'பதஞ்சலி முனிவர்' அனுபவித்து அறிந்த 'யோக நிலையை', அனைவருக்குமான எளிய வழி முறையாக, எட்டு படி நிலைகளாக வகுத்த அளிக்கப்பட்டதுதான்... 'அட்டாங்க யோகம்' என்ற யோகப் பயிற்சி முறை.
சாதகர்களி வழி நடத்த, இந்த எட்டு படி நிலைகளும், 'தன் முனைப்புப் பயிற்சிகளாக'... பக்தி என்ற 'இயமமாகவும்', சுய ஒழுக்கம் என்ற 'நியமமாகவும்'... தனக்கு இயல்பாகும் 'ஆசனமாகவும்'... அமைகின்றன.
இந்தப் படி நிலைகளில் சாதகரின் முயற்சிகள் சிரத்தையாக அமையும் போது, 'இறைவனின்' அருள் கருணை, 'ஒரு சத்குருவின்' 'வழி காட்டுதல்' என்ற 'தீக்ஷைக்கு' வழி காட்டுகிறது. அந்த வழிகாட்டுதல், சாதகரை, ஜீவ சக்தியான வாயுவை சீராக்கும் 'பிரணாயாமமாகவும்'... வெளி உலக சிந்தனைகளிலிருந்து விடுவிக்கும் 'பிரத்யாகாரமாகவும்'... தொடர்ந்து, இடைவிடாமல் தொடர வைக்கும் 'தாரணையாகவும்'... 'தியானம்' என்ற இருப்பு நிலையாகவும்... இறுதியாக பூரணத்துவமான ஒன்று கலத்தல் என்ற 'சாமாதியாகவும்'... மலர்ந்து விடுகிறது.
'தாரணையாக' தொடர்ந்து செய்யப்படும் 'பிரணாயாமம்', ஜீவ சக்தியான மூச்சுக் காற்றை அதன் முலத்தில் கொண்டு சேர்க்கிறது. அசையாது அங்கிருக்கும், இருப்பு நிலைதான் 'தியானம்' என்ற யோக நிலையின் ஏழாவது படி நிலையாகிறது.
தொடர்ந்து, அந்த மூலத்தில் இருப்பதுதான் சாதகரால் செய்யப்படும் இறுதி முயற்சி. அதற்குப் பின் நடப்பது எதுவும் சாதகரின் கை வசம் இருப்பதில்லை அந்த பூரணத்துவமான 'சமாதி நிலை' என்பது, அந்த 'பரம் பொருளின்' கைகளில்தான் இருக்கிறது. அவரின் அருள் கருணை எப்போது, அந்தத் திரையை விலக்குகிறதோ... அந்தக் கணமே... ஒன்று கலத்தல் என்ற 'சமாதி நிலை'... அதுவாகவே நிறைவேறி விடுகிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment