கேள்வி : நமக்குள்ளே எரிந்து கொண்டிருக்கும் ஆசை என்ற நோயை அழிக்க எது சிறந்த மருந்து...?
பகவான் :நீங்கள், 'மன நிறைவு' உடையவர்களாக வாழ வேண்டும்... பெறுவதானாலும், இழப்பதானாலும், இந்தத் மன நிறைவு என்ற நிலையில் இருந்து மாறாதிருப்பது முக்கியம். இந்த மன நிறைவு மகிழ்ச்சியை அளிப்பதோடு அதை, அதிகப் படுத்தியும் விடுகிறது. மன நிறைவைப் பெற்ற மனதுக்கு, வாழ்வு முழுவதும், கொண்ட்டாட்டங்கள் நிறைந்த விழாவாக அமைந்து விடுகிறது. ஆனால், ஆசைகளால் கவலையுற்று இருக்கும் மனமோ, ஓய்வில்லாமல், சதா காலமும், வீணே சுற்றித் திரிகிறது.
ஆசைகள் உங்களைத் துன்புறுத்தும் போது, எதிலுமே கவனம் செலுத்த முடியாத நிலை, உருவாகிறது. ஆசைகள், உங்களுக்குள் இருக்கும் நெருப்பைப் போல, அது உங்களை சாம்பலாக்கி விடும். மன நிறைவுதான், இந்த நெருப்பை அணைக்கக் கூடிய தக்க மருந்து.
ஒரு கடும் வெயில் நிறைந்த நாளில், அழைந்து, திரிந்து, களைத்த்துப் போன ஒருவருக்கு, ஒரு குளிர்ந்த நீரோடையின் குளியல் எவ்வாறு புத்துணர்ச்சியைத் தந்து விடுகிறதோ, அது போல, பேராசையால் உழன்று, களைத்துப் போன ஒருவருக்கு, இந்த மன நிறைவு என்ற குளியல் புத்துணர்ச்சியைத் தந்து விடுகிறது.
ஒருவருக்கு வாழ்வின் நிலையான உண்மை எது...? என்று தேடும் பாதையில்தான், ஆசை இருக்க வேண்டும். நிலையற்ற உலக வாழ்வின் மீது ஆசை இருக்கக் கூடாது. இறைவனிடம் அனைத்தையும் சமர்ப்பித்து விடுவதே மன நிறைவான வாழ்வாகும். இதிலிருந்து விளைவதுதான் நிரந்தரமான அமைதியும்... ஆனந்தமும். அப்போதுதான், இறைவனின் தரிசனமும் கிடைக்கிறது..
ஸாய்ராம்.
.jpg)
No comments:
Post a Comment