மற்றொருநாள் பழங்கந்தை அழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்துகொண்டு என்னெதிரே வந்தான்.
சற்று நகை புரிந்தவன்பால் கேட்கலானேன் ;
'தம்பிரானே ! இந்தத் தகைமை என்னே ?
முற்றுமிது பித்தருடைய செய்கையன்றோ ?
மூட்டை சுமந்திடுவ்து என்னே ? மொழிவாய்' என்றேன்.
புன்னகை பூத்த ஆரியனும் புகழுகின்றான் ;
'புறத்தே நான் சுமக்கின்றேன் ; அகத்துனுள்ளே,
இன்னதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ'
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்
மன்னவயன் சொற்பொருளினை யான்கண்டு கொண்டேன்.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment