நமது பாரம்பரியத்தில் பெயர் பொருத்தம்,
~ குலம் சார்ந்தும்...
~ கோத்திரம் சார்ந்தும்...
~ ஜோதிடம் சார்ந்தும்... கணிக்கப்பட்டது.
# குலம் சார்ந்தும்... : அன்றைய காலத்தில், குலம் சார்ந்த பெயர்களின் வழியாகத்தான் திருமணங்களை நிச்சயம் செய்யப்பட்டது. தந்தையின் தந்தையான 'பாட்டாவின்' பெயரை, மகனுக்குச் சூட்டும் வழக்கம் இருந்தது. அது போல, தாயாரின் தாயாரான 'அம்மாயின்' பெயரை, மகளுக்குச் சூட்டும் வழக்கம் இருந்தது. இந்த குடும்ப அடையாளம் மிக சுலபமாக அந்தக் லத்திற்குள் திருமணத்தை உறவுக்குள் இணைப்பதற்கு ஏதுவாக இருந்தது.
# கோத்திரம் சார்ந்தும்... : ஒவ்வொரு குலத்திலும், இரு விதமான கோத்திரங்கள் இருக்கின்றன. ஒன்று 'சிவ கோத்திரம்', மற்றொன்று 'வைணவ கோத்திரம்'. சிவ கோத்திரத்தில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு 'சிவபெருமானார்' வழியான தெய்வங்களின் பெயரும்... பெண்ணுக்கு 'பெருமாள்' வழியான தெய்வங்களின் பெயரும்... சூட்டப்பட்டன.
அது போல, 'வைணவக் கோத்திரத்தில்' பிறக்கும் ஆண் குழந்தைக்கு 'பெருமாளின் பெயர்களில்' ஒன்றை வைப்பதும்... பெண்ணுக்கு 'சிவபெருமானாரின்' வழியான தெய்வங்களின் பெயரும்... சூட்டப்பட்டன.
வழி வழியாகத் தொடர்ந்த இந்த வழி முறைகளால், 'சிவபெருமானாரின்' பெயரைச் சூட்டப்பட்ட ஆணுக்கு, 'பெருமாளின்' கோத்திரத்தைச் சேர்ந்த, 'சிவபெருமானாரின்' தெய்வங்களின் பெயரைக் கொண்ட பெண் அமைந்தாள் (சுந்தரமுர்த்தி - வடிவாம்பாள்).
அதுபோல, 'பெருமாளின்' பெயர்களில் ஒன்றைத் தாங்கியிருக்கும் ஆணுக்கு, 'சிவ கோத்திரத்தைச்' சேர்ந்த, 'பெருமாளின்' வழியான தெய்வங்களின் பெயரைக் கொண்ட பெண் அமைந்தாள் (ரெங்கராஜன் - ரெங்கநாயகி).
# ஜோதிடம் சார்ந்தும்... : குலத்தின் அடிப்படை மாறாமல்... கோத்திரத்தின் அடிப்படை மாறாமல்... ஜோதிட ரீதியான பெயர்களை சூட்டும் வழக்கம் ஆரம்பித்தது. ஒரு குழந்தை பிறக்கும் நட்சத்திரத்தையும், அதன் பாதசாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு, அந்த நட்சத்திரத்திற்கு உரிய 'நான்கு' ஆரம்ப எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பெயர்கள் சூட்டப்பட்டன.
அப்போதிருந்துதான், ஜோதிட ரீதியான ஜாதக் பொருத்தமும்... நட்சத்திரப் பொருத்தமும்... பெயர் பொருத்தத்துடன் கை கோர்த்துக் கொண்டது.
இந்த மூன்று முறைகளிலும் அடங்கியிருந்த பாரம்பரியத்தை, நாம் இன்று கடந்ததால்தான், 'பெயர் பொருத்தமுறை' இன்று நடைமுறைக்கு ஒவ்வாததாக மாறிப் போனது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment