பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என, நினைப்பவர்களுக்கான ' Tips'...
1) அவரவர்கள் பிறந்த நட்சத்திரங்களின், நாம எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக... 'அஸ்வினி' - சு, சே, சோ, ல (ஆங்கிலத்தில்... S)
' பரணி' - லி, லு, லே, லோ (ஆங்கிலத்தில்... L)
2) அவரவர்கள் பிறந்த குலத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். பொதுவாக 'சைவம்' அல்லது 'வைணவம்' என்று பகுத்துக் கொள்ளலாம். இது, அவர்களின் 'குல தெய்வத்தை' அடிப்படையாகக் கொண்டது.
'சிவ குலத்தில்' பிறந்தவர்கள், விபூதி தரிப்பவர்களாகவும்... அவர்களது முன்னோர்களின் பெயர்கள், 'கனகசபாபதி... விநாயக மூர்த்தி...கார்த்திகேயன் போன்றவைகளாக இருக்கும். அதையொட்டி பெயர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
'வைணவ குலத்தில்' பிறந்தவர்கள் 'திருநாமம்' தரிப்பவர்களாகவும், அவர்களது முன்னோர்களின் பெயர்கள், ரெங்கநாதன்... கிருஷ்ணமூர்த்தி... இராம கிருஷ்ணன் போன்றவைகளாக இருக்கும். அதையொட்டி பெயர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
3) அவரவர்களின் ஜாதகத்தில், லக்னாதிபதிக்கு ஏற்ப, சாதகமான ஒரு கிரகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கிரகத்தைக் குறிக்கக் கூடிய 'எண் கணித அதிர்ஷ்ட எண்ணை' தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
4) நாம் தேர்ந்தெடுத பெயரை, இந்த 'அதிர்ஷ்ட எண்ணின் கூட்டுத் தொகை' வருமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.6( இந்தப் பெயரை முதலில் பயன் படுத்தி... அதைப் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்... அதில் 'பூரண நம்பிக்கை' ஏற்பட்டவுடன், முறையாக மாற்றிக் கொண்டு, அனைத்து ஆவணங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெண்களுக்கான பிரத்தியோக 'Tip' :
7) 'சிவ குலத்தில்' பிறந்த பெண், திருமணத்திற்குப் பிறகு, 'வைணவ குலத்திற்கும்... வைணவ குலத்தில் பிறந்த பெண் திருமணத்திற்குப் பின் சிவ குலத்திற்கும்... இட மாற்றம் பெறுவதாகத்தான், 'அனைத்து சாதீயக் கட்டமைப்புகளும் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன'.
இதை, அவரவர்களின் முன்னோர்களின் வாழ்க்கை அமைப்பைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். அதற்கேட்ப பெயரை தேர்ந்தெடுத்துக் கொள்வது அவசியம்.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment