- பண்டிட் ஸேதுராமன். (ஆசிரியர் - அதிர்ஷ்ட விஞ்ஞானம் - 1954)
இவருக்கு முன்னும்... பின்னும்... இந்த 'எண் கணித சாஸ்த்திரத்தை' எண்ணற்ற அறிஞர்கள் ஆய்ந்து, அறிந்து கையாண்டிருக்கிறார்கள். ஆனால் பண்டிட் அவர்களின் ஆய்வுக்கும், ஏனையோர்களின் ஆய்வுக்கும் உள்ள மிக முக்கியமான வித்தியாசம் ஒன்றுதான்.
அது, 'ஜோதிடக் கலையையும்'... 'கை ரேகை சாஸ்த்திரத்தையும்' நன்கு கற்றுத் தேர்ந்தவரான பண்டிட், இந்த எண் கணித சாஸ்த்திரத்தை, 'ஜோதிடக் கலையின்' வாயிலாக கையாண்டிருப்பதுதான்.
~ 1 முதல் 9 வரையிலான எண்களை 'கிரகங்களின்' ஆளுமைக்குக் கொண்டு வந்ததும்...
~ ஆங்கில எழுத்துக்களை, அவற்றின் 'உச்சரிப்பு அலைவரிசைகளுக்கு' ஏற்ப, 'எண்களின்' ஆளுமைக்குள் கொண்டு வந்ததும்...
~ பிறந்த தேதியின் எண்ணை... 'பிறவி எண்ணாகவும்'...
~ பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தையும் கூட்டி வரும் எண்ணை 'விதி எண்ணாகவும்'...
~ பெயரின் ஆங்கில எழுத்துக்களைக் கூட்டி வரும் எண்ணை... 'அதிர்ஷ்ட எண்ணாகவும்'...
~ அதிர்ஷ்ட எண்ணை தீர்மானிக்கும் போது, 'ஜோதிடக் கலையின்' வழியாக, பிறவி எண் அல்லது விதி எண்ணின் 'திரிகோணங்களைக்' குறிக்கும் கிரகங்களின் எண்களின் வழியாகக் கையாள்வதும், மிகவும் பிரத்தியோகமானது. இது ஒரு ஆராய்ச்சி நூல். இந்த நுட்பங்கள் அனைத்தையும், இவரின் புத்தகத்தை முழுமையாப் படிக்கும் போது புரிந்து கொள்ள முடியும்.
இந்த நூற்றாண்டின் 'ஜோதிட நிபுணர்களின்' வரிசையில், இவர் ஒரு முக்கிய மான இடத்தைப் பிடித்திருக்கிறார்... என்பதை பெருமையுடன் குறிப்பிடலாம்.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment