Wednesday, June 1, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 225. 'இராசியின் அமைப்பு உணர்த்தும் சூட்சுமம்...' பாகம் - 4.


இறைவன் படைப்பின் அதிசயமே... அவன் ஒவ்வொரு படைப்பிலும் நிகழ்த்தும் தனி கவனம்தான். ஒன்றுக்கு ஒன்று மாறுபாடாக அமையுமாறே... அவனது படைப்புகள் அனைத்தும் இருக்கும்.

மனிதம் மட்டும் விதி விலக்கா... என்ன ? ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரண்டு குழந்தைகளின்  வாழ்க்கைப் பாதைகளைக் கவனித்தாலே, இந்த நுட்பமான மாற்றங்களைப் புரிந்து கொள்ளலாம்.

நாம் எதிர் கொள்ளும் ஒவ்வொரு மனிதரும், நமக்கு ஒத்த கருத்துடையவர்களாக இருப்பதில்லை. சூழல்களுக்கு ஏற்ப, மாறுபட்ட கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இருவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் கருத்தக்களோடு மட்டும் பயணிக்க ஆரம்பிக்கின்றோம்.

இதைத்தான், 'இராசிக் கட்டம்' வெளிப்படுத்துகிறது. இராசிக் கட்டத்தில், ஒவ்வொரு ராசிக்கும் (1 ஆம் பாவம்)  நேரெதிரில் இருக்கும் இராசி, (7 ஆம் பாவம்) ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளும் பாவமாக அமைகிறது. இதை, ஜோதிட ரீதியாக, 'களத்திரம் (கணவன் அல்லது மனைவி)... நட்பு... பங்குதாரர்கள்... என பல்வெறுபட்ட தொடர்புகளைக் குறிக்கும் பாவமாகக் கொள்கிறோம்.

இதன் அமைவை சற்று உற்று நோக்கினால்,

# 'மேஷ இராசிக்கு' (செவ்வாய் பகவான்), 7 ஆம் பாவமாக அமையும் 'துலா இராசி' (சுக்கிர பகவான்), நட்பாக இருப்பதில்லை.

# 'ரிஷப இராசிக்கு' (சுக்கிர பகவான்), 7 ஆம் பாவமாக அமையும் 'விருச்சிக இராசி' (செவ்வாய் பகவான்), நட்பாக இருப்பதில்லை.

# 'மிதுன இராசிக்கு' (புத பகவான்), 7 ஆம் பாவமாக அமையும் 'தனுசு இராசி' (குரு பகவான்), நட்பாக இருப்பதில்லை.

# 'கடக இராசிக்கு' (சந்திர பகவான்) 7 ஆம் பாவமாக அமையும் 'மகர இராசி' (சனி பகவான்), நட்பாக இருப்பதில்லை.

# 'சிம்ம இராசிக்கு' (சூரிய பகவான்), 7 ஆம் பாவமாக அமையும் 'கும்ப இராசி' (சனி பகவான்), நட்பாக இருப்பதில்லை.

இவ்வாறு ஒன்றுக்கொன்று... நட்பாக இல்லாத அமைவுகளுடன் கூடியவர்களுடன்தான், நாம் இணைந்து பயணிக்க வேண்டும்... என்பதைத்தான், இந்த இராசி அமைவுகள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.

இதன் மூலம், விட்டுக் கொடுத்தல்... ஏற்புடைய கருத்துகளில் ஒன்றிணைதல்... முரண்பட்ட கருத்துகளிலிருந்து விலகியிருத்தல்... என்பதைத்தான், 'பொருத்தங்கள்' என்ற முறையில் இணைத்து வைக்கிறது... ஜோதிடக் கலை.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...