1. பூமியை, 27 நட்சத்திர மண்டலங்களில் வழியாக சுற்றி வருபவர்.
2. இந்த 27 நட்சத்திரங்களின் 108 பாதசாரங்களை, 30 நாட்களில் கடந்து செல்பவர்.
3. சராசரியாக 2 1/4 நாட்களில், 9 நட்சத்திர பாதசாரங்கள் கொண்ட ஒரு இராசியைக் கடப்பவர்.
4. சூரிய பகவானின் பார்வையை கடக்கும் போது, வளர் பிறைச் சந்திரனாக...
சுபராகவும், அவரின் பார்வையிலிருந்து மறையும் போது, தேய்பிறைச் சந்திரனாக... அசுபராகவும் கணிக்கப்படுபவர்.
5. ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்கும் போதும், அந்த நட்சத்திரத்தின் பாதசாரக் கிரகத்தின் 'நவாம்ஸ பலத்தைப் பொருத்து, பலன்களை வெளிப்படுத்துபவர்.
உதரணமாக 'ரிஷப இராசியைக்' கடக்கும் போது, கார்த்திகை நட்சத்திரத்தின் சாராதிபதியான 'சூரிய பகவானின்' நவாம்ஸ பலத்தையும்...ரோகிணி நட்சத்திரத்தைக் கடக்கும் போது, 'சந்திர பகவானின்' நவாம்ஸ நிலை பலத்தையும்... மிருகஷீரிட நட்சத்திரத்தைக் கடக்கும் போது, நவாம்ச ' செவ்வாய் பகவானின்' பலத்தையும் கொண்டு, ஜாதகரின் கர்ம பலன்களை வெளிப்படுத்துபவர்.
6. ஒரு நிலையில், நிலைத்து நிற்காமல், தொடர்ந்து சுழற்சியை மேற்கொள்வதால்தான் என்னவோ, அவரை, ஜீவனின் ஒரு நிலையில் நில்லாத 'மனதைக்' குறிக்கும் வண்ணமாக 'மனோகரகன்' என்று குறிப்பிடப்படுபவர்.
7. ஏனைய கிரகங்களின் கதிர் வீச்சுக்களை தன் மூலம் இந்தப் புவிக்குப் பரப்பும் ஒரு 'செயற்கைக் கோளாக' செயல்படுவதால், 'ஜீவனின் உடலுக்குக் காரகனாகவும் கொள்ளப்படுபவர். ஆதலால்தான், இவர் உலவும் நட்சத்திரத்தில் ஜீவன் பிறப்பெடுக்கும் போது, அந்த நட்சத்திரம் ஜாதகரின் 'ஜென்ம நட்சத்திரமாகவும்'... அந்த நட்சத்திர சாராதிபதியான கிரகத்தின் தசாக் காலம் ஜீவனின், 'தசாக் காலமாகவும்' கணக்கிடப்படுகிறது.
8. எவ்வாறு ஜாதகரின் பிறந்த நேரத்தை வைத்துக் கணக்கிடப்படும் 'லக்னத்தை'அடிப்படையாகக் கொண்டு, ஜாதகரின் 'பூர்வ கர்ம வினைகள்' ஆய்வுக்கு உட்படுத்தப் படுகிறதோ... அது போல 'சந்திர பகவான்'
அமரும் 'இராசியை' மூலமாகக் கொண்டு, அந்த ஜீவனின் உடல் சார்ந்த உலக வாழ்வு, ஜீவன் இவ்வுலகத்தில் அக்கர்ம வினைகளின் விளைவுகளை எவ்வாறுகடந்து போகிறது என்பது கணிக்கப்படுகிறது.
9. பூர்வ கர்ம வினைகள் வெளிப்படுத்தும் விளைவுகளை, 'யோகங்களாகவும்... தோஷங்களாகவும்...' வெளிப்படுத்தும் அமைப்புகளுக்கு துணையாக இருப்பவர்.
10. வளர் பிறை காலங்களில், சுபராகவும்... தேய் பிறை காலங்களில் அசுபராகவும்... தன்னை மாற்றிக் கொள்பவர்.
11.'செவ்வாய் - குரு பகவான்களுக்கு நடபானவராகவும், 'சூரிய - புத - சுக்கிர பகவான்களுக்கு' சமமானவராகவும், 'சனி - ராகு - கேது பகவான்களுடன் பகையாளராகவும், கணிக்கப்படுபவர்.
12. தனது வீட்டை /இராசிநாதராகக் கொள்ளும்' இவர், தனது இராசி விட்டுக்கு, 3,6,8 மற்றும் 12 அம் பாவங்களில் மறைவு பெறும் போது, எதிர்விளைவுகளை எற்படுத்துபவராக அமைகிறார்.
13. கிரகங்களின் காரகத்துவங்களில், இவர் 'மாதுர் கார்ககன்' ஆகிறார். பலன்களை கணிக்கும் போது, 'தாயாரை' குறிப்பவராகக் கொள்ளப்படுகிறார்.
14. 120 வருடங்களைக் கொண்ட 'விம்சோத்திரி தசாக் காலங்களில்', தனது தசாவாக 10 வருடங்களை ஆட்கொள்பவர்.
15. 'பராசக்தி தேவியை' தனக்கு அதிபதியாகக் கொள்பவர்.
16. 'செவ்வாய் பகவானோடு' இணைந்திருக்கும் போது, உலக வாழ்விற்கான ஆற்றலைக் கொடுக்கும் இவர், 'குரு பகவானோடு' இணையும் போது உள்வாழ்வான, ஞான வாழ்வுக்கு வித்திடுபவர்.
'எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி ! திருவருள் தருவாய்,
சந்திரா போற்றி ! சத்குரு போற்றி !
சங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி !'
ஸாய்ராம்.

No comments:
Post a Comment