோதிடக் கலை.

பூமியின் சுழற்சி மாற்றம், கிரகங்களின் சுழற்சிகளை சற்று பின்னோக்கிக் காணவேண்டியதாக அமைந்து விடும். அப்போது, அந்த குறிப்பிட்ட கிரகம் பின்னோக்கி நகர்ந்திருப்பதாகத் தோன்றும். அந்த நகர்தல் புவியில், அதன் ஆகர்ஷணத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த மாற்றத்திற்கும்... அந்த ஆகர்ஷணத்தை அனுபவிக்கும் ஜீவனின் 'கர்ம வினைகளுக்கும்'... நிச்சயமாக தொடர்பு உண்டு. உதாரணமாக ; 

- 'சிம்ம இராசியை' லக்னமாகக் கொண்ட ஒரு ஜாதகருக்கு, 'சூரிய பகவான்' 5 ஆம் பாவத்தில் (உத்திராடம் 1 ஆம் பாதம்) அமர்ந்திருக்கிறார். 'புத பகவான்', 6 ஆம் பாவத்தில் (உத்திராடம் 2 ஆம் பாதம்) அமர்ந்திருக்கிறார். இந்த அமைவு, ஜாதகருக்கு உயர் கல்வியில், பட்டப் படிப்பை பூர்த்தி செய்யும் வாய்ப்பில் தடையை ஏற்படுத்தும். 

- அந்தத் தடையினால், அவரின் 'கர்ம வினையின் புண்ணிய பலனான', அரசுத் துறையில் அமையவிருக்கும் ஒரு உயர்ந்த பதவியின் வாய்ப்பும் தடை படுவதாக அமைந்தால்... அந்தக் 'கர்ம வினையின்' புண்ணிய பலத்தினால், 'புத பகவானுக்கு' வக்கிர கதி ஏற்பட்டு, 'புத பகவான்' சற்று பின்னோக்கி நகர்ந்து, 'உத்திராடம் 1 ஆம் பாதத்தில்' நிலை கொள்வார். அப்போது, 'சூரிய பகவானும்' அதே இடத்தில் நிலை கொண்டிருப்பார். இந்த 'புத பகவானின்' வக்கிர கதியினால், 'சூரிய - புத பகவான்களின்' இணைவு', 5 ஆம் பாவத்தில் 'நிபுண யோகம்' ஏற்படுவதற்கு வழி வகுக்கும்.

- இந்த 'கர்ம வினையின் புண்ணிய பலன்' ஜாதகருக்கு உயர் கல்வியில் வெற்றியை மட்டுமல்ல... ஜாதகருக்கு பூர்வ புண்ணிய பலத்தினால், அரசுப் பணியும் அமைய வழி வகுத்து விடும்.

அது போல, 'கர்ம வினையின் பாப வினையின் விளைவு' ஜாதகருக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் இந்த 'வக்கிர கதி' அந்தக் குறிப்பிட்டக் காலத்தில் நிகழ்ந்து விடாது, ஜாதகர் தனது உயர் கல்வியை மட்டுமல்ல... அரசு வேலை வாய்ப்பையும்... இழக்கும் வாய்ப்பும் அமைந்து விடும்.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...