Thursday, June 30, 2022

Conversations With Sathya Sai Baba - Part 7. (தமிழாக்கம்... அடியேன்)


பக்தர் : எனது கால்களின் வீக்கத்துக்கு நான் என்ன செய்ய வேண்டும் ?

பகவான் : நமது உடலை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு நதியைப் போன்றது. அதில் மிதக்கும் படகைப் போன்றதுதான் நமது உடல். அதன் ஒரு கரை உலக வாழ்க்கையாகவும்... மறு கரை இறைவனின் உறைவிடமாகவும்... இருக்கிறது. மறு கரையில் இருக்கும் இறைவனை அடையும் வரை, படகை மிகக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

படகை எவ்வளவு காலமானாலும் நதியில் வைத்திருக்கலாம், அதனால் படகுக்கு ஏதும் ஆபத்தில்லைதான், ஆனால், படகுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால், அது ஆபத்தாகிவிடும். அது போல இந்த உலக வாழ்க்கையை நாம் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் வாழலாம், ஆனால், இந்த உலக வாழ்க்கை நமது உள் வாழ்க்கையை முழ்கடித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

இதற்குத் தாமரைதான் மிகச் சிறந்த உதாரணம், அது சேற்றில் ஊன்றி, நீரில் வளர்கிறது. சேறோ... நீரோ... இன்றி அதன் வாழ்வு இல்லைதான். ஆனால், அது அந்த இரண்டுடனும் கலந்து விடுவதில்லை. அது நீரில் மூகினாலும்... அதன் மீது ஒரு சொட்டு நீரும் தங்கி விடுவதில்லை. அதனால்தான், இறைவனைப் பற்றிய வருணனைகளில், தாமரை போன்ற கண்கள்... தாமரையை ஒத்தப் பாதங்கள்... என தாமரை ஒரு முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...