Tuesday, March 8, 2022

சதாசிவ பிரமேந்திர சுவாமிகள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம்...


எட்டுத் திசைகளையும் ஆடையாகத் தரித்திருக்கிற 'கால பைரவரை' போன்றே, எப்போதும் 'திகபம்பரமான' நிலையிலேயே, பரப்பிரம்மம் உலவி வந்தார்.

அவர் ஒரு நாள், இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்து வரும் பகுதியின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள், சுவாமியை அறிந்திருக்கவில்லை. அந்தப் பகுதியில் இருக்கும் பெண்கள், இவ்வாறு திகம்பரமாக நடந்து செல்பவரைக் கண்டதும், அச்சத்தில் பயந்து அலற ஆரம்பித்தனர். பெண்களின் அலறல் சப்தம் கேட்டு, ஓடி வந்த ஒருவர், 'ஆடைகளின்றி' நடந்து கொண்டிருந்தவரின் மேல் ஆத்திரப்பட்டு, தனது கையிலிருந்த கத்தியைக் கொண்டு, அவரின் கையைத் துண்டித்து விட்டார்.. 

எப்போதும் தன் உள்ளுணர்வான ஆத்மாவிலேயே மூழ்கியிருக்கும் சுவாமிகள், தனது கைகள் வெட்டப்பட்ட உணர்ச்சியே இல்லாமல் நடந்து சென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்து, பயந்து போனது மட்டுமல்ல, ஆச்சரியத்திலும் மூழ்கிப் போன அந்த நபர், 'துண்ட்டாப்பட்ட கையை' எடுத்துக் கொண்டு, சுவாமிகளின் பின்னால் ஓடி, அவர் ஒரு 'அவுலியா' (தெய்வீகப் பெரியவர்) என்பத உணர்ந்து, கண்ணீர்மல்கி, சுவாமிகளின் திருவடியில் வீழ்ந்து வணங்கினார்.

இதை ஏதும் அறியாத மகான், அந்த நபர் கையிலிருந்த துண்ட்டாடப்பட்ட தனது கையை வாங்கி, தனது தோளில் ஒட்டிக் கொண்டு, முன்போலவே தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

ஸாய்ராம்.

               

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...