நாம் காணும் நுட்பங்கள் அனைத்திற்கும் பின்புலமாக, 'கேது பகவானின்' அமைவு இருப்பதை, ஜாதகத்தில் அமைந்திருக்கிற கிரகங்களின் அமைவுகள் வழியாக ஆய்ந்தறியலாம். உலக வாழ்வில் மட்டுமல்ல... உள் வாழ்வான ஆன்மீக வாழ்விலும்... இவரின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
உதாரணமாக, மருத்துவத் துறைக்கு அடித்தளமாகவே 'கேது பகவான்' அமைகிறார். அது சித்த மருத்துவமானாலும்... ஆயுர்வேதம், அலோபதி என்ற ஆங்கில மருத்துவமானாலும்... அதைக் கற்றுத் தேர்பவர்களின் ஜாதகத்தில் இவரின் பங்கு முக்கியத்துவம் பெறுவதைக் காணமுடியும்.
ஆரம்பக் கல்வியை வெளிப்படுத்தும் 2 ஆம் பாவம் அல்லது பாவாதிபதியுடனோ... உயர் கல்வியை வெளிப்படுத்தும் 4 ஆம் பாவம் அல்லது பாவாதிபதியுடனோ... ஜீவனத்தைக் குறிப்பிடும் 10 ஆம் பாவம் அல்லது பாவாதிபதியுடனோ... 'கேது பகவான்' ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்.
கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் 'புகைப் படக் கலைஞர்களின்' ஜாதகங்களில், லக்னத்துடனோ... லக்னாதிபதியுடனோ... 'கலைகளை' வெளிப்படுத்தும் 3 ஆம் பாவம் அல்லது பாவாதிபதியுடனோ... இவர் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்.
அது போலவே, உள் வாழ்வான ஆன்மீக வாழ்வின் உயர் நிலைப் பாதையைச் சுட்டிக் காட்டும் நிலையில் இவரின் அமைவு அமைந்திருக்கும். எந்தக் கிரகங்களின் இணைவுமின்றி, தனித்து, கால புருஷ இராசியின், சுக பாவமான 4 ஆம் பாவத்தில் (கடக இராசி) 'கேது பகவான்' அமரும் போது, உள் வாழ்வான ஞான வாழ்வின் உச்சத்தை அடைவதற்கான வழி பிறப்பதை, அனுபவத்தில் அறிந்து கொள்ளலாம்.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment