பிரத்யாகாரம் - 'உலக விவகாரங்களிலிருந்து விடுபடல்'
உலக விவகாரங்களிலேயே மூழ்கி, அதன் 'இன்ப - துன்பம்' என்ற, இரட்டைச் சுழற்சிகளால் அல்லலுற்று... 'போதும், இந்த உலகத்துடனான பிணைப்பு...' என்று முடிவுக்கு வருகிறது... ஜீவன்.
அப்போதுதான் அதன் பயணம், என்றும் உள்ளிருந்து அருளும் 'நிலையான...நிம்மதியான... ஆனந்தத்தில்' திளைத்துக் கொண்டிருக்கும் 'ஆத்மாவுடன்', தன்னை பிணைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. அதுதான், 'யோகம்' என்ற சேர்க்கையாகிறது.
அந்தப் பாதையில் தானாக முன் வந்து முயற்சித்து, இறைவனின் மீது 'பக்தியை' (இயமம்) வளர்த்து... தன்னை ஓர் 'ஒழுங்குக்குள்' (நியமம்) கொண்டு வந்து... தனக்கு வசதியான ஓர் இருப்பு நிலையில் (ஆசனம்) அமர்த்திக் கொள்கிறது.
அந்த முயற்சியின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்கிற 'ஆத்மா', ஜீவனின் நன்மையைக் கருதி... ஜீவனின் 'ஆன்மீகத் தகுதிக்கு' ஏற்ப.. 'இறைவனிடமோ' அல்லது 'ஒரு சத்குருவிடமோ' கொண்டு சேர்க்கிறது. அந்த 'இறையருளோ' அல்லது 'சத்குருவின் கருணையோ', அந்த ஜீவனுக்கு 'வழிகாட்டுதல்' என்ற 'தீக்ஷையை' அளித்து,' பிரணாயாமம்' என்ற 'ஜீவ சக்தி வாயுவைக் கவனிக்கும் ஆற்றலை' அளிக்கிறது.
எப்போது, அந்த ஆற்றல் அனுபவமாகிறதோ... அப்போதிருந்துதான், ஜீவனின் 'மனம்' என்ற 'மாயா சக்தி', உலக வாழ்விற்கு இழுத்துச் செல்லும், எண்ணங்கள் என்ற தொடர் அலைகளின் பிடியிலிருந்து விடுபடுகிறது. இவ்வாறு எப்போது, தனது கவனத்தை முழுவதுமாக, 'ஜீவ சக்தியான' வாயுவின் சீரான ஓட்டத்தில் வைக்கிறதோ... அப்போதுதான் 'பிரத்யாகாரம்' என்ற 'உலக விவகாரங்களிலிருந்து விடுபடல்' என்ற, 'அட்டாங்க யோகத்தின்', ஐந்தாம் படி நிலை பூர்த்தியாகிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment