தீபம் சுடர் விடுவதற்கு, ஒரு அகல் விளக்கு... எண்ணை... திரி... மற்றும் தீபமேற்ற ஒரு தீக்குச்சி... என இத்தனை அம்சங்கள் தேவைப் படுகின்றன.
விளக்குகளில்தான், எத்தனை வித்தியாசங்கள்... ! மண்ணால் செய்யப்பட்ட விதவிதமான அகல்விளக்குகள்... உலோகங்களால் செய்யப்பட்ட எண்ணற்ற விதமான விளக்குகள் என்று, பல வேறு விதமான விளக்குகள் நம் உபயோகத்தில் இருக்கின்றன.
விளக்குகளில் பயன்படுத்தப்படும் தைலங்களில்தான் எத்தனை வித்தியாசங்கள்... ! நல்ல எண்ணை, விளக்கு எண்ணை, இழுப்ப எண்ணை மற்றும் நெய் என பலவேறு தைலங்கள் உபயோகத்தில் இருக்கின்றன.
தீபமேற்றப் பயன் படுத்தப்படும் திரிகளில்தான் எத்தனை வித்தியாசங்கள்... ! பஞ்சுத் திரி, நூல் திரி, தாவர நார்களாலான திரி என பல்வேறு திரிகள் உபயோகத்தில் இருக்கின்றன.
இவ்வாறு பல வேறு வகையான விளக்குகளும், அதில் நிறைந்திருக்கும் பல வேறு வகையான தைலங்களும், அதில் பயன் படுத்தப்படும் பல வேறு வகையான திரிகளும் ஒன்றுக்கொன்று வேறு பட்டிருந்தாலும்... அவையனைத்தும் ஒரே மாதிரியான தீபச் சுடரைத்தான் ஒளிர்விடுகின்றன.
தீபச் சுடர்களில் எந்த வித்தியாசமும் இல்லை. அதன் பிரகாசத்திலும் எந்த வித்தியாசமும் இல்லை. வித்தியாசங்கள் எல்லாம், விளக்குகளிலும், தைலங்களிலும், திரிகளிலும்தான் இருக்கின்றன.
அது போலவே, ஜீவர்கள் அனைத்தும், உடல்களால் மாறு பட்டிருந்தாலும்... அதனதன் கர்ம வினைகளால் வேறு பட்டிருந்தாலும்... அதனதன் பூர்வ வாசனைகளால் வேறு பட்டிருந்தாலும்... அவற்றிற்குள் மாறாமல் இருப்பது, அனைத்து ஜீவர்களுக்கும் பொதுவான ஆத்மாவே.
ஆம், விளக்குகளுக்குச் சுடர் போலத்தான்... ஜீவர்களுக்கு ஆத்மா... !
ஸாய்ராம்.

No comments:
Post a Comment