எல்லாவற்றையும் மேலோட்டமாக அறிந்து கொள்ள முயல்வது... 'அறிவு'. எது, நமக்குத் தேவையோ அதை முழுவதுமாக அறிந்து கொள்ள முயல்வது... 'புத்திசாலித்தனம்'.
'அறிவுக்கும் - தொழிலுக்கும்' இடையில் சம்பந்தம் இருக்கிறது. அது போல 'புத்திசாலித்தனத்திற்கும் - நுணுக்கத்திற்கும்' இடையெயும் ஒரு சம்பந்தம் இருக்கிறது.
உதாரணமாக, தற்போதைய சூழலில், முன்னனியில் இருக்கும் ஒரு தொழிலை நோக்கிய கல்வியை தேர்ந்தெடுப்பது... 'அறிவான செயல்தான்'. ஆனால், எல்லோரும் அதே பாதையில் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்து, எதிர்கால சூழலையும், தனது விருப்பத்திற்கு ஏற்றபடியும், ஒரு கல்வியைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான்... 'புத்திசாலித்தனமான செயலாக' இருக்கும்.
ஜோதிடத்தில், 'அறிவு - தொழில்' என்ற 'பொதுவான இலக்கை' நிணயிப்பது, 'சூரிய புத பகவான்களின்' இணைவு. இந்த இணைவைத்தான், 'நிபுண யோகம்' என்று வருணிக்கிறது ஜோதிடக் கலை.
இந்த 'நிபுண யோகம்' என்ற யோகத்தை சுட்டிக் காட்டும் 'சூரிய - புத பகவான்களின் இணைவுடன்'... 'ஞானக்காரகரான குரு பகவான்', ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் போது... 'குரு பகவானின்' அருள் கருணை, 'புத்திசாலித்தனம் - நுணுக்கம்' என்ற, 'ஞானத்தை', 'அறிவுடனும் - தொழிலுடனும்' கலந்து விடுகிறது.
இதுதான் 'குருவருள்' செய்யும் அற்புதம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment