அறை வாங்கியவன் மணலில் அமர்ந்து, தனது கை விரல்களால், 'இன்று என் நண்பன் என்னை அறைந்து விட்டான்...!' என்று எழுதிவிட்டு, தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான். அவர்களது பயணம், ஒரு நீரூற்றுச் சோலையில் இளைப்பாறுவதற்காக நின்றது.
அந்த நீரூற்றில், தங்களது வெக்கையை குறைத்துக் கொள்வதற்காக நீந்த ஆரம்பித்தார்கள். அறை வாங்கிய நண்பனின் கால்கள், அந்த நீரூற்றின் புதை மணலில் சிக்கிக் கொண்டது. அதைப் பார்த்த நண்பன், பெரும் முயற்சி செய்து, தனது நண்பனை அந்த புதை மணலிலிருந்து காப்பாற்றிக் கரை சேர்த்தான்.
கரை சேர்ந்த நண்பன், அருகிலிருந்து பாறை ஒன்றில், கூரிய சிறு கல்லைக் கொண்டு, 'எனது நண்பன், புதை மணலில் மூழ்கவிருந்த என்னைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்' என்று எழுதினான்.
இவற்றைப் பார்த்த நண்பன், அன்று நான் உன்னை அறைந்த போது, அதை மணலில் எழுதினாய்... இன்று நான் உன்னைக் காப்பாற்றிய போது அதை கல்லில் எழுதினாய்... இவற்றிற்கெல்லாம் என்ன அர்த்தம் நண்பா ?' என்று கேட்டான்.
'எனது குருநாதர் சொன்னதைத்தான் நான் கடை பிடித்தேன். அவர், "யாராவது உன்னை காயப் படுத்தினால், அதை மணலில் எழுதி விடு. மன்னிப்பு என்ற காற்று அதை அழித்துவிடும். யாராவது உனக்கு நன்மை செய்தால், அதைக் கல்லில் எழுதி வை. அது காலத்திற்கும் நிலைத்து நிற்கும்" என்றார். அதைத்தான் நான் செய்தேன்', என்றான் நண்பன்.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment