1. படைப்பவன் என்ற 'பரம சூத்திரதாரியிடமிருந்து' வெளிப்பட்ட அனைத்தும் மீண்டும், அந்த படைப்பிற்குள்ளேயே அடங்கிவிட வேண்டும் என்பதே... உலக வாழ்வின் இரகசியம். இந்த இரகசியத்தை வெளிப்படுத்தும் உன்னதக் கலைதான்... 'ஜோதிடக் கலை'.
2. வேதத்தில் குறிப்பிட்டுள்ள 84 லட்ச வகை உயிரினங்களில், ஏனைய உயிரிங்கள் அனைத்திற்கும், அவையவைகளின் 'கர்ம வினைகளுக்கு' ஏற்பவே, 'பிறவியும்... வாழ்வும்...' வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றை மாற்றியமைத்துக் கொள்ளக் கூடிய அல்லது விடுவித்துக் கொள்ளக் கூடிய வல்லமை, அவைகளுக்கு வழங்கப்படவில்லை.
3. மனிதப் பிறவியும், அதன்'கர்ம வினைகளின் விளைவுகளால்' அமைந்திருந்தாலும், அந்தக் 'கர்ம வினைக கட்டுகளிலிருந்து' தன்னை விடுவித்துக் கொள்ளக் கூடிய வல்லமை, இந்தப் பிறவிக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அதுதான், 'தேர்ந்தெடுக்கும் வல்லமை'.
4. மனிதர்களாகிய நாம், நமது 'கர்ம வினைகளின் விளைவுகளை' இரண்டு விதமாக அனுபவிக்கிறோம்.ஒன்று, 'நாம் மேற்கொள்ளும் செயல்களால்...' இரண்டு, 'நாம் எதிர்கொள்ளும் செயல்களால்...' இந்தக் 'கர்ம வினைகளின் சூட்சுமங்களை' வெளிப்படுத்தும் கலைதான்... 'ஜோதிடக் கலை'.
5. 'நாம் எதிர் கொள்ளும் சூழலுக்கு ஏற்ப', நாம் வெளிப்படுத்த வேண்டிய செயலையும்... 'நமது சூழலுக்கு ஏற்ப' நாம் மேற்கொள்ள வேண்டிய செயலையும்... 'செய்யக் கூடிய அல்லது செய்யாமலிருக்கக் கூடிய...' வாய்ப்பைத்தான் (Choice and Chance), நமக்கு அருளியிருக்கிறான்... படைப்பாளன்.
6. நமக்கு 'விதிக்கப்பட்ட செயல்களைச்' செய்வதும்... 'விதிக்கப்படாத செயல்களிலிருந்து' விலகியிருப்பதும்... என்ற நோக்கத்தோடு செயல்படும் போது, நம்மையறியாமலேயே, 'கர்ம வினைகளின் விளைவுகளிலிருந்து' நம்மை விடுவித்துக் கொள்கிறோம்.
7. இந்த சூட்சுமத்தைத்தான், ஜோதிடக் கலை வகுத்தளித்திருக்கிற 'ஜாதகச் சித்திரம்', அதில் அமைந்திருக்கிற 'கிரகங்களின் அமைவுகள்' மூலம் சுட்டிக் காட்டுகிறது.
8. பிறவியை 'லக்னம்' என்ற 1 ஆம் பாவமாகவும்... 'கர்ம வினைகளின் தொகுப்பை' 'பூர்வ புண்ணியம்' என்ற 5 ஆம் பாவமாகவும்... இந்த ஜென்மாவில் அனுபவிக்கக் கூடிய அனுபவங்களை 'பாக்கியம்' என்ற 9 அம் பாவமாகவும்... 'திரி கோணம்' என்ற அமைவைக் கொண்டு விவரிக்கிறது.
9. அது போலவே, 'லக்னம்' என்ற 1 ஆம் பாவத்தைக் குறிக்கிற ஜீவன், இந்த உலக வாழ்வில் அனுபவிக்க்க கூடிய 'சுக - துக்கங்களை' 4 ஆம் பாவத்தின் மூலமும்... அது ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய தொடர்புகளை 7 ஆம் பாவத்தின் மூலமும்... அது, மேற்கொள்கிற அல்லது தவிர்த்து விடுகிற 'கடமைகளை' 10 ஆம் பாவத்தின் மூலமும்...' கேந்திரம்' என்ற அமைவைக் கொண்டு விவரிக்கிறது.
10. ஜீவன் அனுபவிக்கக் கூடிய வினைகளுக்கு ஏற்ப அமையும் வாழ்வின் நிலையை 2 ஆம் பாவமும்... அதனால் விளையயும் லாப நஷ்டங்களை (இன்ப - துன்பங்களை) 11 ஆம் பாவமும்... 'பண பரம்' என்ற அமைவைக் கொண்டு விவரிக்கிறது.
11. தனது கர்ம வினைகளை அனுபவிக்கும் ஜீவன், அதன் வாழ்வை எதிர் கொள்ளக் கூடிய தைர்யத்தை, 3 ஆம் பாவத்தின் மூலமும்... அது எதிர் கொள்ளும் வினைகளை 'ருண - ரோக - சத்ரு' என்ற 6 ஆம் பாவத்தின் மூலமும்... அந்த ஜீவனுக்கான வாழ் நாட்களை 8 ஆம் பாவத்தின் மூலமும்... அதன் கர்ம வினைகளின் கழிவுகளை விரயம் என்ற 12 ஆம் பாவத்தின் மூலமும்... 'மறைவு' என்ற அமைவைக் கொண்டு விவரிக்கிறது.
12. மேற்கண்ட 'திரி கோணம் (1,5,9) - கேந்திரம் (1,4,7,10) - பண பரம் (2,11) - மறைவு (3,6,8,12)' என்ற அமைவுகளில் அமைகின்ற 'நவக் கிரகங்களின்' அமைவுகளைத்தான் 'ஆதிபத்தியங்கள்' என்று விவரிக்கிறது.
13. அந்தந்த 'ஆதிபத்தியங்களுக்கு' ஏற்ப, அமைகின்ற கிரகங்களின் அமைவுகளைக் கொண்டு (ஆட்சி, உச்சம், நீசம்,பகை நட்பு) ஜீவனின் வாழ்க்கைப் பாதையை (தசா - புத்தி - அந்தரங்கள்) அறிந்து கொண்டு, அதற்கேற்ப தனது வாழ்வை அமைத்துக் கொள்கிற யுக்தியைத்தான், இந்த 'ஜொதிடக் கலை' நமக்கு வகுத்தளித்திருக்கிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment