இராசிச் சக்கரத்தில் 5 ஆம் பாவம்... 'பூர்வ புண்ணியம்' என்ற ஜீவனின், இந்த வாழ்க்கைக்கான 'கர்ம வினைகளின் தொகுப்பை' உள்ளடக்கியிருக்கிறது. இந்த வினைகள்தான்... ஜீவனின் வாழ்வை, அதன் ஜனனம் முதல் மரண பரியந்தம் வழி நடத்துகிறது. இன்பங்களையும் - துன்பங்களையும்... மாறி மாறி அளிக்கும் இந்த வினைகளை, ஜீவன் அனுபவித்துத்தான் கடந்து போக வேண்டும்.
இந்த வினைகளைதான்... ஜீவனது வாழ்வில், அது எதிர்கொள்ளும் செய்லகளாகவும்... அது மேற்கொள்ளும் செயல்களாகவும்... கடலின் அலைகள் போல ஜீவன் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப செயலாற்றும் ஜீவனின் 'செயல்களைத்தான்' (கடமைகள்(... 10 ஆம் பாவமான 'ஜீவன ஸ்தானம்' வெளிப்படுத்துகிறது.
ஆகவேதான், பூர்வ புண்ணிய (5 ஆம் பாவம்) பாவத்திற்கு, 6 ஆம் பாவமாக, 'ஜீவன பாவம்' (10 ஆம் பாவம்) அமைந்திருக்கிறது. இதுதான், நமது பூர்வ புண்ணியமே... சத்ருவாகவும் - ரோகமாகவும் - எதிர்ப்புகளாகவும், நம்மை வந்து சேருகின்றன... என்பதற்கு ஆதாரமாகும்.
மேலும், தாமாக... தமது கடமைகளையும் கடந்து... வலிந்து செய்யும் செய்லகளினால் விளையும் விளைவுகளையும், ஜீவன் அனுபவித்தே தீர வேண்டும்... என்ற உண்மையைத்தான், 'ஜீவன் பாவத்திற்கு' (10 ஆம் பாவம்) 8 ஆம் பாவமாக அமையும் 'பூர்வ புண்ணிய பாவம் (5 ஆம் பாவம்) நமக்கு உணர்த்துகிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment