- தான் இருக்கும் வீட்டை தன்வசம் ஆக்கிக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆதலால், அவர்களுக்கு இடமளித்த 'கிரகத்தின்' பலம் மற்றும் பலவீனங்களை ஆய்ந்து கொள்ளுதல் வேண்டும்.
- அவை அமர்ந்திருக்கும் 'நட்சத்திர சாரத்தையும்', அந்த 'சாராதிபதியான கிரகத்தின்' பலம் மற்றும் பலவீனங்களையும், ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
- லக்ன 'திரிகோணாதிபதிகளின்' (லக்னம் (1)... பூர்வம் (5)... பாக்யம் (9)) தொடர்பு இருக்கிறதா...? என்பதையும், அவர்களின் பார்வைகளோ... சேர்க்கைகளோ... இருக்கிறதா...? என்பதையும், உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- அது போல, 'கேந்திர' (லக்னம் (1)... சுகம் (4)... களத்திரம் (7)... ஜீவனம் (10)), உப - ஜெய ஸ்தானங்கள் (2 மற்றும் 11 ஆம் பாவங்கள்), மற்றும் மறைவு ஸ்தானங்கள் (தைர்ய (3)... ருண, ரோக, சத்ரு (6)... ஆயுள் (08)... விரயம் (12)) ஆகியவற்றின் தொடர்புகளோ... சேர்க்கைகளோ... பார்வைகளோ... இருக்கின்றனவா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- இறுதியாக இவற்றின் 'தசா - புத்தி - அந்தரங்களை', (ராகு - கேது பகவான்களின்...) வாழ்க்கையின் எந்தப் படி நிலைகளில்... ஜாதகர் கடந்து செல்கிறார்...? என்ற விபரங்களையும் ஆய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஆய்வுகளுக்குப் பின் கணிக்கப்படும் கணிப்பு, பூரணமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment