இறைவன் நேர்மையானவர்... ஆக்கப் பூர்வமானவர்... அந்த மனப்பான்மையுடனேயே, நாமும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளையும், உற்சாகத்துடன், இன்று ஏதாவது ஒரு நன்மை நடக்கப் போகிறது... என்ற நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேன்டும். நம்மை பின்னுக்கு இழுக்கப் பார்க்கும் நமது 'வினைகளிடம்', நாம் சப்தமாக சொல்ல வேண்டியது, 'என்னை பின்னால் இழுக்க... உன்னை நான் விடமாட்டேன் !'.
எல்லாவற்றிற்குள்ளும்... ஒரு நன்மை இருக்கிறது. அதை நாம் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவுக்கு... எவ்வளவு ஆக்கப்பூர்வமான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறோமோ... அந்த நொடியிலிருந்தே... நாம், நமது வாழ்வின் ஆனந்தத்தை உணர ஆரம்பிக்கிறோம்.
நமது பலமான எண்ணம் இவ்வாறாக இருக்க வேண்டும் : 'நான், இனி எப்போதும், ஆக்கப்பூர்வமான... தோற்கடிக்கப்பட முடியாத... உற்சாகமுள்ள... ஆர்வமான மனப்பான்மையுடனேயே... இனிவரும் எல்லா சூழல்களையும் எதிர் கொள்ளப் போகிறேன்.
ஜாய்ஸ் மேயர்.
ஸாய்ராம்.
.jpg)
No comments:
Post a Comment