ஒரு தேர் புறப்பட்ட இடத்திலிருந்து, அதே இடத்திற்கு வந்து சேருவதைப் போன்றதுதான் ஜீவர்களின் வாழ்க்கையும்.
தேர், அதன் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர, மூன்று இடங்களில் அதன் பாதையைத் திருப்ப வேண்டியிருக்கிறது. திருப்பக் கூடிய அந்த இடங்களில் 'சன்னக் கட்டை' என்ற ஒரு மரத்துண்டை பயன்படுத்தி, தேரின் சக்கரங்களை திருப்ப வேண்டியிருக்கிறது. அதைக் கையாள்பர்கள், மிகக் கவனமாக இருப்பது அவசியம். கவனக் குறைவு ஏற்பட்டால், கையாள்பவர்கள் தங்கள் கைகளையே இழக்க வேண்டியிருக்கும்.
அதுபோல, 'கர்ம வினைகள்' என்ற சுமையைச் சுமந்திருக்கும் இந்த உடம்பு என்ற தேரை, அதன் மூலமான ஆத்ம சொரூபத்தில் கொண்டு சேர்ப்பதற்கான 'முட்டுக் கட்டைகளைத்தான்', இறைவன் 'தசா - புத்தி - அந்தரங்கங்களாக' கையாள்கிறான். அதுவும், நமது கர்ம வினைகள் என்ற சூட்சுமக் கட்டுகளின் வழியாக... மிகவும் கவனமாக... சன்னக் கட்டைகளைக் கையாள்பவரகளைப் போல.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment