ஒருவரது ஜனன ஜாதகம், அவரின் 'வாழ்க்கை இரகசியங்களை' வெளிப்படுத்தும் 'காலக் கண்ணாடி' என்றால்... அது மிகையாக இருக்காது.
அந்த ஜாதகம், ஜாதகரின் வாழ்வை மட்டுமல்ல, ஜாதகரின் உறவுகளையும் சுட்டிக் காட்டும்.அந்த உறவுகளின் ஸ்தானங்களை மூலமாகக் கொண்டு, அந்த உறவுகளின் 'அடிப்படைத் தன்மைகளை' அறிந்து கொள்ளலாம்.
* 9 ஆம் பாவம், தந்தையைக் குறிக்கும். அந்த 9 ஆம் பாவத்தை லகனாமாகக் கொண்டு, தந்தையின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
* 4 ஆம் பாவம், தாயாரைக் குறிக்கும். அந்த 4 ஆம் பாவத்தை லக்னமாகக் கொண்டு, தாயாரின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
* 11 ஆம் பாவம், மூத்த சகோரத்தையும், 3 ஆம் பாவம் இளைய சகோதரத்தையும் குறிப்பதால், அவற்றை லக்னமாகக் கொண்டு சகோதரங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
* 7 ஆம் பாவம், வாழ்க்கைத் துணையையும், நட்பையும் குறிக்கிறது. அந்த 7 ஆம் பாவத்தை லக்னமாகக் கொண்டு, வாழ்க்கைத் துணையையும், நண்பர்களின் நிலையையும் அறிந்து கொள்ளலாம்.
* 5 ஆம் பாவம் புத்திரர்களைக் குறிக்கிறது. அந்த 5 ஆம் பாவத்தை லக்னமாகக் கொண்டு, குழந்தைகளின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
இவை அனைத்தும், ஒருவரது ஜாதக கிரக அமைவுகளையும்... தசா புத்தி அந்தரங்களையும்... மட்டுமே, அடிப்படையாகக் கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தப் படுவதால், 'பலன்கள் பொதுவானதாக மட்டுமே' இருக்கும். ஆனால், சில அடிப்படைத் தன்மைகளை துல்லியமாக சுட்டிக் காட்டும். உதாரணமாக, இந்த உறவுகளால் ஜாதகர் அனுபவிக்கக் கூடிய காரியானுகூலங்கள் மற்றும் துரனுகூலங்கள்.
அதே வேளையில், அந்தந்த உறவுகள் ஒவ்வொன்றுக்கும், தனித்தனியாக ஜாதகங்கள் இருக்குமாதலால், அவற்றின் கிரக அமைவுகளும், தசா புத்தி அந்தரங்களும் வெவ்வேறு அமைவுகளில் இருக்குமாதலால்... அவற்றின் துல்லியமான பலன்களுக்கு, அவரவர்களின் ஜாதகத்தைப் பர்த்துக் கணித்த பின்பு உறுதி செய்வது உத்தமமாக இருக்கும்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment