தசா, புத்தி, அந்தரம்... என்பதில் எண்ணற்ற சூட்சுமங்கள் அடங்கியிருக்கின்றன.
ஒவ்வொரு ஜாதகத்திலும், தினசுத்தி - கிரக பாதசாரம் - இராசி - நவாம்ஸம் இவற்றை குறிப்பிட்ட பிறகு, 'கர்ப்ப செல் நீக்கி இருப்பு...' என்பதாக வருடம் - மாதம் - நாள் - நாழிகை - நொடி என்பதான குறிப்புக் காணப்படும். இந்தக் குறிப்பைத்தான் 'ஜனன கால தசா இருப்பு' என்பதாகக் கொள்கிறோம்.
ஜனனகால நட்சத்திரத்தையும், அந்த நட்சத்திரம் சார்ந்த கிரகத்தின் அடிப்படையையும், நட்சத்திரம் நின்ற பாதசாரங்களை அடிப்படையையும் கொண்டுமே, இந்த 'கர்ப்ப செல் நீக்கிய இருப்பு' என்ற கணக்கீடு கணிக்கிடப்படுகிறது.
எண்ணற்ற பிறவிகளைக் கடந்து வரும் ஜீவன், கடந்த பிறவியில் எந்த நட்சத்திரத்தின் பாதசாரங்களின் ஒன்றில், தனது ஜீவனை இழந்திருக்குமோ, அதே பாதசாரத்தில்தான், இந்தப் பிறவியை அடைவார்... என்பதுதான் 'பிறவி இரகசியாமகக் கொள்ளப்படுகிறது. அதனால்தான், ஜென்ம நட்சத்திரத்தையும், அதன் பாதசாரத்தையும், அந்த நட்சத்திர அதிபதியையும் அடிப்படையாகக் கொண்டு, இந்தப் பிறவிக்கான தசா (Direction of Life) தீர்மானிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நட்சத்திரங்களின் அதிபதிகளின் தசாக்கள் தொடர்கின்றன.
உதாரணமாக, அஸ்வினி நட்சத்திரத்தின் 4 ஆவது பாதத்தில் ஒரு ஜீவனது ஆயுள் முடிந்தால், மீண்டும் பிரிதொரு காலத்தில் அந்த ஜீவன், அதே அஸ்வினி 4 ஆவது பாதத்தில் பிறந்து, தனது வாழ்வின் பயணத்தைத் தொடர்வார். அதாவது ஏறத்தாள அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதியாகிய 'கேது பகவானின்' தசாவில், வருடம் 5 மாதம் 6 நாட்கள் 24 நாழிகை 25 நொடிகள் 17 ல், ஒருவர் தனது முந்தைய வாழ்க்கைப் பயணத்தை முதித்திருந்தால், தொடரும் இந்தப் பிறவியில், அதே அஸ்வினி நட்சத்திரத்தின் 4 ஆம் பாதத்தில் பிறந்து, எஞ்சிய கேது பகவானின் தசாக் காலமான, வருடம் 1 மாதம் 5 நாட்கள் 25 நாழிகை 34 நொடி 43 யிலிருந்து தனது வாழ்க்கைப் பயணத்தை, சுக்கிர பகவான் (20 வருடங்கள்) - சூரிய பகவான் (6 வருடங்கள்)- சந்திர பகவான் (10 வருடங்கள்) - செவ்வாய் பகவான் (7 வருடங்கள்)... என தொடர்ந்து ஏனைய கிரகங்களின் தசாக் காலங்களின் வழியே பயணிப்பார்.
இவ்வாறு தசா நடத்தும் நட்சத்திராதிபதியான கிரகம், ஏனைய கிரகங்களோடு எவ்வாறு சூட்சுமமாகத் தொடர்பு கொள்கிறது... என்பதை தொடர்ந்து ஆய்வோம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment