இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும், அவை அவைகளுக்கென தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து மறைகின்றன. அந்தத் தீர்மானங்களுக்கு ஆதாரமாக, அவற்றின் செயல்கள் அமைந்து விடுகின்றன. அந்தந்த செயல்கள் 'விளைவிக்கும் விளைவுகளுக்கு' ஏற்பவே, அவற்றின் 'தொடர் பிறப்புகளும்' நிகழ்கின்றன. இதைத்தான் 'கர்ம வினைகளின் சுழற்சி' என்று அழைக்கிறோம்.
இந்தக் கர்ம வினைகளுக்கு ஏற்பவே பிறவிகள் அமைகின்றன. இதைத்தான் ஒரு 'புதிர்' (தோஷம்) என்று அழைக்கிறோம். இந்தப் பிறவியை மேற்கொள்ளும் உயிரினம், அதன் 'கர்ம வினைகளின்' விளைவுகளை அனுபவிப்பதற்கு ஏற்ப..., ஏற்கனவே அமைந்திருக்கிற ஒரு சூழலின் மத்தியில்... ஒரு பிறவியை அடைகிறது.
அது, ஒரு Puzzle ஐப் போல... ஏற்கனவே முழுமையாக அமைந்து, அதன் ஒரு பகுதியை மட்டும் இழந்திருக்கிற, அந்தப் Puzzle ன், காலியிடத்தை நிரப்புவதற்காக, நமது கர்ம வினைகளுக்கு ஏற்ற, ஒரு குடும்ப சூழலில், இந்தப் பிறவி அமைந்து விடுகிறது.
இதில், மானிடப் பிறப்புக்கு மட்டும் ஒரு விசே வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. அது, 'இந்தப் பிறவியில் தாம் எதிர் கொள்ளும் அல்லது மேற்கொள்ளும் செயல்களுக்கான முடிவுகளை தாமே எடுக்கும் வாய்ப்பு'. இந்த அரிய வாய்ப்பு ஏனைய எந்த உயிரினத்திற்கும் வழங்கப்படவில்லை.
இந்த அரிய வாய்ப்பைத்தான் 'புனிதம்' (யோகம்) என்று அழைக்கிறோம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நாம் மேற்கொள்ளும் அல்லது எதிர் கொள்ளும் செய்ல்களை 'பற்றற்று அணுகி', அவை விளைவிக்கும் பலன்களில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு, நமது செயல்களை எதிர்கொண்டு, நமது கர்ம வினைகளைக் களைந்து, பிறவிகளின் தளைகளிலிருந்து விடுபடுவதற்கான யுக்திகளை அளிப்பதுதான், 'ஜோதிடக் கலை' என்ற 'வேதத்தின் அங்கம்'.
இந்தக் கலையளிக்கும் முன்னறிவுப்புகளை ஏற்றுக் கொண்டு, அதன் வழியே பயணிக்கும் போது, 'புதிராக' (தோஷம்) இருந்த நமது வாழ்வு 'புனிதமாக' (யோகம்) மாறி விடுகிறது. ஆம், 'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது'.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment