முன் பக்கத் தொடர்ச்சி...
(இவ்வாறாக ஏக கதியிலும்... பின்னப்பட்டும்... இயங்கும் சுவாசத்தை இரு விதமான பயிற்சிகளால் உணர்ந்து கொள்ளலாம். அதற்கான பயிற்சி முறைகள்தான்... )
2. பிரணாயாமம் என்ற உற்பத்தி ஸ்தானத்தை நோக்கிய 'ஏக கதி' பயணத்தை அறிந்து கொள்வதும், அதன் வழியே பயணிப்பதும்.
நாம் இதுவரை பயணித்த கடந்த இரு பகுதிகளின் வழியாக, 'ஏககதி' என்ற உள் வழியான சுவாசத்தைப் பற்றி அறிந்திருப்போம். இந்த 'ஏககதி' என்பது, ஆழ்ந்த உறக்கத்தின் போது, நமக்குள் நம்மை அறியாமலே நடந்து கொண்டிருக்கிறது. அதை விழிப்பின் போது முயல்வதே... 'பிராணாயமம்' என்ற சுவாசப் பயிற்சி.
இயல்பாகவே நமக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிற இந்த சுவாச கதியை... விழிப்பில் முயற்சிப்பதற்கு முன், நம்மை உடலளவிலும்... மன அளவிலும்... தயார் செய்து கொள்வது அவசியம்.
~ இந்த உள் கதி நமக்குள் நிகழ்கிறது, ஆனால், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது மட்டும் அப்போது, இதை அறிந்தவராக இருப்பது, நமது மனதின் சாட்சியான ';ஆத்மாதான்'.அந்த ஆத்மாவோடு' ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதுதான், முதல் படி. இது மனதை தயார் செய்கிறது.
~ இந்தத் தொடர்பு நிகழ்ந்து விடும் போது, நமது உடல் அதற்கேற்றவாறு தன்னைத் தானே தயார் செய்து கொள்கிறது.
~ இந்த இரண்டும் நிகழ்ந்து விடும் போது, நமக்கு ஒரு இயல்பான ஆசன முறை வந்து கூடுகிறது.
~ இந்த மூன்றும் நிகழும் போது, 'சீடன் தயாராக இருக்கும் வேளையில்... தக்க குருவின் தொடர்பு தானாக வந்து கை கூடும்...' என்பதற்கு இணங்க... இந்த உள் சுவாசம் என்ற 'பிரணாயாமத்தை' கற்றுக் கொடுக்க, தக்கதொரு குரு வந்து சேர்வார்.
இந்த 'பிரணாயாமம்' என்ற உள் சுவாசப் பயிற்சிக்கு தக்கதொரு குரு தேவை என்றாலும்... அதைப் பற்றிய சில வழி முறைகளை அறிந்து கொள்வது உபயோகமாக இருக்கும்.
* இந்தப் பயிற்சி உள் நோக்கியதாக இருப்பதால்... கண்களை திறந்து கொண்டு உறுப்புகளின் மீது கவனத்தை வைக்கும் 'வெளி சுவாசப் பயிற்சியைப்' போலல்லாமல்... கண்களை மூடியபடி, கவனத்தை மட்டும் மூச்சின் மீது வைப்பதாக இருக்கும்.
* எனவே, நாம் நமக்கு இயபாகாக அமையும் ஒரு ஆசன முறையைக் கைக் கொள்வது அவசியம்.
* நாம் முச்சின் மீது வைக்கும் கவனம்... மூச்சின் நீளத்தை முற்றிலுமாக ஆய்ந்து பார்க்கும் வல்லமையைக் கொடுக்கும்.
* இவ்வாறு, நமது கவனம் முழுவதுமாக மூச்சின் மீது இருக்கும் போது, நமது கவனம் படிப்படியாக மூச்சின் மூலமான, அதன் உற்பத்தி ஸ்தானத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும்.
* எப்போது, அந்த உற்பத்தி ஸ்தானம் நமதின் கவனத்திற்கு வருகிறதோ... அப்போதுதான், நாம் இந்த 'பிரணாயாமம்' என்ற சுவாசத்தின் இயல்பான சுவாசக் கதியில் இருப்பதை உணர்வோம்.
எவ்வாறாயினும், இந்தப் பயிற்சி நம்மை, அதன் மூலமான ஆத்ம சொரூபத்தை நோக்கிப் பயணிக்க வைப்பதால்... தக்கதொரு குருவின் மூலம், இந்தப் பயிற்சியை மேற்கொள்வதே உத்தமம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment