முன் பகுதித் தொடர்ச்சி ...
(இவ்வாறாக ஏக கதியிலும்... பின்னப்பட்டும்... இயங்கும் சுவாசத்தை இரு விதமான பயிற்சிகளால் உணர்ந்து கொள்ளலாம். அதற்கான பயிற்சி முறைகள்தான்,...)
1. 'சுவாசப் பயிற்சி' என்ற... பின்னப்பட்ட சுவாசத்தை அறிந்து கொள்வதும், அதை முறைப்படுத்துவதும்.
நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, நமக்குள்ளேயே 'ஏக கதியாக' சலித்துக் கொண்டிருக்கும் 'ஜீவ சக்தியான வாயு', நாம் கனவுலகத்தில் சஞ்சரிக்கும் போதோ... அல்லது விழித்திருந்து உலக வாழ்வில் சஞ்சரிக்கும் போதோ... பின்னப்பட்டு, நமது நாசியின் வழியாக 'இடகலையாகவோ' அல்லது 'பிங்கலையாகவோ'...வெளிப்படுகிறது.
இதைத்தான் நாம், சாதாரணமாக 'சுவாசம்' என்று சொல்கிறோம். இந்த சுவாசத்திற்கு. நுரையீரல்களும், சுவாசக் குழாய்களும், வாயும், நாசித் துவாரங்களும் உதவி செய்கின்றன. நுரையீரல்களிடம் இருந்து, சுவாசக் குழாய்கள் வழியாக நமது தொண்டையை அடையும் மூச்சுக் காற்று, வாய் வழியாகவும்... நாசித்துவாரங்கள் வழியாகவும்... வெளி உலகத் தொடர்பைப் பெறுகிறது.
இந்த சுவாசத்தை சீராக்கும் பயிற்சி முறையைத்தான், 'சுவாசப் பயிற்சி' என்று அழைக்கிறோம்.
~ மூச்சுக் காற்றை உள்ளும், வெளியும் இழுத்து விட்டு, நாசித் துவாரங்களை சுத்தப் படுத்துவது...
~ ஒவ்வொரு நாசித் துவாரத்தின் வழியாகவும் மூச்சுக் காற்றை உள்ளிழுத்து நுரையீர்களை நிரப்புவது...
~ பின் அதைச் சீராக வெளியில் விட்டு, இறுதியில் சிறிது நேரம் முச்சின்றி இருக்கப் பழகுவது...
இந்த சுவாசப் பயிற்சி முறையை, 'யோகாசன பயிற்சி முறைகளை' அறிந்த ஒரு பயிற்சியாளரிடமிருந்து கற்றுக் கொள்வதுதான் முறையாக இருக்கும்.
ஏனெனில், பயிற்சி செய்பவரின் வயது... உடல் பருமன்... அவரின் ரத்த அழுத்தம்... இவற்றை முறையாய் அறிந்து கொண்டு, அதற்கேற்ற பயிற்சியை ஒரு பயிற்சியாளரால்தான் அளிக்க முடியும்.
தொடர்ந்து, பிராணாயாமம் என்ற, ஏககதியைப் பற்றி ஆய்வோம்... இறைவனின் அருளைக் கொண்டு...
ஸாய்ராம்
.
No comments:
Post a Comment