'சனி பகவான்'... ஆயுள் காரகராக ஒவ்வொரு ஜீவனையும், தனது கட்டுக்குள் வைத்திருப்பதை அறிவோம்.
அது மட்டுமல்ல... ஜீவர்களின் 'ஜாதக அமைவிலும்', தன்னுடைய ஆளுமையை அவர் செலுத்தத் தவறுவதில்லை.
* 'மகர இராசியிலும்'... 'கும்ப இராசியிலும்'... தனது 'ஆட்சி' என்ற ஆளுமையை செலுத்தும் 'சனி பகவான்', 'துலா இராசியில்' தனது 'உச்ச' பலத்தை நிலை நிறுத்தி... 'மேஷ இராசியில்' தனது பலத்தை இழந்து 'நீச' நிலையில் சஞ்சரிக்கிறார்.
* கிரகங்களில், 'சுக்கிர பகவானுடனும்'... 'புத பகவானுடனும்' நிறைந்த நட்பு பாராட்டுபவராக இருக்கும் 'சனி பகவான்'... 'மகரம்', 'கும்பம்' என்ற 'ஆட்சி வீடுகளில்' மட்டுமல்ல... 'சுக்கிர பகவான்' ஆட்சி செய்யும் 'ரிஷபம்', 'துலாம்' வீடுகளிலும்... 'புத பகவான்' ஆட்சி செய்யும் 'மிதுனம்', 'கன்னி' வீடுகளிலும்... தனது ஸ்தான பலத்தை வலுப்படுத்திக் கொள்கிறார்.
* 'சந்திர பகவானுடனும்'... 'சூரிய பகவானுடனும்'... 'செவ்வாய் பகவானுடனும்'... 'எதிர் நிலைகள் என்ற 'பகை' பாராட்டும் கிரகமாக இருக்கும்... 'சனி பகவான்', 'குரு பகவானுடன்' சம நிலையில் 'நட்பு' பாராட்டுகிறார்.
ஆதலால், 'சந்திர பகவான்' ஆட்சி செய்யும் 'கடக இராசியிலும்'... 'சூரிய பகவான்' ஆட்சி செய்யும் 'சிம்ம இராசியிலும்'... 'செவ்வாய் பகவான்' ஆட்சி செய்யும் 'மேஷம்', 'விருச்சிகம்' இராசி வீடுகளிலும்... தனது 'எதிர் நிலைகள்' என்ற பகைமையைப் பாராட்டும் 'சனி பகவான்', 'குரு பகவான்' ஆட்சி செய்யும் 'தனுர்', 'மீன' இராசி வீடுகளில் 'சமம்' என்ற நட்பு நிலையை உறுதி செய்கிறார்.
* ஜீவனின் தசாக்களில் 19 வருடங்களையும்... அவரது பெயர்ச்சிகளில் 2 1/2 வருடங்களையும்... 'சூரிய பகவானின்' தசாவில், 11 மாதங்கள் 12 நாட்களையும்... 'சந்திர பகவானின்' தசாவில், 1 வருடம் 7 மாதங்களையும்... 'செவ்வாய் பகவானின்' தசாவில், 1 வருடம் 1 மாதம் 9 நாட்களையும்... 'ராகு பகவானின்' தசாவில், 2 வருடம் 10 மாதம் 6 நாட்களையும்... 'குரு பகவானின்' தசாவில்,2 வருடம் 6 மாதம் 12 நாட்களையும்.. 'புத பகவானின்' தசாவில், 2 வருடம் 8 மாதங்கள் 9 நாட்களையும்... 'கேது பகவானின்' தசாவில், 1 வருடம் 1 மாதம் 9 நாட்களையும்,... 'சுக்கிர பகவானின்' தசாவில், 3 வருடம் 2 மாதங்களையும்... 'சனி பகவான்' தனது, ஆளுமைக்குள் கொண்டு வந்து விடுகிறார்.
* கிழமைகளில் 'சனிக் கிழமையை' ஆளும் இவர்... நட்சத்திரங்களில், 'பூசம், அனுஷம் ,மற்றும் உத்திரட்டாதி' நட்சத்திரங்களை தன் வசமாக்கியிருக்கிறார். திதிகளில் 'அஷ்டமியை' ஆளும் இவர், திகதிகளில் 8, 17 மற்றும் 26 ஐயும்... தேதி, மாதம், வருடத்தை கூட்டி வரும் எண் 8 ஆக அமையும் போதும்... ஆங்கில எழுத்துக்களில் அமையும் பெயர்களின் 'எண் கணித முறை' எண்களின் கூட்டுத் தொகையில் 8 ஆம் எண்ணை ஆள்கிறார்.
... தொடர்ந்து, இந்த அமைவுகளின் பலங்களை வலுப்படுத்தவும்... பலவீனங்களில் இருந்து விடுபடவும்... தக்க உபாயங்களின் வழியே பயணிப்போம்... ஈஸ்வரனின் அனுக்கிரகத்தோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment