எப்போதும் இவரின் வார்த்தைகள் பொய்த்ததில்லை...
1955, வேங்கடராமன்... சென்னை, மயிலாப்பூர், பி.எஸ் உயர் நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனின் தந்தை திரு.வைத்தியநாதன் அவர்கள், அவனுக்கு உபநயனம் செய்விக்க எண்ணினார். அவரது இருக்கமான பொருளாதார சூழலினால், காஞ்சி மடத்தில் நிகழும் 'சமஷ்டி உபநயனத்தில்' கலந்த கொண்டு, 'மஹா பெரியவரின்' அருளாசியுடன், தனது மகனுக்கு உபநயனம் செய்விப்பதற்காக காஞ்சீபுரம் வந்தடைந்தார்.
உபநயனம் நடக்கும் நாட்களில், வெங்கரராமனின் பள்ளி இறுதியாண்டு பரீட்சைகளும் நடந்து கொண்டிருந்தன. ஆதலால், ஓரிரண்டு தேர்வுகளை அவனால் எழுத முடியாமல் போனது. மஹா பெரியவரின் அனுக்கிரகத்தோடு தனக்கு உபநயனம் நிகழ்ந்த சந்தோஷம் ஒருபுறமிருந்தாலும், பள்ளிக்குச் சென்று மீண்டும் அதே வகுப்பிலேயே அடுத்த ஆண்டும் தொடர வேண்டியிருக்குமே என்ற கவலை, மறுபுறம் அவனை வாட்டியெடுத்தது.
விடை பெறும் நேரம் வந்த போது, அவனின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்த பெரியவர், 'உனக்கு என்ன வேண்டும் ?' என்று கேட்டார். வேங்கடராமன், 'இந்த வருட இறுதித் தேர்வில் நான் தேர்ச்சி பெற வேண்டும்' என்றான். அவனை ஆசீர்வதித்த பெரியவர், 'கவலைப் படாதே, நீ தேர்ச்சி அடைந்து விடுவாய்' என்றார். வேங்கடராமனோ, 'அது எப்படி நான் தேர்ச்சி அடைய முடியும், நான்தான், சில பரீட்சைகளை எழுதவே இல்லையே !' என்றான். அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே, 'போ, நீ தேர்ச்சி பெற்று விடுவாய் !' என்று மீண்டும் ஆசீர்வதித்தார் பெரியவர்.
ஊருக்குத் திரும்பிய வேங்கடராமனுக்கு, தான் பரீட்சையில் தோவியடைந்த செய்தியும், தொடர்ந்து அதே வகுப்பில் படிக்க வேண்டிய நிர்பந்தமும் வந்து சேர்ந்தது. அவனது விடுமுறை நாட்கள் கவலைகளுடன் கடந்து போனது. பள்ளி மீண்டும் திறக்கும் நாளில், பள்ளிக்குச் சென்ற வேங்கடராமனுக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது ! அந்த விடுமுறை நாட்களில், பள்ளியின் ஸ்தாபர்களில் ஒருவரின் மறைவினால், அந்த வருடம் பள்ளி மாணவர்கள் அனைவரையுமே தேர்ச்சியடையச் செய்ய வேண்டும்... என்ற தலைமை ஆசிர்யரின் உத்தரவுதான் அது.
மஹா பெரியவரின், 'போ, நீ தேர்ச்சி பெற்று விடுவாய் !' என்ற, என்றும் மாறாத, சத்திய வார்த்தைகளின் சந்தோஷத்தை அனுபவித்தபடியே, வேங்கடராமன், அடுத்த வகுப்பிற்கு மகிழ்வுடன் சென்றான்.
Can His words ever go false !
ஜகத்குரு ஸ்ரீ மஹா பெரியவா - காஞ்சி பரமாச்சார்யா முக நூலில் இருந்து தொகுக்கப்பட்டது.
மொழி பெயர்ப்பு... அடியேன்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment