Tuesday, April 6, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 171. 'இன்று (6.4.2021) பிரதான கோள்கள் இரண்டும் நடத்துகிற கோலாட்டம்'

இது, தேர்தலைப் பற்றியதோ... அதில் பங்கெடுத்திருக்கும் கட்சிகளைப் பற்றியதோ... அல்லது, யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது பற்றியதான ஆய்வோ அல்ல... 'இரண்டு பிரதான கிரகங்களான', 'சனி பகவான்' மற்றும் 'குரு பகவான்' ஆகியோரின் நிலைப்பாடுகளைப் பற்றியதான ஆய்வுதான்.

# தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த மார்ச் மாதம் 12 ஆம் தேதியிலிருந்து, பிரச்சாரம் பூர்த்தியான ஏப்ரல் 4 ஆம் தேதி வரையில்... 'கால புருஷ இராசியான'... 'மேஷ இராசிக்கு',

~ 'பாக்கியம்' மற்றும் 'தர்மம்' (9 ஆம் பாவம்) என்ற ஸ்தானத்திற்கு அதிபதியான 'குரு பகவான்' தனது பலத்தை இழந்து 'நீச நிலையில்' சஞ்சரித்தார்.

~ 'கர்மம்', 'ஜீவனம்' மற்றும் 'லாபம்' என்ற ஸ்தானங்களுக்கு அதிபதியான 'சனி பகவான்' தனது வீட்டிலேயே 'ஆட்சி பெற்று' பலமுடன் காணப்பட்டார்.

~ 'சனி பகவானின்' ஆட்சி பலத்தினால், தனது 'நீச நிலையிலிருந்து' விடுபட்டு, 'குரு பகவான்'... 'நீச பங்க ராஜ யோகம்' என்ற வலுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

~ இந்த இரண்டு பிரதான கிரகங்களின் சேர்க்கையினால்... 'தர்ம கர்மாதிபதி' என்ற உன்னத யோகம்... 'கர்மம் என்ற ஜீவன' பாவத்தில் ஏற்பட்டது.

~ அது மட்டுமல்ல... இந்த யோக பாவத்தினால், 'குரு பகவானின்' மற்றொரு வீடான 'சுக-சயன-விரய பாவமான' 12 ஆம் பாவத்தில் அமைந்திருந்த, 'நீசம் பெற்ற' புத பகவானும்... 'உச்சம் பெற்ற' சுக்கிர பகவானும்... பூர்வ புண்ணியங்களுக்கான சூரிய பகவானும்... தங்களது நிலைகளில் வலுத்து இருந்தார்கள்.

இந்த நிலைகளால்...

* கட்சிகளிடமும்... வாக்காளர்களிடமும்... நியாயத்தையும், தர்மத்தையும், முன்னிருத்தும் அவசியம் தென்பட ஆரம்பித்தது. 

* அனைத்து வேட்பாளர்களின் பிரசாரங்களிலும் கூட்டம் கூடி நின்றது.

* ஒவ்வொரு கட்சியின், வேட்பாளரின்... குறை நிறைகள் விரிவாக அலசப்பட்டன.

* காலத்தைக் குறிப்பிடும், இராசியாதிபதியான 'செவ்வாய் பகவானின்' ஆளுமை, அனைத்தையும் அமைதியாக கண்காணித்துக் கொண்டிருந்தது.

* வாக்காளர்களைக் குறிப்பிடும், சுகாதிபதியான (4 ஆம் பாவம்) 'சந்திர பகவான்' மட்டும்... தனது நிலையை வெளிப்படுத்தாமல்... மாறி, மாறி அனைத்து நிகழ்வுகளையும் கண்காணித்துக் கொண்டிருந்தது.

# தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த ஏபரல் 4, 2021 ஆம் தேதியிலிருந்து இன்றைய தேர்தல் நாளான ஏப்ரல் 6, 2021 ஆம் தேதியில்தான்... இந்த 'இரண்டு பிரதான' கிரகங்களுக்கு இடையேயான 'கோள்களின் கோலாட்டம்' நிகழ ஆரம்பித்தது.

~ தேர்தல் அறிவித்து பிரச்சாரம் ஆரம்பித்து, ஓயும் வரை நிகழ்ந்திருந்த' தர்ம கர்மாதி யோகம்', தேர்தலுக்கு முதல் நாளும் (ஏப்ரல் 5)... தேர்தல் நாளும் (ஏப்ரல் 6), தனது யோக நிலையிலிருந்து விடுபட்டுப் போனது.

~ 'கர்மம் மற்றும் ஜீவனத்திற்கு' அதிபதியான 'சனி பகவானிடமிருந்தும்'... தனது நீச நிலையிலிருந்தும்... விடுபட்ட தர்ம ஸ்தானாதிபதியான 'குரு பகவான்', லாபம் என்ற ஸ்தானத்திற்கு இடம் பெயர்ந்து விட்டார்.

~ வாக்காளர்கள் என்ற நிலையைச் சுட்டிக் காட்டும், 'சுகாதிபதியான' சந்திர பகவான், கிருஷ்ண பக்ஷம் என்ற தேய் பிறையாகி... இந்த 'இரண்டே கால் நாட்களிலும்', கர்மாதிபதியான 'சனி பகவானுடன்' இணைந்து விட்டார்.

~ நீச பங்கம் என்ற நிலையிலிருந்து விடுபட்ட 'குரு பகவானது' நிலையினால், 'புத்திக் காரகனான' புத பகவான் தனது 'நீச பங்கத்தை' இழந்து வலிமை இழக்கிறார்.'சுக போகக் காரகனான' சுக்கிர பகவான் தனது பலத்தை வலிமையாக்கிக் கொள்கிறார். பூர்வ புண்ணியக் காரகனான 'சூரிய பகவான்' தனது வலிமையை இழந்து நிற்கிறார்.

இந்த நிலைகளினால்...

* தர்மத்தையும், நியாயத்தையும் கடைப் பிடிக்க விரும்பிய கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்ளின் மனதில் கலக்கம் ஏற்பட ஆரம்பித்தது.

* எவ்வாறாயினும் வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்பிலிருக்கும் வேட்பாளர்களிடமிருந்து நியாயமும்... தர்மமும்... ஒளிந்து கொள்ள ஆரம்பித்தது.

* அவர்களின் தர்மத்திற்கு எதிரான பயணத்தில்... ஏப்ரல் 4 வரையில் ஸ்திரமாக இருந்த பெரும்பான்மையின வாக்காளர்கள், மன சஞ்சலத்திற்கு உள்ளாகி... தங்களது கடமை என்ற அஸ்திரத்தை சொற்ப தொகைகளுக்காக அடகு வைக்க நேர்ந்தது.

*' கொடுப்பவரிடமிருந்து' (ஒரு கட்சி வேட்பாளர்) பெற்றுக் கொள்வதே அதர்மம் என்றால்... அதைவிட ஒரு படி மேலே போய், 'கொடுப்பவர்களிடம்' (ஒன்றுக்கு மேற்பட்ட கட்சி வேட்பாளர்கள்) இருந்தும் பெற்றுக் கொள்வதின் 'அதர்மம்'... என்ற நியாயம் மறந்து போனது.

இந்த இரண்டு பிரதான கிரகங்களான 'குரு பகவான் மற்றும் சனி பகவான்' ஆகியோரின் முதல் இரண்டு வாரங்களுக்கான இணைந்த 'தர்ம கர்மாதிபதி யோகத்தையும்'... இறுதி இரண்டு நாட்களுக்க்கான பிரிந்த நிலைகளையும்... 'கோள்களின் கோலாட்டம்' என்பதைத் தவிர, வேறெவ்வாறு அழைக்க முடியும்...!

ஸாய்ராம்.

                                       

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...