Monday, June 6, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 226. 'ஜோதிடம் ஒரு மெய்ஞானக் கலை'


ஜோதிடக் கலையைப் பற்றி எனது குருநாதர், 'இது கடலைப் போன்றது... கடலின் கரையோரம், அப்பாவின் காலளவு நிற்கும் தண்ணீர்... மகன் நிற்கும் போது, கழுத்தளவு வந்துவிடும்...' என்பார்.

அவ்வளவு ஆழ்ந்த, செறிவு மிக்க கலையை, கற்றுக் கொள்வதும்... நுணுக்கங்களைப் புரிந்து கொள்வதும்... விவாதிப்பதும்... விவரிப்பதும்... கூட எளிதானதுதான்.

ஆனால், இந்தக் கலையை ஆதாரமாகக் கொண்டு, ஒருவரின் 'வாழ்க்கை இரகசியங்களை'... அவரின் 'கர்மா' வெளிப்படுத்தும் 'கர்ம வினைகளை'... அவற்றால் விளையும் இன்ப - துன்பங்களை... வெளிப்படுத்தும் போதுதான், தயக்கமும்... குழப்பமும்... சந்தேகங்களும்... வந்து கூடி விடுகின்றன. ஏனெனில், 'மறைந்திருந்து செயல்படும்' இந்தக் 'கர்ம வினைகளின்' செயல்பாடுகளை, 'அவன்' ஒருவனே அறிவானாதலால்.

ஆதலால்தான், 'அவனன்றி ஓரணுவும் அசையாது...' என்ற நியதியை உணர்ந்து, 'கோள்களை' அணுகும் போது, 'அவனருளாலே அவன் தாள் வணங்கி...' தன்னை 'ஒரு கருவியாக்கி', அந்த ஜீவனுக்கு ஒரு வழியைக் காட்டி அருள... அந்தப் 'பரம்பொருளின் திருவடிகளை' சரணடைகிறோம்.

'ஜோதிடக் கலையை', ஒரு முழுமையான 'விஞ்ஞானமாக' கற்றுக் கொள்ளலாம். அதன் மூலம், ஒரு ஜீவனின் 'வாழ்க்கை இரகசியங்களை' அறிந்து கொள்ள முற்படும் போது மட்டும், இந்தக் கலையை ஒரு 'மெய்ஞான' கலையாக கையாள்வது அவசியமாகிறது.

ஸாய்ராம்.


 

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...