Wednesday, September 1, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 194. 'செயல்களுக்கும், விளவுகளுக்கும் இடையே இருப்பது எது ?


இந்த 'உலக வாழ்வை' வாழும் ஒவ்வொரு ஜீவனும், நித்தியமான... இடைவிடாத... ஆனந்தத்தைத்தான் நோக்கித்தான்... பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அது போன்ற 'இடைவிடா ஆனந்தம்' எவருக்குமே கிடைப்பதில்லை.

இன்பமும்... துன்பமும்... மாறி மாறி வருவதான வாழ்க்கை அனுபவம்தான் அனைவருக்கும் கிடைக்கிறது. அதற்காக, மனிதன் என்றுமே தனது முயற்சிகளை கை விட்டுவிடுவதில்லை.

முயல்வது என்பது, வாழ்க்கையை கடந்து, அதன் இலக்கை அடைவதற்கான பயணம்தான்.என்றாலும், அந்த முயற்சிகளுக்கான பலன்கள், 'நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை' எனும் உண்மையைத்தான் மறந்து விடுகிறோம்.

உதாரணமாக, ஒரு 'வில் வீரனின்' கைகளில் வலிமையான 'வில்லும்', 'கூரிய அம்புகளும்' இருக்கலாம். அவனுக்கு எதிரில் அந்த அம்புகளுக்கான 'இலக்கும்' இருக்கலாம். அவன், மிகக் கவனமாக, தனது அம்பை, அதன் இலக்கின் மையத்தை நோக்கிக் குறி வைக்கலாம். 

ஆனால். அவன் கைகளிலிருந்து கிளம்பும் வரையில்தான், அந்த அம்புக்கான கட்டுப் பாடு அவன் வசம் இருக்கும். எப்போது, அந்த அம்பு அவனது விரல்களிலிருந்து விடுபடுகிறதோ, அப்போதே அது அவனது கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுபட்டு விடுகிறது. விடுபடும் அம்பு, இலக்கின் எந்தப் புள்ளியில் தைக்கப் போகிறது என்பதை இவனால் தீர்மானிக்க முடியாது. 

அம்பு, அதற்கான இலக்கைத் தானாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது ஒரு பார்வையாளனாக இருந்து, இவனால் பார்க்க மட்டுமே முடிகிறது.

இவ்வாறு, நமது முயற்சிகளுக்கும்... பலன்களுக்கும்... இடையே, நமது கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிடாத 'சூட்சும சக்தியைத்தான்'... 'கர்ம வினைகள்' என்று கூறுகிறோம்.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...