இந்த உடலுடனான வாழ்வுக்குக் காரணமான 'கர்மா'... இந்த உடலுக்கு உயிரோட்டத்தை அளிக்கும் 'ஜீவசக்தியான மனதிலிருந்து உதிக்கும் 'நான்' என்ற 'அஹங்காரமான வாசனையின் மூலமாக 'பந்தத்தையும்'... 'எனது' என்ற பற்றையும் உருவாக்கிக் கொண்டு... இந்த உலகில் மீண்டும், மீண்டும் பிறப்பெடுக்கக் காரணமாகிறது.
இந்தப் பிறப்புச் சுழற்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமெனில்... அந்த அஹங்காரத்தை வேரறுக்க வேண்டும். எப்படி ?
'எனது' என்ற பற்றிலிருந்தும்... 'நான்' என்ற பந்தத்திலிருந்தும்... விடுதலை பெற வேண்டும். அதற்கு இந்த 'அஹங்காரத்தை' அதன் மூலமான 'மனதிலும்'... மனதை அதன் மூலமான 'ஜீவனிலும்'... ஜீவனை அதன் மூலமான 'ஆத்ம சொரூபத்திலும்... நிலைத்து விடச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தப் பிறப்புக்கு மூலமான 'கர்மா', 'அந்த சுயஜ் ஜோதிப் பிரகாசத்தில்' முற்றிலுமாக எரிந்து போகும். இறப்பிலிருந்தும்... பிறப்பிலிருந்தும்... விடுதலை பெறும்,
இதை உணர்த்துவதற்காகத்தான் 'அஹங்காரம்' என்ற 'திரியை'... 'ஆத்மா' என்ற 'ஜோதிப் பிரகாசத்திற்கு' உட்படுத்துகிறோம். இந்த 'ஜோதிப் பிரகாசம்', முதலில் 'அஹங்காரம்' என்ற 'திரியில்தான்' ஏற்றப் படுகிறது. அது படிப்படியாக 'அஹங்காரத்தின்' மூலமான 'கர்மா' என்ற 'எண்ணையையே' எரித்து விடுகிறது.
இப்போது 'திரி' என்ற 'அஹங்காரமும்' இல்லை... 'கர்மா' என்ற பிறப்புக்கான 'காரணமும்' இல்லை. எஞ்சி இருப்பது 'உடல்' என்ற 'அகல்' மாத்திரமே. அது மண்ணோடு மண்ணாகக் கலந்து விடுகிறது. இனி 'இறப்பு' இல்லை... அதனால் மிண்டும்'பிறப்பும்' இல்லை.
இந்த சூட்சுமத்தை உணர்த்துவதற்காகத்தான்,,, தீபம் ஏற்றி வழிபாடு செய்யத் தூண்டினர்,,, பெரியோர் !
ஸாய்ராம்.

No comments:
Post a Comment