'மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே !'
தூய ஒளி பெற்ற மனதைத்தான், செம்மையான மனம் என்று வருணிக்கிறார். அப்போது, மனதில் இருந்து எண்ணங்களாக வெளிப்படும் கர்ம வினைகள் அனைத்தும் முளையிலேயே கருகிப் போய் விடும்.
ஆனால், அந்த மனதை ஒளி பெற்ற மனமாக மாற்ற வேண்டுமெனில், மனதில் மந்திரத்தை உச்சரிப்பதும்... பிரணாயமம் என்று, வாயுவான பிராணனை அதன் உற்பத்தி ஸ்தானத்திற்கு உயர்த்தி அதில் நிலைக்க வைப்பதும்... இடகலை பிங்கலை என்று வாசியை அதன் மூலமான சுழுமுனையில் ஒன்ற வைப்பதும்... வழிகளாக இருக்கிறது.
இந்த வழிகளில் பயணித்து மனதை செம்மையாக்கி விட்டால்...மீண்டும் இந்த வழிகளுக்குள் பயணிக்க வேண்டியதில்லை ... மனதை அதன் மூலமான 'சுயப் பிரகாசத்தில்' சேர்த்து விடலாம்.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment