ஒவ்வொரு நொடியிலும் நான் துடிக்கின்றேன் - என்
வினையென்ன செய்திடுமோ தவிக்கின்றேன்.
வருமுன்னர் காப்பதற்கு வழியுமில்லை - வினை
வந்தபின் எதிர்கொள்ளத் துணிவுமில்லை.
விதைத்ததை அறுக்கின்றேன் விளைச்சலில்லை - முன்
விதைத்தது பதரானால் என்ன செய்வேன்.
தனிவழி செல்கின்றேன் துணையுமில்லை - அந்த
வழிசென்று சேருமிடம் தெரியவில்லை.
மடியின்றித் தவித்திட்ட மழலையின் குரல் கேட்டு
மடிநிறை பாலோடு பரிவுடன் பசுவைப் போல்
இடர்மிகு பயணத்தின் இடை வந்தாய் - என்
துயருக்குத் தொள் கொடுக்கும் துணையானாய்.
துயர் இனி எனக்கில்லை பயமெதற்கு - உன்
பத மலர் தொடர்கின்றேன் ஜெயமெனக்கு !
ஸாய்ராம்.
.jpg)
No comments:
Post a Comment