'கலத்தில்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்ததீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின் மாயை நீக்கியே மனத்துளே கரந்ததே.'
ஒரு கலம் நிறைந்த நீரினை, கொழுந்து விட்டு எரியும் அடுப்பின் மேல் வைக்கும் போது, நீர் கொதித்து, இறுதியில் ஒரு சொட்டு நீரும் கலத்தில் இல்லாது போகிறது. நீர் அதன் மூலமான பிரபஞ்ச சொரூபத்தில் கலந்து விடுகிறது.
அது போலவே, உடம்பு என்ற கலத்திற்குள் நிறைந்து இருக்கும் ஜீவனை, அதன் மூலமான, 'ஆத்ம சொரூபத்தில்' கலந்து விட வைப்பதற்கு, அந்த 'ஆயிரம் கோடி சூரியப்பிரகாசமுள்ள' பரம் பொருளை, எரிதணலாக மூட்டவேண்டியிருக்கிறது.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment