எனது பிரார்த்தனையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இறைவன் உங்கள் மீது அளவற்றை அனபைப் பொழிகிறார். உங்கள் வாழ்வில் என்ன நடந்திருந்தாலும்... மீட்கவே முடியாது என்ற ஆழமான குழியிலே நீங்கள் வீழ்ந்திருந்தாலும்... உங்களை நோக்கி கீழே இறங்கி வந்து, உங்களுக்குக் கை கொடுத்து, உங்களை தூக்கி மேலேற்றி, உங்கள் வாழ்வை முழுமையடையச் செய்கிறார்.
இறைவன் உங்களது மனதை, அவரது வார்த்தைகளால் புதுப்பிக்கிறார். உணர்ச்சிகளால் கொந்தளித்திருக்கும் மனதை அமைதிப்படுத்துகிறார். உடலளவில் நம்மை குணப்படுத்துவது மட்டுமல்ல... பொருளாதார அளவிலும் நம்மை உயர்த்தி விடுகிறார். தக்க நேரத்தில் உதவிடும் நட்புகளை அளிக்கிறார். தக்க சமூக சூழலை உருவாக்குகிறார்.
இறைவன் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறார். அந்த உதவியைப் பெற்றுக் கொள்வது சிரமமானது என்றாலும், இந்த உலகக் கட்டுகளிலிருந்து விடுபடுவதை விட சுலபமானதுதான். அதற்காக நாம் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது...அது, 'நம்பிக்கையுடன் இந்தப் பாதையில் பயணிக்கப் போகிறேன். என்னவானாலும் இந்த நம்பிக்கையை நான் கைவிடப் பொவதில்லை', என்பதுதான்..
- ஜாய்ஸ் மேயர்.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment