கேள்வி : நமது பிறப்பின் போதே, நாம் அணிந்து கொண்டு வந்திருக்கிற மாலை எது ? அந்த மாலை விளைவிக்கும் சோதனைகளையும்... துயரங்களையும்... நாம் எவ்வாறு எதிர்கொள்வது ?
பகவான் : தனது தாயின் கருவறையிலிருந்து வெளி வருகிற மனிதன், எந்த மாலையையும் அணிந்து கொண்டு வருவதில்லை. முத்துக்களாலான மாலையையோ... பள பளக்கிற தங்க நகைகளையோ... மரகதங்கள், வைரங்கள் பதித்த கழுத்தணியையோ... அணிந்து கொண்டு வரவில்லை. ஆனால், அவனது முன் பிறவிகளில் செய்த செயல்களால் விளைந்த விளைவுகளை ஒவ்வொன்றாகக் கோர்த்து, பிரம்மன்... ஒரு கணமான மாலையாகக் கழுத்தில் அணிவித்துவிடுகிறான். அதனால்தான், நமது முன் வினைகளின் விளைவுகள் நம்மை துரத்திக் கொன்டே வருகின்றன. பக்கோடாவை சாப்பிட்டிருந்தீர்களே ஆனால், அதற்குப் பின் வரும் ஏப்பத்தில் பக்கோடாவின் வாசனைதான் இருக்கும். அதுபோலத்தான், உங்களது கடந்த கால கர்மாவை ஒட்டியே தற்போதைய வாழ்வும் அமைந்து விடும். ஆதலால்தான் நமது செயல்கள் நன்மையை விளைவிப்பவையாகவே இருக்க வேண்டும். நன்மையை விளைவிக்கும் செயல்களைச் செய்வதற்கு, முதலில் இறைவன் மேல் அன்பைச் செலுத்த வேண்டும். இரண்டாவதாக பாபச் செய்லகளை செய்வதற்கு பயப்பட வேண்டும். இறுதியாக நாம் வாழுகின்ற சமூகத்தில் ஒழுக்க நெறியுடன் வாழ வேண்டும். இந்த மூன்றையும் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், புதிய கர்ம வினைகளை சேர்த்துக் கொள்ளாமல் இருக்க முடியும். கடவுளின் மீதான அன்பு - பாபச் செயல்களைத் தவிர்த்தல் - ஒழுக்கம், இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகள். இவைகளைக் கடைப் பிடிப்பதற்கு, இறைவனின் மீதான பக்தி... நமக்கு பேறுதவியைச் செய்கிறது.
பகவான் சத்ய சாய் பாபா.
(Divine Discourse, July 20. 2009. தமிழாக்கம்... அடியேன்)
ஸாய்ராம்.

No comments:
Post a Comment