இது, ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் அவர்களின் ஜனன ஜாதகம்.
ஒரு சேத்திர சந்நியாசியாக, அருணாசலேஸ்வரர் உறைந்திருக்கும், காந்த மலையாகிய அருணாச்சலத்தால் ஈர்க்கப்படு, அருணாச்சலேஸ்வரருடனேயே, ஒன்றிவிட்ட மகாபுருஷர்தான்... சேஷாத்திரி சுவாமிகள்.
மகன்னீயர்களின் ஜாதகங்களை, மிகவும் நுட்பமாக அணுகுவது அவசியம். உலக மாந்தர்களை ஒட்டிய அணுகுமுறைகளான, கல்வி... வேலை வாய்ப்பு... இல்வாழ்க்கை அமைவு...புத்திர பாக்கியம்... சுக வாழ்வுக்கான பாக்கியங்கள்... எனறு, இகவாழ்வை ஒட்டி அணுகுவது முறையாகாது.
'உற்பத்தியானவை அனைத்தும், அதனதன் மூலத்திலேயே அடங்கிவிடும்...' என்ற 'நியதியின்' வழியே, மாந்தர்களின் ஜாதகங்களின் மீது ஆய்வை மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு ஜீவனின் வாழ்வும், அந்தப் பயணத்தில், எவ்வாளவு தொலைவைக் கடந்து கொண்டிருக்கிறது... என்ற உண்மை புலப்பட ஆரம்பிக்கும்.
மகானின் ஜாதகத்தில் இந்த அணுகுமுறை, பல சூட்சுமங்களை வெளிப்படுத்துகிறது.
1. 'குரு பகவானின்' ஆட்சி வீடான 'தனுர் இராசியை' லக்னமாகக் கொண்டு அவதரித்த மகானின் ஜாதகத்தில், அந்த 'குருபகவான்' பூர்வ புண்ணிய ஸ்தானத்திலேயே (இரண்டாவது திரிகோணம்) அமர்ந்து... லக்னத்தையும் (முதல் திரிகோணம்)... பாக்கிய ஸ்தானத்தையும் (மூன்றாவது திரிகோணம்)... தனது பார்வையால் ஆகர்ஷித்துக் கொண்டிருக்கிறார்.
2. நவாம்ஸத்தில், லகனத்திலேயே அமர்ந்து, இவரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து, ஆட்கொண்டிருக்கிறார்.
3. இராசியில், தன்னை, தனது நட்சத்திர சாரத்தால் (பரணி) வழி நடத்தும் 'சுக்கிர பகவானை', 'குரு பகவான்' தனது நட்சத்திரத்தால் (பூரட்டாதி) வழி நடத்துகிறார்.
4. இவரது ஜாதகத்தில், முற்பிறப்பைக் குறிக்கு 12 ஆம் பாவாதிபதியான 'செவ்வாய் பகவானுக்கும்'... தொடரப் போகும் பிறவியைக் குறிப்பிடும் பாவமான 2 ஆம் பாவாதிபதியான 'சனி பகவானுக்கும்' இடையே 'பரிவர்த்தனை' நிகழ்ந்திருக்கிறது. இந்தப் பரிவரத்தனையில் 'லக்னாதிபதியான' குரு பகவானைத் தவிர ஏனைய அனைத்து பாவாதிபதிகளும், சிக்குண்டு இருக்கிறார்கள்.
5. இந்தப் பரிவரத்தனையை விட்டு விலகி, முற்பிறப்புகளிலிருந்தும்... இனி வரும் பிறவிகளிலிருந்தும்... விடுபட்டு, உலக வாழ்வின் பந்தங்களிலிருந்தும், பற்றுக்களிலிருந்தும், விலகியிருக்கும், அமைவைத்தான் லக்னாதிபதியாக அமைந்திருக்கும் 'குரு பகவானின்' தனித்த...அற்புத அமைவு... சுட்டிக் காட்டுகிறது.
இவ்வாறாக, இந்தப் பிறவியிலேயே, தன்னை 'பிறவித் தளைகளிலிருந்து' விடுவித்துக் கொண்டு, அந்தப் 'பரம்பொருளுடன்' இணைந்து விடுவதைத்தான், இவரது ஜனன ஜாதகத்தில் அமைந்திருக்கிற 'குரு பகவானின்' தனித்த அமைவும்... 'சனி பகவான் - செவ்வாய் பகவான்களின்' பரிவர்த்தனையும்... லக்னாதிபதியைத் தவிர்த்து, ஏனைய பாவதிபதிகள் அனைத்தும், சூட்சுமமாக இந்தப் பரிவர்த்தனையில் சிக்கிக் கொண்டிருப்பதும்... நமக்குச் சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது.
ஸ்ரீ சத்குரு சேஷாத்திரி சுவாமிகளின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment