இந்த திரிகோணத்தை மூலமாகக் கொண்டுதான் 'ஜீவனின் பிறப்பின் இரகசியம்' என்ற திரை விலக்கப்படுகிறது. இவ்வளவு சூட்சுமமான அமைவை மிகச் சாதாரணமாக ஜோதிட அறிவை மட்டும் கொண்டு அறிந்து கொள்ள முடியாது. ஜோதிடக் கலையின் ஆழ்ந்த ஞானத்தைக் கொண்டுதான் இந்த இரகசிய முடிச்சு அவிழ்க்கப்படுகிறது. இதற்கு படைப்பவனின் அருள் கருணைதான் அருள் புரிகிறது.
லக்னம் :
இதுதான் பரமாத்ம சொரூபமான ஆத்மா... தனது இருப்பான 'சத்து - சித்து - ஆனந்தம்' என்ற நிலையில், தனது 'சித்தம்' என்ற சித்தத்தில் ஒரு ஜீவனின் பிறப்பிற்கு உயிரூட்டத்தை அளிக்கும் மூலமாக இருக்கிறது. இந்த ஆத்மாவின் மூலத்தில்தான்... ஜீவன் தனது இருப்பையும்... வாழ்வையும் கொண்டிருக்கிறது
ஜீவனின் பிறப்பிற்கு மூலமாக இருக்கும் ஆத்மா... அதன் கர்ம வினைகளை அனுபவிக்கும் வாழ்விற்கும்... அதன் அடுத்ததப் பிறவிகளுக்கும்... 'சாட்சியாக' இருக்கிறது.
பூர்வம் :
ஜீவனின் பிறப்பிற்குக் காரணம்... அதன் கர்ம வினைகள்தான். ஒரு ஜீவன் தன் மொத்தப் பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள கர்ம வினைகளின் தொகுப்பை 'சஞ்சித கர்மா' என்றும்... இந்தப் பிறவிக்கு அது அனுபவிப்பதற்காகக் கொண்டு வரும் வினைகளின் தொகுப்பை 'பிராரப்த கர்மா' என்றும்... இந்தப் பிறவிகளில் அனுபவித்துச் சேர்க்கும் வினைகளின் விளைவுக்கான புண்ணிய - பாப வினைகளின் தொகுப்பை 'ஆகாமிய கர்மா' என்றும் குறிப்பிடுகிறது வேதம்.
இந்த பிராரப்தக் கர்மாவைக் குறிப்பிடும் பாவமாக அமைவதுதான் பூர்வம் என்ற பூர்வ புண்ணிய ஸ்தானம்.
பாக்கியம் :
இந்தப் பிறவியில் தான் கொண்டு வந்திருக்கும் பூர்வ புண்ணிய வினைகளான... 'பிராரப்த கர்மாவை'... இந்த ஜீவன் எவ்வாறு தனது வாழ்நாளில் அனுபவிக்கிறது... ? என்ற அனுபவங்களைத்தான்... இந்த பாக்கியம் என்ற பாக்கிய ஸ்தானம் விவரிக்கிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment