'கேந்திராதிபத்திய தோஷத்தைப்' பற்றி, எண்ணற்ற சந்தேகங்களும்... அனுமானங்களும்... நிலவி வருவதை மறுக்க முடியாது.
# ஒரு கேந்திரத்திற்கு அதிபதியாகிற கிரகம், இன்னொரு கேந்திரத்தில் அமரும் போது...
# ஒரு கேந்திரத்திற்கு அதிபதியாகிற கிரகம், அதே கேந்திரத்தில் அமரும் போது...
# சுபக்கிரகங்கள்தான் இந்த தோஷத்தால் பாதிக்கப்படுகின்றன...
# அசுபக் கிரகங்களுக்கு இந்த தோஷம் இல்லை...
...இவ்வாறான எண்ணற்ற விதிமுறைகள் 'ஜோதிட உலகில்' உலவி வருவதை நாம் அறிவோம். ஆனால், தனிப்பட்டவர்களின் வாழ்வில் இந்த அனுமானங்கள் பெரும்பாலும், நேரெதிர் விளைவுகளைத்தான் கொடுக்கின்றன.
உதாரணமாக,
1. 'ரிஷப லக்ன' ஜாதகர் ஒருவருக்கு, சுபக் கிரகமான லக்னாதிபதி 'சுக்கிர பகவான்' 4 ஆம் பாவத்தில் (கடக இராசி) கேந்திரத்தில் அமர்ந்தார். அவருடைய 20 வருட தசாக் காலம், ஜாதகரின் 31 ஆவது வயதில் ஆரம்பித்தது.
கேந்திராதிபதிய தோஷத்தின் விதிகளாகக் கருதப்படுபவைகளில்,
~ கேந்திரத்திற்கு அதிபதியான 'சுக்கிர பகவான்' (லக்ன கேந்திரம்), இன்னொரு கேந்திரத்தில் (4 ஆம் பாவ கேந்திரம்) அமருகிறார்.
~ சுபக்கிரகமான 'சுக்கிர பகவான்' கேந்திரத்தில் (4 ஆம் பாவ கேந்திரம்) அமருகிறார்.
மேற்கண்ட இரண்டு நிலைகளிலும் அமர்ந்த 'சுக்கிர பகவானின்' தசாக் காலத்தில்தான், ஜாதகர்...
* 8 வருடங்களுக்குப் பின், மூன்று பெண் குழந்தைகளுக்குத் தந்தையானார்.
* துணைவியார், சுயேட்சையாக பஞ்சாயத்துத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தலைவியானார்.
* அவரின் தோட்டத்திற்கு அருகிலிருந்த நிலத்தை விலைக்கு வாங்கி, விவசாயத்தை விரிவாக்கினார்.
* ஒரு மிஷனுக்காக தான் நடத்திக் கொண்டிருந்த உணவகம் அடுத்தடுத்த மிஷன்களுக்கு விரிவாக்கம் அடைந்தது. அதற்கு உதவியாக, மிஷனுக்குச் சொந்தமான ஒரு வாகனம் சொற்ப விலையில் அவரிடம் வந்து சேர்ந்தது.
அது போலவே,
2. 'கும்ப லக்ன' ஜாதகர் ஒருவருக்கு, 10 ஆம் பாவமான கேந்திரத்திற்கு அதிபதியாகிய 'செவ்வாய் பகவான்', அந்தக் கேந்திரத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்தார்.
கேந்திரதிபத்திய தோஷத்தின் விதிகளில் ஒன்றான,
~ அசுப கிரகங்களுக்கு இந்த தோஷம் இல்லை... என்பதான விதியின் படி,
'கேந்திரத்தில்' (1) ஆம் பாவ கேந்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்த 'அசுபக் கிரகமான 'செவ்வாய் பகவானுக்கு', கேந்திராதிபத்திய தோஷம் இல்லை... என்பதாகத்தானே, இருக்க வேண்டும், ஆனால் அந்த ஜாதகருக்கு, 23 வயது முதல் 42 வயது வரையிலான 19 வருடக் காலங்களில்...
* 19 வருடக் காலங்களாக நடந்து வந்த நிதி நிறுவனம், 5 வருடங்களாக நடந்து வந்த கட்டுமான உபரிப் பொருள்கள் விற்பனை, 7 வருடங்களாக நடந்து வந்த எண்ணை நிறுவனம்... என அனைத்திலிருந்தும் விடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
* அதற்குப் பின், அமைந்த இரண்டு வேலை வாய்ப்புகளும் மிக சொறப காலங்களிலேயே முடிவுக்கு வந்தன.
மேற்கண்ட இரண்டு உதாரணங்களே... கேந்திராதிபத்திய தோஷம் என்பதற்கான பல அனுமானங்களை, கேள்விக் குறிகளாக்கி விடுகின்றன.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment