' நல்ல நல்ல நதிகளுண்டு - அவை
நாடெங்கும் ஓடி விளையாடி வருங்காண்
மெல்ல மெல்ல போயவை தாம் - விழும்
விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்
எல்லையதிற் காணுவ தில்லை - அவை
எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்
ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை
ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண் '
( நாடெங்கிலும் ஓடிக் கொண்டிருக்கும் நதிகள் அனைத்தும், இறுதியில் கடலில் வந்து கலக்கின்றன. எல்லையில்லாமல் விரிந்திருக்கும் கடலில், நதிகள் வந்து கலக்கும் போது, அவைகளுக்கிடையே எந்த எல்லையும் இருப்பதில்லை. இரண்டும் இணையும் போது எழும் பேரோசை... ஓம் என்ற சக்தியின் ஒலியாக ஒலிக்கிறது.)
ஸாய்ராம்.
No comments:
Post a Comment